💧 *தொலைந்த பள்ளித் தூறல் நினைவுகள்*💧
(நிஸ்னி)
வெண்ணிற ஆடையைத்
தூய்மையாய்க் கழுவி
அயன் களையாமல்
அணிந்து அனுப்ப
பள்ளி விட்டு வருகையில்
நண்பர்களுடன் சேர்ந்து
"சோ" வெனப் பெய்யும்
மழையால்
குழிகளில் தேங்கிய நீரில்
குதித்து விளையாடியதும்
பேத்தைக் குஞ்சுகளை
மீன் குஞ்சுகளென
பிடித்து விளையாடியதும்
வெண்ணிற ஆடைகளை
செந்நிறமாய் ஆக்கி வீடு சென்றதும்
காய்ச்சல் வருமென்று கண்டித்து அக்கறையால்
உம்மா அடித்ததும்
பாலர் வகுப்பில் படிக்கையில் அழியா ஞாபகங்கள்...
பதினொன்று படிக்கையில்
பக்கத்து பாடசாலைக்கு
செமினாருக்காய் செல்லுகையில்
http://tamillifeskills1.blogspot.com
பருவமழை பெய்யும் சீசனில்
பருவக்கோளாறால்
பஸ்ஸை வேண்டுமென்றே
தவறவிட்டு விட்டு
பெய்யும் மழையில் தொப்பாய் நனைந்து
வீதியோர மரங்களில்
மாங்காய் பறித்து
பக்கத்துச் சுவரில் தட்டி உடைத்து
புளிப்புச் சHப்புக்கொட்டிக்
கொண்டே
வீட்டுக்கு வருகையில்..
விட்டுச் சென்ற பஸ் டிரைவரை உம்மா திட்ட
தெரியாமல் லேசாய் புன்னகைத்ததும்...
இன்று என்னறையில் அமர்ந்து
பெய்யும் மழையை
பார்த்த வண்ணம்
கவி வடிக்கையில்
மழையால் மங்கும் ஓவியமாய் விளங்கும் காட்சிகளாய்..
தொலைந்த பள்ளி நினைவுகளும்
தூரமாய்த் தெரிகிறது..
மனதின் ஓரம் மழைத் தூறலால் தெறித்த காட்சிகள்...
*புத்தளத்துக் கவி*
✍🏽✍🏽 *நிஸ்னி*✍🏽✍🏽
by- நிஸ்னியா
Frm- கொத்தாந்தீவு புத்தளம்
உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்
👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை
Email- tamillifeskills@gmail.com
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...