ஸ்பாஞ்ச் கேக்.
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு- மைதா மாவு- ஒன்றேகால் கப்
- சமையல் சோடா -கால் டீஸ்பூன்
- பேக்கிங் பவுடர் -கால் டீஸ்பூன்
- உப்பு -அரை சிட்டிகை
- பட்டர் -அரை கப்
- சர்க்கரை -முக்கால் கப்
- முட்டையின் மஞ்சள் கரு மட்டும் -ஒன்று
- முட்டை (வெள்ளை மற்றும் மஞ்சள் கருவுடன்) ஒன்று
- வெனிலா எசன்ஸ் -ஒரு டீஸ்பூன்
- ஹெசல் நட் எசன்ஸ் -ஒரு டீஸ்பூன் (தேவையென்றால்)
- தயிர் -அரை கப்
- வால்நட் அல்லது பிற நட் வகைகள்- சிறிது (தேவையென்றால்)
செய்முறை :
முதலில் அவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
மைதா மாவுடன் சமையல் சோடா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் கலந்து சலித்து தனியாக வைக்கவும்.
http://tamillifeskills1.blogspot.com
பேக்கிங் பேனில் பட்டர் தடவி மைதா மாவைத் தூவி தயாராக வைக்கவும்.
பட்டரையும், சர்க்கரையையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். இரண்டும் நன்றாகக் கலந்தவுடன், முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்த்து கலக்கவும். பிறகு முட்டையை (வெள்ளை மற்றும் மஞ்சள் கருவுடன்) சேர்த்து நன்றாக கலக்கவும். அத்துடன் வெனிலா எசன்ஸ் மற்றும் ஹெசல் நட் எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும்.
பிறகு சலித்து வைத்துள்ள மைதா மாவுக் கலவையைச் சேர்த்து, சிறிது சிறிதாகத் தயிரையும் சேர்த்து கலக்கவும். நன்றாக கலந்த பிறகு கலவையை பேக்கிங் பேனிற்கு மாற்றவும். விருப்பப்பட்டால் மேலே நட்ஸ் தூவவும்.
பிறகு பேக்கிங் பேனை அவனில் வைத்து 40 நிமிடங்கள் வேக வைக்கவும். 40 நிமிடங்களுக்குப் பிறகு கேக்கை வெளியே எடுத்து, சிறிய ஸ்பூன் அல்லது கத்தியை கேக்கின் உள்ளே விட்டுப் பார்க்கவும். கேக் நன்றாக வெந்திருந்தால் ஸ்பூன் அல்லது கத்தியில் மாவு ஒட்டாமல் வெளியே வரும்.
சூடான கேக்கை 10 நிமிடங்கள் பேக்கிங் பேனிலேயே வைத்து, பிறகு ஒரு தட்டில் கவிழ்த்து ஒரு கரண்டியால் மெதுவாகத் தட்டவும். இப்போது தட்டில் உங்களுக்காக ஸ்பாஞ்ச் கேக் தயாராக இருக்கும்
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...