Sunday, 6 November 2016

மருத்துவக் குறிப்பு

மூளையை பாதிக்கும் 10 செயல்கள்.




1. காலையில் உணவு உண்ணாமல்
இருப்பது.:

காலையில் உணவு உண்ணாமல்
இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான
அளவே குளுக்கோஸ் இருக்கும். இது
மூளைக்குத் தேவையான சக்தியையும்
தேவையான ஊட்டச்சத்துக்களையும்
கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக்
காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது:

 இது
மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக்
காரணமாகி, மூளையின் சக்தி
குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்:

மூளை சுருகவும்,
அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும்
காரணமாகிறது.

4.நிறைய இனிப்பு சாப்பிடுதல்:

 நிறைய
இனிப்பான பண்டங்களை சாப்பிடுவது,
புரோட்டின் நமது உடலில் சேர்வதைத்
தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு
பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று:

மாசு நிறைந்த
காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான
ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை
செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன்
செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை:

நல்ல தூக்கம் நம் மூளைக்கு
ஓய்வு கொடுக்கும். வெகுகாலம்
தேவையான அளவு தூங்காமலிருப்பது
மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை
ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது:

தலையை மூடிக்கொண்டு தூங்குவது,
போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க
வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும்
ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான
ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை
கொடுப்பது:

உடல் நோயுற்ற காலத்தில் மிக
அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும்,
தீவிரமாகப் படிப்பதும் மூளையைப்
பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால்,
மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும்
சிந்தனைகளை மேற்கொள்ளாமல்
இருப்பது:

மூளையை அதிகமாக
உபயோகப்படுத்தும் சிந்தனைகளை
மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது
இணைப்புகள் உருவாகின்றன. அதனால்,
மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது:

 அறிவுப்பூர்வமான
உரையாடல்களை மேற்கொள்வது மூளையின்
வலிமையை அதிகரிக்கிறது.

1 comment:

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...