Wednesday, 9 November 2016

கவிதை தொகுப்புகள்

🌹கருகும் காஷ்மீர் ரோஜாக்கள்🌹



ஓரெலும்புக்கு சண்டையிடும் நாய்களாய்
நிலத்திற்காய் போரிட்டு
ஆசாத், சம்மு என
அழகிய தேசத்தை
பித்தெடுத்த பித்தர்களே..

அப்போதும் விட்டனரா
ஆசியாவின் சுவிட்சர்லாந்தாய்
ஹரிசிங் மன்னரின் அமைதியான ஆட்சிக்குள்
அயர்ந்து தூங்கிய செல்லக்
குழந்தை காஷ்மீர்..


ஆனால் இன்றோ ஆக்கிரமிப்பும் அக்கிரமும்
அவல ஓலமும் மரணக் கதறலும்
நிறைந்த மயானமது..


சுதந்திரம் கேட்டவர் சுட்டுத்
தள்ளப் படுவர்
பள்ளி செல்லும் பிள்ளை படுகொலை செய்யப்படும்
தாயின் முன் மகளும் மகனின் முன் தாயும் கற்பழிக்கப்படுவர்..

சுட்டு வீழ்த்தப்படும் உடல்கள்
எரித்து சாம்பலாக்கப்படும்
உடமைகள்
கலட்டி எறியப்படும் தாவணிகள்...


இதயமே இல்லா இந்திய இராணுவத்தின்
ஈனச் செயல்கள் இவை..
இவர்களின் புதிய ஆயுதங்களின் பரிசோதனைக் கூடம்
காஷ்மீர்....

ஈழத்துப் போரில் மனித உரிமை வேண்டும் என
மார்த்தட்டி பேசிய ஊடகமே
சுவாதி கொலை என்றதும்
விஷேட செய்திகள்
விடாமல் சொல்லிய ஊடகமே..
எங்கே உன் குரல்.....?

காஷ்மீர் ரோஜாக்கள் கருகும் போது ஊமையாகியது ஏன்..

வேலியே பயிரை மேய்வதாய்
பாதுகாப்பு என்ற பெயரில்
படைப்படையாய் காவலாளி எனும் காவாலிகளை இறக்கி
காஷ்மீர் பூவை கசக்கி எறிந்த
இரக்கமே இல்லா இந்தியப்
பெருந்தலையே...

பாசிச அடக்கு முறையை
அவர்களில் திணிக்காதே
சுதந்திரம் கேட்டால்
பிரிவினை வாதமாம்
ஆயுதமே இல்லா அவர்கள்
தீவிர வாதியாம்..

அன்னிய நாட்டை கபடமாய்
அபகரிக்கும் கள்வர் கூட்டமே..

பிறந்து வளர்ந்து மரணித்ததும் புதைக்கும்
தாய் பூமிக்காய்
உரிமை வேண்டி போராடும்
பாலகரும் வாலிபரும்
மங்கைகளும்
எரியும் கற்கள்
உனக்கும் கட்டும்
*ஓர்நாள் சமாதி.........*

*புத்தளத்துக் கவி*
✍🏽✍🏽 *நிஸ்னி*✍🏽✍🏽
by- நிஸ்னியா
Frm- கொத்தாந்தீவு புத்தளம்

உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்

👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை

Email- tamillifeskills@gmail.com

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...