Wednesday, 9 November 2016

சமயல் குறிப்புகள்

                                      முட்டை பிரியாணி





     தேவையான பொருட்கள்:பொருள் - அளவு

முட்டை 5
அரிசி 2 கப்
வெங்காயம் 2
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன்
கரம்மசாலா தூள் அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
தயிர் கால் கப்
தேங்காய் பால் கால் கப்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
நெய் 1 டீஸ்பூன்
பட்டை 1
கிராம்பு 2
ஏலக்காய் 2

         செய்முறை :

  வெங்காயம், தக்காளியை வெட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

  பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள் மற்றும் மசாலாதூள் போட்டு கிளறி விடவும்.

  அதனுடன் தேங்காய் பால், தயிர் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற கணக்கில் 4 கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைத்து அதன் பிறகு அரிசியை போடவும்.

  10 நிமிடம் கழித்து அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி 2 விசில் வந்ததும் இறக்கி விடவும்.

  கமகமக்கும் முட்டை பிரியாணி தயார்.

இது போன்ற மேலும் பல பயனுள்ள  குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - யை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.

👇👇👇
https://www.whatstools.com/d/bvnkr_agbbobjfsq

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...