Monday, 21 November 2016

மொழிகள் பல கற்போம் ஆங்கிலம் பகுதி=1

பாடம்-1

மொழி-ஆங்கிலம்.

2016/11/12



ஆங்கில எழுத்துக்கள் பற்றியும் அவற்றை வைத்து சொற்கள் உருவக்கப்படுவதைப் பற்றியும் பார்ப்போம்.


ஆங்கில அகரவரிசையில் உயிர் எழுத்துக்கள் மொத்தம் ஐந்து. அவையாவன

*A E I O U*

இவை ஐந்தும் ஆங்கிலத்தில் வவ்வல்ஸ் *(VOWELS)* என அழைக்கப்படுகிறது.


ஆங்கில அகரவரிசையில் மெய்யெழுத்துக்கள் மொத்தம் இருபத்தொன்று. அவையாவன

*B C D F G H J K L M N P Q R S T V W X Y Z*

இவை இருபத்தொன்றும் ஆங்கிலத்தில் *கான்ஸனன்ட்(CONSONANTS)* என அழைக்கப்படுகிறது.


ஆங்கில உயிர் எழுத்துக்கள் ஐந்து ஆங்கில மெய்யெழுத்துக்கள் இருபத்தொன்று மொத்தம் இருபத்தாறு அவையாவன

*A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z*

*அரை உயிர் 2 -Y,W*

ஆங்கில எழுத்துக்களை ரோமன் எழுத்துக்கள் என்பர்.

மற்றும் ஆங்கில பாஷையில் பெரிய எழுத்துக்கள் *(Capital Letters)* என்றும்,சிறிய எழுத்துக்கள் *(Small Letters/ Simple Letters)* என்றும் இரு வகைகள் உள்ளன.

*small letters/simple letters*

  *a b c d e f g h I j k l m n o p q r s t u v w x y z*


*சொற்கள் » WORDS*


ஓர் எழுத்து தனித்து நின்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களோடு சேர்ந்து நின்று பொருளைத் தருமாயின் அது சொல் (Word) எனப்படும்.


ஓர் எழுத்து தனித்து நின்று பொருள் தரக்கூடியவை:

Words (சொற்கள்)
Meaning(பொருள்)

*A-ஒரு
*I-நான்

இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து நின்று பொருள் தரக்கூடியவை சில:

An-ஓர்
As-போல்
At-இல்
Be-இரு
By-ஆல்
Do-செய்
Go-போ
In-உள்ளே,இடத்தில்
It-அது
Me-எனக்கு
My-என்னுடைய
No-இல்லை
Of-உடைய
Up-மேலே
We-நாம்

*மாற்றுப் பெயர்ச்சொல் பிரதி பெயர்ச்சொல் PRONOUN*

மாற்றுப்பெயர்ச்சொல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே

*FIRST PERSON SINGULARமுதலாம் நபர் (தன்மை) ஒருமை*

I-நான்
ME-என்னை
MY/MINE-என்னுடைய/ என்னுடையது

*FIRST PERSON PLURALமுதலாம் நபர் (தன்மை) பன்மை*

WE-நாம்/ நாங்கள்
OUR / OURS-நம்முடைய (எங்களுடைய) / நம்முடையது (எங்களுடையது)

*SECOND PERSONஇரண்டாம் நபர் (முன்னிலை)*
http://tamillifeskills1.blogspot.com

YOU-நீ / நீங்கள் / உன்னை / உங்களை
YOUR-உன்னுடைய / உங்களுடைய
YOURSஉன்னுடையது/ உங்களுடையது

*THIRD PERSON SINGULARமூன்றாம் நபர் (படர்க்கை) ஒருமை*

HE-அவன்
SHE-அவள்
IT-அது
HIM-அவனை
HER-அவளை/அவளுக்கு
HIS-அவனுடைய
HERS-அவளுடையது
ITs-அதனுடையது


*THIRD PERSON PLURALமூன்றாம் நபர் (படர்க்கை) பன்மை*

THEY-அவர்கள் / அவைகள்
THEM-அவர்களை / அவைகளை
THEIR-அவர்களுடைய / அவைகளுடைய
THEIRS-அவர்களுடையது / அவைகளுடையது


*வழங்கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் மாதிரி கேள்வி பதில்கள் :*


Question 1:
கேள்வி 1 :
Lists vowels.
வவ்வல்ஸ்-ஐ பட்டியலிடுக.

Answer:
விடை : a , e , i , o , u

~~~~~~~~~~~~~~~~~~

Question 2:
கேள்வி 2 :
What means by first person singular?
முதலாம் நபர் ( தன்மை) ஒருமை என்றால் என்ன?

விடை :
First person singular refers to speaker or writer and refers to one person only.
முதலாம் நபர் (தன்மை) ஒருமை என்றால் பேசுபவரையோ எழுதுபவரையோ குறிக்கும். அவர் ஒருவராக இருப்பார்.

English Grammar Today


Lesson 1: Personal Pronouns ( இடம்)

 i (  நான் )
#refer to speaker or writer
பேசுபவர் அல்லது எழுதுபவரைக் குறிக்கும்.                                                    ( தன்னிலை )

#singular ( ஒருமை )

Example sentences:
எடுத்துக்காட்டு
வாக்கியங்கள் :

1) I am fine.
    நான் நலம்.

2) I am twenty years old.
    என் வயது இருபது.

3) I live in Malaysia.
    நான் மலேசியாவில்  
    வசிக்கிறேன்.

4) I am a teacher.
    நான் ஓர் ஆசிரியர்.

5) I am reading a book.
    நான் புத்தகம்
    படிக்கின்றேன்.

6) I walk to school.
    நான் பள்ளிக்கு நடந்து
    செல்வேன்.


7) My friends and I went to
     zoo yesterday.
     நேற்று நானும் என்
     நண்பர்களும்
     மிருகக்காட்சி
     சாலைக்குச்
     சென்றோம்.

(   பலர் பேசும்போது
My friends and me
என்று பயன்படுத்துகின்றனர்.
அது இலக்கணப் பிழை).

# I  சில இடங்களில் தனித்து நிற்பதும் சில இடங்களில் I am  என்றும் வருகின்றது. இது குழப்பம் தரலாம்.

# I -  குப் பிறகு verbs
(வினைச்சொல்)  வருமாயின் I என்று தனித்து தான் எழுத வேண்டும்.

# verbs (  வினைச்சொல்)
தவிர்த்து ஏனைய சொல்  வருமாயின் I am என்று எழுதுதல் வேண்டும்.

me - நான், எனக்காக,
        என்னால், என்னை

# refer to speaker or writer
    பேசுபவர் அல்லது
    எழுதுபவரைக் குறிக்கும்.
    ( தன்னிலை )

# singular ( ஒருமை )
   
   ( இடம் மற்றும்
     வாக்கியத்தில்
     வரும்
     பொருளுக்கேற்ப
     நான், எனக்காக,
     என்னால், என்னை
     ஆகியவற்றில்
     ஏதேனும் ஒன்று
     பொருந்தும் ).

 Example sentences :

எடுத்துக்காட்டு வாக்கியங்கள் :


1) It's me.
    அது நான் தான்.
     

2) Helen asked me to get
    some milk.
    ஹலன் என்னைப் பால்
    கொண்டு வருமாறு
    கேட்டுக் கொண்டாள்.

3) It's made by me.
    அது என்னால்
    செய்யப்பட்டது.

4) Thanks for everything
     you did for me.
     எனக்காக நீ செய்த
     அனைத்திற்கும் நன்றி.

# வாக்கியத்தில் me என்பது பொருளுக்கேற்ப
தமிழில் நான், எனக்காக, என்னை, என்னால் என்று மாறுபட்டிருப்பதைக் கவனிக்கவும்.
http://tamillifeskills1.blogspot.com

he  - அவன்/ அவர்

##He என்பது 'அவன்' அல்லது 'அவர்' என வரும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

# refer to boy
   ஆணைக் குறிக்கும்.

# singular = ஒருமை

# third person pronouns
    படர்க்கை
( third person pronouns refer to third person who is not participate in a conversation).
( பேசுபவர், கேட்பவரைத் தவிர்த்து மற்றப்பெயர்கள் படர்க்கை எனப்படும்).

Example sentences :
எடுத்துக்காட்டு
வாக்கியங்கள் :

1) He is a doctor.
    அவர் ஒரு மருத்துவர்.

2) He is my friend.
    அவன் என் நண்பன்/
    தோழன்.

3) He drinks milk.
    அவன் பால் குடிப்பான்.

4) He bought me a book.
    அவர் எனக்குப் புத்தகம்
    வாங்கி தந்தார்.

5) He is waiting for me.
    அவன்/ அவர் எனக்காக
    காத்துக்
    கொண்டிருக்கின்றான்.
    (ர்).

## ஆங்கிலத்தில் he என்பதற்கு அவன் அல்லது அவர் என்றும் வரலாம். சில வேளைகளில் இரண்டும் பொருந்துமாயினும், வாக்கியங்களைக் கவனிக்கவும். வயதில் மூத்தவர் என விளங்குமாயின், அவர் என்று மொழியாக்கம் செய்தல் சிறப்பு.


she  - அவள்/ அவர்

##She என்பது 'அவள்' அல்லது 'அவர்' என வரும் என்பதைக் கருத்தில் கொ,ள்ளவும்.

# refer to girl.
   பெண்ணைக் குறிக்கும்.

# singular = ஒருமை

# third person pronouns
    படர்க்கை
( third person pronouns refer to third person who is not participate in a conversation).
( பேசுபவர், கேட்பவரைத் தவிர்த்து மற்றப்பெயர்கள் படர்க்கை எனப்படும்).

Example sentences :
எடுத்துக்காட்டு
வாக்கியங்கள் :

1) She is a teacher.
    அவர் ஒரு மருத்துவர்.

2) She is my mother.
    அவன் என் அம்மா.

3) She plucks a flower.
    அவள் பூப்பறித்தாள்.

4) She is cooking.
    அவள்/ அவர்
    சமைக்கின்றார்.

## ஆங்கிலத்தில் she என்பதற்கு அவள் அல்லது அவர் என்றும் வரலாம். சில வேளைகளில் இரண்டும் பொருந்துமாயினும், வாக்கியங்களைக். வயதில் மூத்தவர் என விளங்குமாயின், அவர் என்று மொழியாக்கம் செய்தல் சிறப்பு.

it -  அது

# refers to things & animals.
    பொருட்கள் மற்றும் மிருகங்களைக் குறிக்கும்.
(அஃ,றிணை)

# singular = ஒருமை

# third person pronouns
    படர்க்கை
( முன்னர் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து விளக்கம் பெறவும்).

Example sentences:

எடுத்துக்காட்டு வவாக்கியங்கள்


1) It is a cat.
    அது ஒரு பூனை.

2) It is a car.
     அது ஒரு மகிழுந்து.

3) It is a book.
    அது ஒரு புத்தகம்.

*We / us
நாம்/ நாங்கள், எங்கள்

# refer to third person pronouns
# படர்க்கை

# plural - பன்மை

# We use "we" and "us" to refer different groups of people but always including the speaker.
# நாம்/நாங்கள் மற்றும் எங்கள் மாறுபட்ட குழுவினைக் குறிக்க பயன்படும். அவை பேசுபரையும் தன்னுள் அடக்கியுள்ள சொற்கள்.

#we and us can refer to the speaker and the listener.
# நாங்கள் மற்றும் எங்கள் பேசுபவரையும் கேட்பவரையும் குறிக்கும்.

              Or/அல்லது

#we and us can refer to the speaker and other people but not the listener.
# நாங்கள்/எங்கள் பேசுபவரையும் மற்றவர்களையும் குறிக்கும். கேட்பவரைத் தவிர்த்து.

              Or/அல்லது

#we and us can refer to the people in general including the speaker.
நாங்கள்/ எங்கள் பொதுவானவர்களையும் பேசுபரையும் குறிக்கும்.

Example sentences:
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

1) We could go and see a film tonight. What do you think?
( refer to the speaker and listener)
இன்றிரவு நாம் படம் பார்க்க செல்லலாம். நீ என்ன நினைக்கின்றாய்?
( பேசுபவரையும் கேட்பவரையும் குறிக்கும்)

2) Gerald asked us if we'd drive to London and get you.
( refer to the speaker and others but not listener)
நாம் லண்டனுக்கு வாகனத்தை ஓட்டிச் சென்று உன்னைச் சந்திக்க போகலாமா?  என்று ஜெரல்ட் எங்களிடம் கேட்டார்.
( பேசுபரையும் மற்றவரையும் குறிக்கும். கேட்பவரைத் தவிர்த்து)
http://tamillifeskills1.blogspot.com

3) There are changes we should all make.
( refer to the speaker, listener and all other people)
சில மாற்றங்களை நாம் எல்லாரும் செய்ய வேண்டும்.
(பேசுபவர், கேட்பவர் மற்றும்  குறிக்கும்)



*they and them
அவர்கள்/ அவை

# plural - பன்மை

# third person pronouns
    படர்க்கை

# they and them refer to specific groups of people, things and animal.
# _அவர்கள்_ குறிப்பிட்ட சிலரையும் பொருட்களையும் மிருகங்களையும் குறிக்கும்.

Example sentences:

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:


1) They are going to school.
     அவர்கள் பள்ளிக்குச்
     செல்கின்றனர்.
   
2) Can you tell them to be
     quite?
     அவர்களை அமைதியாக
     இருக்கும்படி நீ
     சொல்கின்றாயா?

3) They are my books.
     அவை என் புத்தகங்கள்.

4) Did you see my pencils?
     I left them.
     நீ என் பென்சில்களைப்
     பார்த்தாயா?
     நான் அவைகளைத்
     தவற விட்டு விட்டேன்.

5) They are my cats.
     அவை என் பூனைகள்.

# _They_ and _them_ also refer to institutions, authorities and groups of people in general.
#_ அவர்கள்_ மற்றும் _அவை_ நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொதுவானவர்களையும் குறிக்கும்.

Example sentences:

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:


1) I heard they're going to publish a new book.
அந்த நிறுவனம் புதிய  புத்தகத்தை வெளியிடப் போவதாக நான் கேள்விப்பட்டேன்.

2) They're opening the new school tomorrow. அதிகாரிகள் நாளை புதிய பள்ளியைத் தொடங்கி வைக்கயுள்ளனர்.

பகுதி-2 அடுத்த வாரம் தொடரும்...

BY- INSTRUCTORS OF ENGLISH

Name- Halisha
From- srilanka (kinniya)

Name- Riyasha
From-Srilanka (kalpity)



ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com

1 comment:

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...