😪நான் மட்டும்........😪
நான் மட்டும் தனிமையில்
அடுத்தடுத்த மாடிகளில்
ஏதோ ஒன்னு ரெண்டு..
காற்றில் கதவடிபடுகையில்
காதில் விழா சத்தங்கள்
காலடி தடம் பட்டு கதறுகிறது..
திடீரென ஒலிக்கும் தொலைப்பேசி அழைப்புகள்
துடிக்கும் இதயத்தை
ஓர் கணம் நிறுத்துகிறது
திறந்து விட்ட மாட்டுக் கொட்டகை போல்
அறக்கப் பறக்க எல்லாம்
சென்று விட..
பேரூந்துப் பயணக் கொடுமை எண்ணி
குருட்டு தைரியத்தால்
முறுக்கிக் கொண்டு நின்ட
நான் மட்டும்..
அருகிலிருக்கும் குளியலறை செல்வதற்கே
அஞ்சி..
கீழ்மாடி செல்கிறேன்
நண்பிகளின் அறைக்கு...😪😪😪😪😪😪😪😪
*புத்தளத்துக்கவி*
✍🏽✍🏽 *நிஸ்னி*✍🏽✍🏽
by- நிஸ்னியா
Frm- கொத்தாந்தீவு புத்தளம்
உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்
👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை
Email- tamillifeskills@gmail.com
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...