Sunday, 13 November 2016

சமயல் குறிப்புகள்

                   சுவையாக சமைத்திட டிப்ஸ் !!!


   *வேக வைத்த முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டுமானால், வேக வைத்த முட்டையை அதன் ஓடுடன் குளிர்ந்த தண்ணீருள்ள பாத்திரத்திற்குள் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

*மீன் எண்ணெயில் உள்ள இபிஏ, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

*நெத்திலி மீன் குழம்பிற்கு கடைசியில் தான் மீனை போட வேண்டும் இல்லையென்றால் கரைந்து விடும். அதேபோல் புளி தேவைப்பட்டால் சேர்க்கலாம். இல்லையெனில் கூடுதலாக ஒரு தக்காளி பழம் சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும்.

*சாதாரண ஜலதோசத்திற்கும், காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

*எள்ளு மட்டன் குழம்பு செய்வதற்கு வேக வைத்த மட்டனை சேர்த்து பிறகு, ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளையை அதனுடன் சேர்த்தால் குழம்பு கூடுதல் சுவையாக இருக்கும்.

 *அசைவ குழம்புகள் செய்யும்போது வெங்காயம், தக்காளியை அர்pந்து போடாமல், அரைத்து போட்டால், குழம்பு கெட்டியாக இருப்பதுடன் நல்ல மணத்துடனும், ருசியாகவும் இருக்கும்.

*மட்டன்  துண்டுகள் மார்க்கெட்டில் தனியாக கிடைக்கும். இந்த மட்டன் துண்டுகளை இஞ்சி, பூண்டு, கறிமசாலா போன்ற பொருட்களை சேர்த்து வறுவல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். உடலுக்கு நல்லது.

* எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பை துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

*பாகற்காய் பொரியல் செய்யும் போதும் சிறிது கடலை பருப்பை ஊறவைத்து நைசாக அரைக்கவும். பின் இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விட்டு பாகற்காயை வதக்குகையில் இந்த மாவையும் உதிர்த்துப்போட்டு கிளறினால் பொரியல் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன் கசப்பும் குறைவாக தெர்pயும்.

*பாலுடன் இரண்டொரு நெல் மணிகளை போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.

*கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாகவும், ருசியாகவும் இருக்கும்.

*தேங்காயை வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்தால், மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்தலாம்.

*மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மை உடையது.

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*வெற்றிலை சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குழந்தைகளின் இருமலை குணமாக்கலாம்.

*காய்கறிகளில் உள்ள கசப்பை நீக்க அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.

*புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகர்pக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...