🌝பௌர்ணமி
நிலா...🌝
பால்கனியில் நின்று
பார்வையைச் சுழற்றினேன்
இரு பக்க அறைகளிலும்
இருள் மண்டிக்கிடக்கிறது
மனித அறவமே இல்லா
மயான அமைதி எங்கும்..
நானும் என்னோடு பேசும்
பனை மரமும்
காயும் நிலவும்
குளிர்க் காற்றும்
மட்டும் தனியே......
பௌர்ணமி நாளையென்பதால்
பொழியும் திங்களின் கதிர்
சல சலக்கும் தென்னம் கீற்றில் பட்டுத் தெறிக்கின்றது..
சில் வண்டுகள் சத்தம்
ராகமாய் இனிக்கிறது இனிமையான தனிமையில்..
பனையின் ஓலைகளை
லேசாய் வருடுகிறேன் கைகளால்..
அதன் குருத்தோலைகளில்
ரீங்காரமிடும் வண்டுகள்
என்னையும் கொஞ்சம் சீன்டிச் செல்கிறது...
குளிர்காற்று கூந்தலை
வருடிச் செல்ல
விசிரியாய் விரிந்த பனைகீற்றுகளுக் கிடையில்
பருவ மங்கை கதவிடுக்குகளில் எட்டிப் பார்பது போல்
வடிவாய் தெரிகிறது வட்ட நிலா....
மஃரிப் நேரம்
மரங்களில் பேயென பொய்யாய் பிஞ்சு நெஞ்சில் அச்சம் விதைத்த
பெரியார்களை நினைத்து
சனமில்லா இரவில்
சந்திரனுடன் நானும்
புன்னகைத்துக் கொண்டேன்...
எதிர்பாத்திருக்கிறேன்
பூமிப்பந்தை நாளை
நெருங்கும் நிலாவிற்காய்..
*புத்தளத்துக் கவி*
✍🏽✍🏽 *நிஸ்னி*✍🏽✍🏽
by- நிஸ்னியா
Frm- கொத்தாந்தீவு புத்தளம்
உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்
👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை
Email- tamillifeskills@gmail.com
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...