Tuesday, 29 November 2016

கவிதை தொகுப்பிலுக்கள்.

மறக்க முடியாத உன்

               நினைவுகள்........


உன்னை நினைத்து
நினைத்துத்தான்
நித்தமும்
கலங்குகிறேன்…..
எதிரியே
தெரியாத
தேசத்தில்…..யுத்தம்
புரிகிறேன்…..!!

நான் மடிந்து
போனாலும்
உன்நினைவுகள்
முடிந்து
போகாது…..மீண்டும்
மீண்டும்
நினைவலைகளாய்
நெஞ்சில்
வாழும்……!!

மலரும்
பூக்கள்
எல்லாம்
மாலை ஆவதில்லை…..
உள்ளத்தில்
உதித்த
காதல்
எல்லாம்…..கரை
சேர்ந்ததில்லை……மாறாக
கவலைகளையே
தந்து
தொலைக்கிறது……!!

என் சிந்தனையில்
நிலைத்தவனே…..
என்னை
சிதையில் போட்டாலும்
சீக்கிரம்
உன்னைத்
தொலைக்க
மாட்டேன்……!!

நம்மை
மறந்து
நாம்
வாழ…..இந்த
ஜென்மத்தில்
எங்கேயும்
இடமில்லை…..
அப்படியும்
மறந்தால்
இந்த
ஜென்மத்திலேயே
நாம்
இல்லை…..!!

காதலின்
வலிகளோடு
ஒருசில
வரிகள்……
பேனா மை
கொண்டு அல்ல…..
என் கண்ணீரின்
ஈரம் கொண்டு……!!


 ✍🌹நிந்தவூர் கவி🌹✍
 ❤🌹💝பாத்திமா சப்னா💝🌹❤

by- பாத்திமா சப்னா
Frm- நிந்தவூர் ஸ்ரீ லங்கா

உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்

👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை

Email- tamillifeskills@gmail.com


🔃மேலும் பல............

 இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.

 👇👇👇
Now Download App

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...