Sunday, 20 November 2016

சமயல் குறிப்புகள்

            ரவை உப்புமா


 அனைவரும் எளிதில் செய்யக்கூடிய டிபன் வகைகளில் ரவை உப்புமாவுக்கு தனி இடம் உண்டு. குழந்தைகள் அதிகம் விரும்பக்கூடிய ஒன்று. இந்த ரவை உப்புமாவை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

ரவை - அரை கிலோ

பெரிய வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 5

கேரட் - 2

பீன்ஸ் - 2

உப்பு - தேவையான அளவு

முந்திரி பருப்பு - தேவையான அளவு

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

கொத்துமல்லி - தேவையான அளவு

செய்முறை :

🍚 முதலில் நறுக்கிய கேரட், பீன்ஸ் இரண்டையும் நன்றாக அவித்து எடுத்து கொள்ளவும். பிறகு, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு, ரவையை வெறும் வாணலியில் இட்டு வறுத்து, வாசனை வந்தவுடன் தனியே ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
http://tamillifeskills1.blogspot.com

 🍚 பிறகு, ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், அவித்த கேரட், பீன்ஸ் ஆகியவற்றை கொட்டி நன்றாக வதக்கவும்.

🍚 நன்கு வதங்கியவுடன், ரவையின் அளவில் இருமடங்கு தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர் அதில் ரவையை சிறிது சிறிதாக கொட்டி நன்றாக கலக்கவும். மிதமான தீயில் உப்புமாவை மூடி வேகவைத்து இறக்கவும்.

🍚 ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பை நன்றாக சிவக்க வறுத்து அலங்கரித்தால் சுவையான, மணமுள்ள ரவை உப்புமா தயார்.

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...