பெண்களுக்கான சமயல் அறை குறிப்புகள்...
*சில சமயம் இட்லி மாவு உளுந்து விளுது காணாமல் கல் மாதிரி இருக்கும், மாவில் 2 ஸ்பூன் நல்லெண்ணை விட்டு கலந்து பின் இட்லி வார்த்தால் மெதுவாக சுவையாக இருக்கும்.
*பால் இளஞ் சூடாக இருக்கும் போது உறை ஊற்றினால் தான் தயிர் நன்றாக தோயும், சுவையும் இருக்கும்.
*பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி ரவையை சேர்த்துப் பிசைந்தால் பூரி உப்பலாக இருக்கும்.
*தேங்காயை சிறுதுண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.
* பால் தயிர் ஆடையை தனியே எடுத்து குளிர் சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்துக் கடைந்தால் சில நிமிடங்களில் வெண்ணை உருண்டு நன்றாக வரும்.
*தோசைக்கு, இட்லிக்கும் ஆட்டும்போது ஒரு வெண்டக்காய் சேர்த்து ஆட்டினால் இட்லி பூப்போல இருக்கும்.
*பாத்ரூமில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் வைத்தால் பாத்ரூம் மணம் வீசும்.
* பற்கள் மஞ்சளாக இருந்தால் எலுமிச்சை தோலுடன் சிறிது உப்பு கலந்து தேய்த்துவரின் பல் வெண்மையாகி விடும்.
* தேமல் உள்ள இடத்தில் பூண்டும், வெற்றிலையும் சேர்த்து அரைத்து தடவி வந்தால் தேமல் மறைந்து விடும்.
*பட்டுப் புடவையில் கறை ஏற்பட்டால் சிறிது யூக்கலிப்டஸ் தைலம் தடவினால் கறை போய் விடும்.
* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.
* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்.
* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.
* தேங்காயை சரிபாதியாக உடைக்கும் முன்பு தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...