*பாடம்-2
மொழி-ஆங்கிலம்.
2016/11/19
*ஒருமை மற்றும் பன்மை » SINGLULAR AND PLURAL
# ஒருமை [SINGULAR] » ஒரே ஒரு பொருளையோ or இடத்தையோ or நபரையோ மட்டும் குறிப்பிட்டால் அது ஒருமை எனப்படும்.
Book-புத்தகம்
Bus-பேருந்து
Tree-மரம்
Glass-கண்ணாடி
City-நகரம்
# பன்மை [PLURAL] » ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளையோ (அ) இடத்தையோ (அ) நபரையோ குறிப்பிட்டால் அது பன்மை எனப்படும்.
Books-புத்தகங்கள்
Buses-பேருந்துகள்
Trees-மரங்கள்
Glasses-கண்ணாடிகள்
Cities-நகரங்கள்
# ஒருமையை பன்மையாக்கும் முறைகள் [FORMATION OF PLURAL] »
ஒருமைச் சொற்களுடன் "S" மட்டும் சேர்த்து பன்மையாக மாற்றப்படும் சில சொற்கள்.
SINGULAR-(ஒருமை)
PLURAL (பன்மை)
*Book - புத்தகம்
Books - புத்தகங்கள்
*Tree - மரம்
Trees - மரங்கள்
*Girl - சிறுமி
Girls - சிறுமிகள்
*Cat - பூனை
Cats - பூனைகள்
# ஒருமைச் சொற்களுடன் "ES" மட்டும் சேர்த்து பன்மையாக மாற்றப்படும் சில சொற்கள்.
இவ்வகையான சொற்கள் S,SH, CH, XO மற்றும் Z என்ற எழுத்துக்களோடு முடிவடைய வேண்டும்.
http://tamillifeskills1.blogspot.com
*EXAMPLE :-*
SINGULAR- [ஒருமை]
PLURAL -[பன்மை]
*Bus - பேருந்து
Buses - பேருந்துகள்
*Glass - கண்ணாடி
Glasses-கண்ணாடிகள்
*Brush - துடைப்பான்
Brushes -துடைப்பான்கள்
*Match - போட்டி
Matches - போட்டிகள்
*Torch - ஒளிவிளக்கு
Torches - ஒளிவிளக்குகள்
*Box - பெட்டி
Boxes - பெட்டிகள்
*Tax - வரி
Taxes - வரிகள்
*Mango - மாம்பழம்
Mangoes - மாம்பழங்கள்
# ஒருமைச் சொல்லின் கடைசி எழுத்து "Y"-ஆகா இருந்தால் அதை நீக்கிவிட்டுFE"IES" என்ற எழுத்துக்களை சேர்க்க வேண்டும்.
SINGULAR -[ஒருமை]
PLURAL -[பன்மை]
*City - நகரம்
Cities - நகரங்கள்
*Duty - கடமை
Duties - கடமைகள்
*Baby - குழந்தை
Babies - குழந்தைகள்
*Lady - பெண்
Ladies - பெண்கள்
*Army-இராணுவப்படை
Armies-இராணுவப்படைகள்
# ஒருமைச் சொல்லை பன்மையாக மாற்றும் பொழுது அந்த ஒருமைச் சொல்லின் கடைசி எழுத்து "Y" -ஆகா இருந்து அந்த எழுத்திற்கும் முன் உயிர் எழுத்துக்களான "A E I O U"-இவற்றில் ஏதேனும் ஒரு எழுத்து இருக்குமேயானால் அந்த கடைசி எழுத்தான "Y" -ஐ மாற்றாமல் அதனுடன் "S" மட்டும் சேர்த்தால் போதுமானது.
Boy - சிறுவன்
Boys - சிறுவர்கள்
Day - நாள்
Days - நாட்கள்
Monkey - குரங்கு
Monkeys - குரங்குகள்
Key - சாவி
Keys - சாவிகள்
Toy - பொம்மை
Toys - பொம்மைகள்
Way - பாதை
Ways - பாதைகள்
# ஒருமைச் சொல்லின் கடைசி எழுத்து ‘F", "FE" -ஆகா இருந்தால் அதை நீக்கிவிட்டு 'ES' என்ற எழுத்துக்களை சேர்க்க வேண்டும்.
Calf - கன்று
Calves - கன்றுகள்
Thief - திருடன்
Thieves - திருடர்கள்
Leaf - இலை
Leaves - இலைகள்
Knife - கத்தி
Knives - கத்திகள்
Wolf - நரி
Wolves - நரிகள்
Wife - மனைவி
Wives - மனைவிகள்
# மேற்கண்ட எவ்விதியையும் சாராத சில ஒருமைச் சொற்கள் உண்டு. அவையாவன
Man - ஆண்
Men - ஆண்கள்
Woman - பெண்
Women - பெண்கள்
Foot - அடி / பாதம்
Feet - அடிகள் / பாதங்கள்
Tooth - பல்
Teeth - பற்கள்
Analysis - பகுப்பாய்வு
Analyses-பகுப்பாய்வுகள்
Formula - சூத்திரம்
Formulae - சூத்திரங்கள்
Brief - சுருக்கம்
Briefs - சுருக்கங்கள்
Roof - கூரை
Roofs - கூரைகள்
Ox - எருது
Oxen - எருதுகள்
Child - குழந்தை
Children - குழந்தைகள்
Deer - மான்
Deer - மான்கள்
Fish - மீன்
Fish - மீன்கள்
*வினைச்சொல் » VERB
ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் என்கிறோம். அதாவது ஒரு செயல், நிகழ்ச்சி, ஒருவரின் அல்லது ஒன்றின் நிலை - ஆகியவற்றைப் பற்றிக் கூறும் சொல் வினைச்சொல் ஆகும்.
http://tamillifeskills1.blogspot.com
*உதாரணமாக:-
»I came to see you.நான் உன்னை காண வந்தேன்.
இதில் came மற்றும்
see ஆகியவை வினைச்சொல்லாகும் (Verb).
இந்த வினைச்சொற்கள் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
*Saw -பார்க்கப்பட்டது(Past Tense-இறந்த காலம்)
*seen-பார்க்கப்பட்டிருக்கிறது(Past Participle-இறந்த கால எச்சம்)
*seeing-பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது (Present Participle)
*நிகழ்காலம் » PRESENT TENSE -
தற்பொழுது நடைபெறுகிற ஒரு செயலை நிகழ்காலம் என்பர்.
*EX:-
I see a Cat-நான் ஒரு பூனையை பார்க்கிறேன்.
*இறந்தகாலம் » PAST TENSE
தற்பொழுதோ அல்லது முன்போ நடைபெற்று முடிந்த ஒரு செயலை இறந்த காலம் என்பர்.
*EX:-
I saw a Cat-நான் ஒரு பூனையை பார்த்தேன்.
*இறந்தகால எச்சம் » PAST PARTICIPLE
தற்பொழுதோ அல்லது முன்போ நடைபெற்று முடிந்திருக்கின்ற அதாவது முடிக்கப்பட்ட ஒரு செயல் தொடருமேயானால் அதை இறந்தகால எச்சம் என்பர்.
*EX:-
I have seen a Cat -நான் ஒரு பூனையை பார்த்திருக்கிறேன்.
இவை கண்டிப்பாக ஒரு துணை வினைச்சொல்லுடன் (helping verbs) தான் பயன்படுத்தப்படவேண்டும்.
நிகழ்கால எச்சம்>PRESENT PARTICIPLE
தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஒரு செயல் முடிவடையாமல் தொடருமேயானால் அதை நிகழ்கால எச்சம் என்பர்.
*EX:-
I am seeing a Cat-நான் ஒரு பூனையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
இவை கண்டிப்பாக ஒரு துணை வினைச்சொல்லுடன் (helping verbs) தான் பயன்படுத்தப்படவேண்டும்.
வினைச்சொற்கள் பலவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன
*1- REGULAR VERBS [WEAK VERB]*
#நிகழ்கால-Present Tense வினைச்சொல்லுடன் -d (அ) ed ஐ சேர்த்து இறந்த கால வினைச்சொல்லாகவோ (Past Tense) அல்லது இறந்தகால எச்ச வினைச்சொல்லாகவோ (Past Participle) மாறும் வினைச்சொல்லுக்கு ஈற்று இணைப்பு வினைச்சொல் (Regular Verb or Weak Verb) எனப்படும்.
*2.IRREGULAR VERBS [STRONG VERB] :*
**வினைச்சொல் அதனுடைய நிகழ்காலம், இறந்தகாலம் மற்றும் இறந்தகால எச்சம் ஆகிய மூன்று காலங்களிலும் மாறாமல் இருத்தல்.
http://tamillifeskills1.blogspot.com
*EX:-*
cut - cut - cut.
** வினைச்சொல் அதனுடைய நிகழ்காலம் தவிர மற்ற காலங்களில் மாற்றம் ஏற்ப்பட்டால் (-d, -ed சேர்க்கப்படாமல்)
*EX:-*
go - went -gone
பகுதி-3 அடுத்த வாரம் தொடரும்...
BY- INSTRUCTORS OF ENGLISH
Name- HalishaFrom- srilanka (kinniya)
Name- Riyasha
From-Srilanka (kalpity)
ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇
Email:-tamillifeskills@gmail.com
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...