Tuesday, 15 November 2016

மருத்துவ குறிப்புக்கள்.

பெண்களின் மார்பகத்தை பெரிதாக்க இயற்கை வழிகள்.



பெண்களுள் சிலருக்கு மார்பகம் மிகவும் சிறியதாக இருக்கும். இதனால் அவர்கள் சற்று அழகில்லாமல் இருப்பதாக வருத்தப்பட்டு, அதனை பெரிதாக்க சர்ஜரி மற்றும் மாத்திரைகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதிக செலவழித்து மார்பகங்களை பெரிதாக்குவதற்கு, ஈஸியாக இயற்கை முறையில் பெரிதாக்கலாம்.


மார்பகத்தை பெரிதாக்க பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஒரு முறை என்னவென்றால் அது உடற்பயிற்சி தான். நிச்சயம் உடற்பயிற்சி செய்தால், அதிலும் மார்பகத்திற்கு ஏற்ற உடற்பயிற்சியை செய்தால், கண்டிப்பாக அதிகரிக்கும். அந்த உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது, ஒரு சில உணவுகளை உண்டால் தான், மார்பகத்தில் இருக்கும் திசுக்கள் நன்கு வளர்ச்சி அடையும். மார்பகத்திற்கு மசாஜ் செய்தால் கூட மார்பகத்தின் அளவு அதிகரிக்கும்.


ஆம், மார்பகங்களை மசாஜ் செய்வதன் மூலம் மார்பகங்களை பெரிதாக்கலாம். மேலும் அதற்கென்று பல்வேறு மசாஜ்களும் உள்ளன. அந்த மசாஜ்களை எப்படி செய்வதென்று கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து முயற்சி செய்து பயன் பெறுங்கள்.


இந்த பிரச்சனை வருவதற்கு காரணம் உடலில் சுரக்கும் ஹார்மோன், உடலுக்குத் தேவையான அளவு சுரக்காதது தான். மேலும் மார்பகம் சிறிதாக இருப்பதற்கு, உடலில் டெஸ்ட்ரோஜெனின் உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருப்பதும், மார்பகத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. ஆகவே அதனை கட்டுப்படுத்த உடலில் ஈஸ்ட்ரோஜெனின் அளவை அதிகரித்து, டெஸ்ட்ரோஜெனின் உற்பத்தியை
http://tamillifeskills1.blogspot.com
குறைக்கும் உணவுகளை சாப்பிட்டால், நல்ல வளர்ச்சியை காண முடியும். அதுமட்டுமல்லாமல், சில புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்டாலும் நல்ல பலன் கிடைக்கும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!



தானியங்கள்.

தானியங்களில் பார்லி, ப்ரௌன் அரிசி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிட்டால், மார்பகத்தின் அளவு அதிகரிக்கும்.



பால் பொருட்கள்.

பால் பொருட்களான பால் மற்றும் தயிரில் அதிகமான அளவில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், மார்பகம் பெரிதாவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.




பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்.

பீன்ஸ், பட்டாணி, சுண்டல், பருப்பு வகைகள் போன்றவற்றில் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜென் நிறைந்துள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலும் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.



சிக்கன்.

சிக்கனில் ஈஸ்ட்ரொஜெனின் அளவு அதிகமாக உள்ளது. ஆகவே இதனை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால், மார்பகத்தின் அளவு இயற்கையாக அதிகரிக்கும்.



பச்சை காய்கறிகள்.

காய்கறிகளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதனை சாப்பிடுவதால், மார்பகத்தில் உள்ள திசுக்கள் நன்கு வளர்ச்சி அடைந்து, மார்பகத்தின் அளவு அதிகரிக்கும். பீட்ரூட், கீரை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய் மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.



புரோட்டீன் உணவுகள்.

புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், மார்பகத்தின் அளவு அதிகரிக்கும். அதிலும் முட்டை, மீன், இறைச்சி மற்றும் பால் போன்றவற்றில், இந்தச் சத்து பெருமளவில் உள்ளது.



பெர்ரி.

பெர்ரிப் பழங்களான செர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பழங்களில் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜென் அடங்கியுள்ளது. இதனை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மார்பகத்தில் அளவு அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...