Sunday, 13 November 2016

Recipe

                பால் கொழுக்கட்டை...



தேவையான பொருட்கள் :

*பச்சரிசி - 3/4கிலோ
*வெல்லம் - 3/4 கிலோ
*பால் - கால் லிட்டர்
*துருவிய தேங்காய் -1 கப்
*ஏலக்காய் -5
*முந்திரிப் பருப்பு -10


செய்முறை :

# பச்சரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸியில் வெகு நைஸாக அரைத்து எடுக்கவும். மாவு பட்டுப் போல் நைஸாக  இருக்கவேண்டும்.

# மாவை சின்னச் சின்ன பால்களாக உருட்டவும்.

# உருண்டையாகவோ அல்லது ஒவல் வடிவத்திலோ இருக்கலாம்.

# உருண்டைகள் கொண்டக்கடலை அளவில் இருக்கவேண்டும்.

#ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

# கொதிநீரில், அரிசி மாவு உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.

# உருண்டைகள் வெந்ததும், தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது நேரம் வற்ற விடவும்.

# பிறகு அந்தக் கலவையில் வெல்லக் கட்டிகளை தட்டிப்போட்டு கொதிக்க விடவும்.

# வெல்லம் நன்கு கரைந்து சீரானதும் அதில் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டபின், அந்தக் கரைசலில் தேங்காய்த் துருவலையும் முந்திரிப் பருப்பையும் சேர்க்கவும்.

# இறக்கியபின் அதில் ஏலக்காய் சேர்த்தால், மணமான, சுவையான பால் கொழுக்கட்டை ரெடி.

இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android App- யை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.whatstools.com/d/bvnkr_agbbznjwar

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...