Friday, 18 November 2016

உடல் நலம்,

பெண்களை குறிவைக்கும் பித்தப்பை கற்கள்!



பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் இணைந்திருக்கும். பல்வேறு காரணங்களால் பித்தபையில் கற்கள் உருவாகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் பித்தப்பை கற்கள் வரலாம்.



பித்தப்பை என்றால் என்ன?


பித்தப்பை என்பது நமது உடலில் பேரிக்காய் வடிவம் போன்று காணப்படும் ஒரு உறுப்பு. இது கல்லீரலின் ஒரு பகுதியுடன் இணைந்து இருக்கும். 7 முதல் 12 செ.மீ. நீளம் இருக்கும். அதன் கொள்ளளவு 50 மி.மீ. இதன் மற்றொரு பகுதி வயிற்றுடன் இணைந்து இருக்கும். நாம் ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும்போதும் அதில் உள்ள கொழுப்பு சத்து, கால்சியம், தண்ணீர், பித்தநீர், உருவாகிற போது பித்தப்பை செயல்படுகிறது. இது கல்லீரலில் இருந்து ஒரு மணிநேரத்தில் சுரக்கும் 40 மி.லி. பித்தநீரை சேகரிக்கும் பணியை செய்கிறது.



எதனால் உருவாகிறது?


பித்தப்பையில் சுரக்கும் உமிழ்நீரில் ஏற்படும் வேதியியல் மாற்றத்திற்கு ஏற்ப கட்டிகள் உருவாகலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பித்தப்பை கற்கள் உருவாகின்றன. இதில் பலவகை உண்டு. உதாரணமாக கொழுப்பு கற்கள், கால்சியம், பித்தநீர் கலந்த கற்கள் ஆகும்.


பொதுவாக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது பெண்களைத்தான் அதிகம் தாக்குகிறது. 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேதியியல் மாற்றத்தினால் ஏற்படும் உடல்பருமன், பிறநோய்களுக்கு அதிகமாக சாப்பிடும் மாத்திரைகளாலும், கர்ப்பத்தடை மாத்திரைகள் அதிகம் உட்கொள்வதாலும், கிட்னி, கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு  இருப்பவர்களுக்கும் குடல்நோய் உள்ளவர்களுக்கும், டைபாயிடு மற்றும் பலநோய் கிருமிகளால் ஏற்படும் உபாதைகளின் போதும் குடல்புண் தொடர்ச்சியாக இருப்பது, குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் போதும் வரலாம்.


பித்தநீர் சுரப்பதில் குறைபாடு உள்ளவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் வேறுசில காரணங்களாலும் பித்தப்பை கல் வர வாய்ப்பு உள்ளது.


அறிகுறிகள்:-


வயிற்றில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாய்வு மற்றும் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் மாற்றம் போன்றவை நோயின் அறிகுறி.


நவீன வீடியோ லேப்ராஸ்கோபிக் சிகிச்சைமுறை இதற்கு விடையளிக்கிறது. இதனால் நோயாளிக்கு ரத்த சேதம் அதிகம் ஏற்படுவதில்லை. நோயாளிக்கு ரத்தம் வேண்டும் என்ற நிலை தோன்றுவதில்லை. ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் ரத்தம் தேவைப்படும்.


சிகிச்சை மேற்கொண்ட இடத்தில் புண் ஏற்படுவதில்லை. இதனால் எதிர் மருந்துகள் கொடுக்கப்படவேண்டும் என்ற அவசியம் இல்லை. பக்க விளைவு நோய்களையும் தவிர்க்கலாம். அதிக வலிநிவாரண மருந்துகள் தேவையில்லை. 2 அல்லது 3 நாட்களில் வீட்டிற்கு திரும்பி சகஜ நிலைக்கு திரும்பலாம் என்கிறார்


இது போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை பெற எமது Tamil life skills எனும் mobile android app ஐ download செய்யுங்கள்..


👇👇👇👇

Now download me..

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...