உதட்டிற்கு அழகு சேர்க்கும் லிப் பாம் ! தயாரிக்க இலகு வழிமுறை...
தினமும் கல்லூரி, அலுவலகம் என அன்றாடம் லிப்டிக் போட்டுக் கொண்டு செல்கிறோம். இதனால் உதடு எளிதில் வறண்டு, கருப்பாக மாறியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் நீங்கள் போடும் லிப்ஸ்டிக்கில் உள்ள கெமிக்கல் கலந்த பொருட்கள் தான். இவை சருமத்தில் அதிக வறட்சியை ஏற்படுத்தும். எளிதில் கருப்பாகிவிடும்.இயற்கையாகவே நீங்கள் சிவப்பழகு பெற வீட்டிலேயே நீங்கள் லிப் பாம் தயாரிக்கலாம். இது சூரிய கதிர்களிடமிருந்து பாதுகாக்கும். ஈரப்பதம் அளிக்கும். உதட்டிற்கு சிவந்த நிறமளிக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம்.
#தேவையானவை :
*தேன் மெழுகு - 2
*டீஸ்பூன் தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் - துளிகள்
* புதினா எண்ணெய் - 1 துளி.
*பெட்ரோலியம் ஜெல்லி - 2 ஸ்பூன்
*மாதுளை அல்லது பீட்ரூட் சாறு - 1 டீஸ்பூன்
#செய்முறை-
முதலில் தேன் மெழுகு மற்றும் பாதாம் எண்ணெயை அல்லது தேங்காய் எண்ணெயை சேர்த்து உருகும் அளவிற்கு லேசாக சூடுபடுத்துங்கள். பின்னர் நன்றாக கலக்கி இதில் புதினா எண்ணெய் ஒரு சொட்டு விடவும். அதன்பின் மாதுளை அல்லது பீட்ரூட் சாறினை கலந்து அவற்றை ஒரு டப்பியில் போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள். இதனை உடனடியாக ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து உபயோகப்படுத்தலாம்.
தேவைப்படும்போது உபயோகித்து மீண்டும் குளிர் சாதனப்பெட்டியில் வைத்துவிட்டால், நிறைய நாட்களுக்கு வரும். உருகாது. தினமும் உபயோகித்தால் உங்கள் உதட்டின் கருமை மாறி, அழகு பெறும். முயன்று பாருங்கள்.
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...