Monday, 28 November 2016

சமயல் குறிப்புகள்

       அசத்தலான சமயல் குறிப்புகள்.....!!!




❄ நெய் சேர்க்காமல் பொட்டுக்கடலை உருண்டை செய்ய, மூன்று கப் பொட்டுக்கடலை, ஒரு கப் சர்க்கரை, ஐந்தாறு ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். பிறகு பொடித்ததை கொஞ்சம் எடுத்து இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் பால் தௌத்து உருண்டை பிடித்தால் சுவையாக இருக்கும்.

❄ புளி பேஸ்ட் செய்து ஐஸ் கியுபில் வைத்தால் புளி குழம்பு, வத்தல் குழம்பு, ரசம் ஆகியவற்றை செய்யும் போது எடுத்து பயன்படுத்தலாம்.

❄ வறுத்த வேர்க்கடலைப் பருப்பை மிக்ஸியில் போட்டு பொடித்து, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது வேர்க்கடலை பொடியை தூவி இறக்கினால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இதை பொரியல், ரோஸ்ட் வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

❄ செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பை நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும்.
http://tamillifeskills1.blogspot.com

❄ குடமிளகாயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கி, அதன் உட்பகுதியில் ஏதாவது காரமில்லாத சட்னியைத் தடவி, பஜ்ஜி போடலாம். ருசியாக இருக்கும்.

❄ இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார்!

❄ மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக்காமல் இருக்கும். தயிர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.

❄ வெங்காயத்தில் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

❄ மண் பாத்திரத்தில் செய்யும் உணவு சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.

❄ காய்கறிகளின் தோலின் அடிப்புறத்தில் தான் அதிகமான விட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றை நாம் சீவி வீணாக்காமல், துவையல் செய்து சாப்பிடுவதால் சத்துக்கள் கிடைக்கும். தோல் துவையலின் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
http://tamillifeskills1.blogspot.com

❄ பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

❄ பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீர்pல் கழுவினால் துர்நாற்றம் இருக்காது.

❄ பறங்கிக் கொட்டைகளை வீணாக்காமல் வெயிலில் உலர்த்தி பருப்பை உரித்து நெய்யில் வதக்கி சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு சாப்பிடலாம்.

❄ சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல், முளை வராமல் இருக்கும்.

❄ வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத்துணியை போட்டு மூடி வைத்தால் காய்கறிகள் வாடாமல் இருக்கும்.

❄ கறிவேப்பிலை செடிக்கு புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டு குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

❄ பச்சை கொத்தமல்லியையும், கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.
http://tamillifeskills1.blogspot.com

❄ கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

❄ வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத்துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.


இது போன்ற மேலும் பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills mobile Android Application - யை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.

👇👇👇
https://www.whatstools.com/d/bvnkr_agbbznjwar

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...