பீட்ருட் அல்வா..
அனேகமானோருக்கு அல்வா மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டமாக இருக்கும். அத்தகைய அல்வாவில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பீட்ரூட் அல்வா. பீட்ரூட் கண்களுக்கு மட்டுமின்றி, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கவும் உதவும். ஆனால் பலருக்கு பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காது. குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்காது.
ஆகவே உங்கள் குழந்தையை பீட்ரூட் சாப்பிட வைக்க சிறந்த வழி, அதனைக் கொண்டு அல்வா செய்து கொடுப்பது தான். இங்கு பீட்ரூட் அல்வாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 4
பால் - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - சிறிது
உலர் திராட்சை - சிறிது
பாதாம் - சிறிது
கண்டென்ஸ்டு மில்க் - தேவையான அளவு (விருப்பமிருந்தால்)
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை கழுவி, தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, பாதாம் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வறுத்து, பின் அதனை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்கி, பின் அதில் பால் சேர்த்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட்டு, பின் தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கலவை கெட்டியாகும் வரை நன்கு பிரட்டி இறக்கி, அதில் முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை தூவி பரிமாறினால், பீட்ரூட் அல்வா ரெடி!!!
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...