Monday, 21 November 2016

சமயல் குறிப்புகள்

              கீரை சமோசா




🌾 பொன்னாங்கண்ணிக்கு பொன்னாங்காணி, அகத்தியர் கீரை, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. சீமை பொன்னாங்கண்ணிதான் சிவப்பு பொன்னாங்கண்ணி என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் தோட்டத்தில் இதை வளர்க்கலாம். பூந்தொட்டியில் கூட வளர்க்கலாம்.
http://tamillifeskills1.blogspot.comநன்மைகள் :

🌾 ஞாபக மறதி குணமாக
🌾 ரத்த சுத்ததிற்கு
🌾 கண்பார்வைக் கோளாறுகள் நீங்க
🌾 பித்தத்தைக் குறைக்க
🌾 தோல் வியாதிகள் குணமாக

தேவையானவை :

🌾 மைதா மாவு - 250 கிராம்,
🌾 பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை - இரண்டு கைப்பிடி அளவு,
🌾 நறுக்கிய வெங்காயம் - 1 1ஃ2 கப்,
🌾 கோஸ் துருவல் - 4 1ஃ2 டீஸ்பூன்,
🌾 கேரட் துருவல் - 2 1ஃ2 டீஸ்பூன்,
🌾 உருளைக்கிழங்கு - மூன்று,
🌾 எண்ணெய் - 300 மில்லி,
🌾 மசாலாத்தூள், தூள் உப்பு - தேவையான அளவு.
http://tamillifeskills1.blogspot.com


செய்முறை :

🌾 மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

🌾 வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொன்னாங்கண்ணிக்கீரை, வெங்காயம், கோஸ் துருவல், கேரட் துருவல் ஆகியவற்றை வதக்கவும்.

🌾 உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வதக்கிய கீரை மற்றும் காய்களுடன், மசித்த உருளைக்கிழங்கு, மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

🌾 மைதா மாவை, சின்ன உருண்டைகளாக உருட்டி, சிறிய வடிவில் இட்டு உள்ளே கீரை - வெஜிடபிள் உருண்டைகளை வைத்து சமோசா வடிவில் மூடவும்.

🌾 கடாயில் எண்ணெயை காய வைத்து, சமோசாக்களை பொரித்து எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

🌾 இப்போது உண்பதற்கு சூடான சுவையான கீரை சமோசா தயார்.


இது போன்ற பல பயனுள்ள தகவல்களை பெற்றிட tamil life skills  எனும் எமது mobile android app ஐ installed செய்யுங்கள்

👇👇👇👇

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...