Sunday, 13 November 2016

கவிதை தொகுப்புகள்

😱 நாவீன கொடூரம்....😱





மதம் உரைக்கும் அறங்கள்
மறந்து
வரையறை மீறி
ஆண் பெண் கலந்து
நாகரீகம் என நலிந்து பேசி
காதல் எனும் பெயரில் தகாத கலப்பு கொண்டு
அற்ப சுகத்துக்காய் கற்பை
விலைப் பேசி
கடைசியில் கருவில் உயிர் சுமந்து
பெற்றெடுத்து தெருக் குப்பையில் வீசிச் செல்வீர்களே..
அதுதான்...

பிஞ்சு முளையில்
நஞ்சை விதைத்து
அனாதைகளாய் அலைய
விடுகிறீர்களே அதுதான்...

சிட்டுக் குருவியை பருந்திடம் பத்திரப்படுத்த
கொடுப்பது போல்
பெற்றெடுத்த மொட்டை
கயவர்கள் கையில் கொடுப்பீர்களே
அதுதான்...

அடையாளம் இல்லா சந்ததிகளை சமூகத்தில்
அறுவடை  செய்வீர்களே
அதுதான்..

மானம் போகும் என்பதற்காய்
மனிதம் இழந்து கழுத்து நெரித்துக் கொல்வீர்களே
அதுதான்

இதயம் துடிக்கும் முன்
இரக்கமே இல்லாமல்
கருவிலே சிதைப்பீர்களே
அதுதான்..

உயிர் உற்பத்திக் கருவறையை கல்லறையாய்  மாற்றுகிறீர்களே
அதுதான்....
இன்றைய நவீனக் கொடூரங்கள்.......

*புத்தளத்துக் கவி*
✍🏽✍🏽 *நிஸ்னி*✍🏽✍🏽

by- நிஸ்னியா
Frm- கொத்தாந்தீவு புத்தளம்

உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்

👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை

Email- tamillifeskills@gmail.com


No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...