Monday, 28 November 2016

மொழிகள் பல கற்போம் ஆங்கிலம் பகுதி=03

பகுதி-03

பாடம்-ஆங்கிலம்

2016/11/26



       Tenses-காலம்


ஒரு செயல் எப்பொழுது நடைபெற்றது என்பதை கூறும் சொல் Tense எனப்படும்.மூன்று வகையான காலம் உள்ளது

1. நிகழ்காலம் (Present Tense)

2. இறந்த காலம் (Past Tense)

3. எதிர்காலம் 
(Future Tense)

Example:

* நிஷான் படிக்கிறார்.

* நிஷான் படித்தார்.

* நிஷான் படிப்பார்.

நிஷான் படிக்கிறார் இதில் இப்பொழுது நிஷான் படிப்பதை குறிக்கிறது. அதாவது நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு செயலை குறிக்கிறது. எனவே இது Present Tense ஆகும்.

நிஷான் படித்தார். இதில் நிஷான் படித்தது நேற்றோ அல்லது அதற்கு முன்போ நடந்து முடிந்ததை குறிப்பிடுகிறது. இவ்வாறு கடந்த காலத்தில் நடந்து முடிந்த ஒரு செயலை சொல்வது *Past Tense* ஆகும்.


நிஷான் படிப்பார் இதில் பாலாவுக்கு நாளையோ அல்லது அதற்கு பிறகோ எப்பொழுது நேரம் கிடைக்குமோ அப்பொழுது செய்யும் செயலைச் சொல்வதால் இது Future Tense ஆகும்சில செயல்கள் வழக்கமாக நடைபெற்று வரும், சில செயல்கள் நடந்து முடிவடைந்திருக்கும் ஒரு சில செயல்கள் இனிமேல் தான் நடைபெற வேண்டும் என்ற நிலையில் இருக்கும்.

இது போலவே சில செயல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி அது நேற்று நடந்து இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். இவ்வாறு கூறுவதை 4 பிரிவுகளில் பிரிக்கலாம்.

# Simple

# Perfect

# Continuous

# Perfect Continuous

இவை ஒவ்வொன்றும் காலத்திற்கு ஏற்றபடி 3 பிரிவுகளாகப் பிரியும். மொத்தம் 12 பிரிவுகளில் ஆங்கில இலக்கணத்தை பிரிக்கலாம்.

Simple Present
Tense

Simple Past
Tense.

Simple Future
Tense.

Present Perfect 
Tense.

Past Perfect Tense.

Future Perfect Tense.

Present Continuous Tense.

Past Continuous Tense.

Future Continuous Tense.

Present Perfect Continuous Tense.

Past Perfect Continuous Tense.

Future Perfect Continuous Tense.

வினைச் சொல் காலத்திற்கு ஏற்ப மாறுவதைப் போல அந்த வினையை அதாவது செயலை செய்பவருக்கு ஏற்றபடியும் மாறும்.

Exaample:

நான் விளையாடுகிறேன்

நீ விளையாடுகிறாய்.

அவன் விளையாடுகிறான்

அவர்கள் விளையாடுகிறார்கள்

 அது விளையாடியது

        வாக்கியம் (Sentence)

பல சொற்கள் சேர்ந்து வந்து ஒரு முற்றுப்பெற்ற பொருளைத்தருமானால் அது வாக்கியம் எனப்படும்.A group of words which give a complete meaning is called Sentence.

Example:

  He is studying.(அவன் படித்துக் கொண்டிருக்கிறான்)

She who is wearing a green skirt is my sister (பச்சை பாவாடை அணிந்திருக்கும் பெண் என்னுடைய சகோதரி)

       Types of Sentences

The sentences are of 4 types they are


1.Positive sentence (உடன்பாட்டு வாக்கியம்)

இது ஒரு செய்தி வாக்கியம்.

Example:

   = He is reading a newspaper(அவன் செய்திதாள் படிக்கிறான்).

   = I am playing(நான் விளையாடுகிறேன்.

2. Negative Sentence(எதிர்மறை வாக்கியம்)

இல்லை என்ற பொருள் தரும் வாக்கியம் எதிர்மறை வாக்கியம்

Example:

= He does not drink(அவன் குடிப்பதில்லை)


3.Question Sentence(வினா வாக்கியம்)

கேள்விகளை கேட்க பயன்படும் வாக்கியம்.

 yes/no question type:
சில கேள்விகளுக்கு  பதில் Yes அல்லது No என்று வர வேண்டும். அந்த மாதிரி கேள்விகளை Yes/No type question என்கிறோம்.

உனக்கு தெரியுமா? என்று யாராவது கேட்டால் தெரியும்(yes) அல்லது தெரியாது(No) என பதில் சொல்லுவோம்.

*Information Question type:

நாம் ஒருவரிடம் உனக்கு பிடிக்குமா எனக் கேட்டு அவர் பிடிக்காது எனப் பதில் சொன்னால் அவரிடம் ஏன் பிடிக்காது எனக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்பதற்கு *Question word* வேண்டும்  என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை  போன்ற சொற்களை கேள்வி சொல் *(Question word)* என்கிறோம்.இதைப் போல என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை போன்ற வார்த்தைகள் இடம்பெறும் கேள்விகளை *information question* என்கின்றோம்.

4.Exclamatory Sentence(வியப்பு வாக்கியம்)
It makes a sudden feeling

Example:

     = Vow. What a beauty!!(ஆஹா என்ன ஒரு அழகு!)

             தெரிந்து கொள்ள வேண்டிய வினாச் சொற்கள்

*What? -என்ன?

*When?எப்பொழுது?

*Where?எங்கே?

*Which?எது?

*Why?ஏன்?

*Who?யார்?

*Whom?யாரை?

*How?எப்படி?

*How far?எவ்வளவு தூரம்?

*How long?எவ்வளவு நேரம்?

*How often?எப்பொழுதெல்லாம்?

*How much?எவ்வளவு?

*How many?எத்தனை?

*To whom?யாருக்கு?

Example:

= What is your name?(உனது பெயர் என்ன?)


நிகழ்காலத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் செயலைக் குறிப்பிட simple present tense உதவுகிறது.
அலுவலகம் செல்வது,சாப்பிடுவது,பேப்பர் படிப்பது, Mail check பண்றது போன்ற வழக்கமான ,மாறாத செயல்கள் குறித்து பேசும் போது simple present tense வரும்.

🔹ஒரு வாக்கியத்தை உருவாக்க simple present tense உதவுகிறது (To make a statement)

Example:

-  He talks very fast

 - Prem likes sweets

*Simple Present Tense வாக்கியம் அமைக்கும் முறை(How to write Simple Present Tense)

🔹ஒரு செயலை Simple Present Tense ல் சொல்ல அந்த செயலை குறிக்கும் verbஐ  மட்டும் சொன்னால் போதும்.

உதாரணமாக,

 நான் கிரிக்கெட் விளையாடுகிறேன். இதில் விளையாடுவது என்னும் செயலை சொல்ல play என்ற verb இருக்கிறது.
I play cricket என்று சொல்லலாம்.

🔹ஒரு verb அதை செய்யும் நபருக்கேற்ப மாறுபடும்.

🔹Subject 3rd person singular ஆக இருந்தால் verb உடன் 'S' சேரும்.

person  singular  plural
1st        Verb         Verb
2nd       Verb         Verb
3rd        Verb+S     Verb

🔹play என்ற வினைச்சொல் personக்கு ஏற்ப மாறுவதைப் பார்க்கலாம்.

* I play -Ist person singular

* We play  - Ist person plural

* You play - 2nd person singular/Plural

* They play - 3rd person Plural

* He plays - 3rd person singular

* She plays - 3rd person singular

*  It plays -  3rd person singular.

🔹am,is,and are
The words am,is and are are the simple present forms of the verb 'be'

I -- am  
You --are
We --are
They --are
He -- is
She -- is
It -- is

Example:

- I am in the garden
we are in our bedrooms

- Our dod is black

- She is also pretty

- Computers are very expensive.

 🔹is and There are
ஒரு பொருள் இருப்பதை குறிக்க there பயன்படுகிறது.

Example:

அங்கு ஒரு மரம் இருக்கிறது எனச்சொல்ல There is a tree என்று சொல்ல வேண்டும்

🔹Singular noun ஆக இருந்தால் there உடன் is சேர்த்தும்,  plural noun ஆக இருந்தால் there உடன் are சேர்த்தும் பயன்படுத்தவும்.

Example:

- There is nothing to do when it rains

- There are cows outside

- There is a cat sitting on the bench

- There is a girl called priya in my class

🔹There மற்றும் is சேர்த்து there's என்றும் சொல்லலாம்.

Example:

- There's nothing to do when it rains

- There's a cat sitting on the bench

- There's a girl called priya in my class

🔹அங்கு இல்லை என்று சொல்ல there isn't(is not) மற்றும் there aren't(are not) என்று சொல்லலாம்

      Simple Present Tense எங்கெல்லாம் use பண்ண வேண்டும்:

* எப்பொழுதும் உண்மையாக நடக்கும் செயல்களை குறிப்பிட

- The earth goes around the sun

- We live in London.

- The sun rises in the east

- The sun sets in the west

* திரும்ப திரும்ப நடக்கும் செயல்கள் மற்றும் நம்முடைய பழக்க வழக்கங்கள் பற்றி சொல்ல(For repeated actions or habits)

- I get up at 6'oclock every day

- He usually reaches at the department at 9.00AM

- My neighbour usually practices violin at midnight.


* திட்டமிட்ட எதிர்கால செயல்களைப் பற்றி சொல்ல(To indicate a planned future action)

- My little sister starts school tommorrow

- The train leaves in 5 minutes

- Next week I go on holiday to Paris.


1.Simple Present வாக்கியங்களை Negative ஆக மாற்ற

🔹Simple Present வாக்கியங்களை Negative ஆக மாற்ற 'இல்லை' என்ற பொருள் தரும் 'not' என்ற word ம், Do,Does என்ற helping verb களைப் பயன்படுத்த வேண்டும்.

🔹3rd person singular subject வந்தால் Does என்ற helping verb ம் மற்ற அனைத்து subject க்கும் Do என்ற helping verb ம் use பண்ண வேண்டும்.

உதாரணமாக

- நான் விரும்புகின்றேன் - I like
இதை நான் விரும்பவில்லை என்று Negative ஆக மாற்ற not,do சேர்த்து *I do not like என்று சொல்ல வேண்டும்.Do மற்றும் not சேர்த்து simple ஆக don't என்றும் சொல்லலாம். I do not like என்பதை I dont like என்றும் சொல்லலாம்.

I -do
We -do
You -do
He -does
She -does
They -do
It -does


Example:

🔹Like என்பதை subject க்கு ஏற்ப எவ்வாறு எதிர்மறை வாக்கியம் ஆகிறது என பார்க்கலாம்.

* I Like tea நான் tea விரும்புகிறேன்)

* I don't like tea (நான் tea விரும்பவில்லை)

* We like tea ( நாங்கள் tea விரும்புகிறோம்)

* We don't like tea( நாங்கள் tea விரும்பவில்லை )

* You like tea(நீ/நீங்கள் tea விரும்புகிறாய்)

* You don't like tea( நீ/நீங்கள் tea விரும்பவில்லை)

* They like tea(
அவர்கள் tea விரும்புகிறார்கள்)

* They don't like tea (
அவர்கள் tea விரும்பவில்லை)

* He likes tea( அவன் tea விரும்புகிறான்)

* He doesn't like tea( அவன் tea விரும்பவில்லை)

* She likes tea( அவள் tea விரும்புகிறாள்)

* She doesn't like tea ( அவள் tea விரும்பவில்லை)

* It likes tea (அது tea விரும்புகிறது)

* It doesn't like tea (அது tea விரும்பவில்லை)

*2.Simple Present வாக்கியங்களை Questions ஆக மாற்ற :*

1.yes/no question type:

சில கேள்விகளுக்கு பதில் Yes அல்லது No என்று வர வேண்டும். அந்த மாதிரி கேள்விகளை Yes/No type question என்கிறோம்.இந்த மாதிரி கேள்விகளை கேட்க Do மற்றும் Does helping verb உதவுகிறது. இதில் helping verb subjectக்கு முன்னால் வர வேண்டும்.

Example:

* உனக்கு பிடிக்குமா?Do you like?

* உனக்கு தெரியுமா?Do you know?

* நீ போகிறாயா?Do you go?

* அது வேலை செய்கிறாதா?Doe's it work?

* அவன் வருகிறானா?Doe's he come?

* நீ கேட்கிறாயா?Do you ask?


2.Information Question:

நாம் ஒருவரிடம் உனக்கு பிடிக்குமா? எனக் கேட்க Do you like? எனக் கேட்கலாம். இது அவர் பிடிக்காது(No) எனப் பதில் சொன்னால் ஏன் பிடிக்காது? எனக் கேட்க வேண்டும்.இதைப் போலமேலும் தகவல் சேகரிக்க கேட்கும் கேள்விகளை Information question என்கிறோம்.

🔹Information qustion களை கேட்க என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை போன்ற question words தேவைப்படும்.

தெரிந்து கொள்ள வேண்டிய வினாச் சொற்கள்(Question words)
Question wordsவினாச் சொற்கள்.

🔹Information question களை உருவாக்க helping verb do/does முன்னால் question word(what,when,why,how போன்ற)சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Example

* நீ எப்பொழுது எழும்புகிறாய்?
When do you get up?

* நீ எங்கே வேலை செய்கிறாய்?
Where do you work?

* உன்னுடைய Officeக்கு எப்படி செல்கிறாய்?
How do you go to your office?

* உனக்கு எவ்வளவு பணம் வேணும்?
How much money do you want?

Note:

Work என்ற செயல் நிகழ்காலத்தில் எவ்வாறு Subjectக்கு ஏற்ப மாறுகிறது எனவும் negative, question sentence ஆக எவ்வாறு மாற்றலாம்.


                          இவ்வார பதிவிற்கான வினாக்கள்



1)What are  the types of sentences?, write a example each one?
வாக்கியங்களின் வகைகள் எவை?ஒவ்வொன்றுக்கும் உதாரணம் தருக?

2)Make sentences using these information questioning words- கீழே தரப்பட்டுள்ள
Information questioning words களை வைத்து  வாக்கியங்கள் அமைக்க.
1.whom?
2.How much?
3.Which?

3)What is the meaning of the sentence?
வாக்கியம் என்றால் என்ன?

4)Write 3 examples for simple present tense using "she", "I" ,"we"
சாதாரன நிகழ்காலத்தில் 'she','it','we' என்பனவற்றை பயன் படுத்தி உதாரணம் அமைக்க.

5) transferred to tamil
"refer to the speaker and others but not listener"தமிழில் மொழிபெயர்க்க.

6)Make 2 sentences for simple present negative form
நிகழ் கால எதிர்மறைக்கு 2 உதாரணம் அமைக்க.

பகுதி-04 அடுத்த வாரம் தொடரும்...

BY- INSTRUCTORS OF ENGLISH

Name- Halisha
From- srilanka (kinniya)

Name- Riyasha
From-Srilanka (kalpity)



ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com



🔃மேலும் பல............ 

 இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.

       👇👇👇
  Now Download App

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...