உலகில் பயங்கரமான 5 இடங்கள்
சிறுவர்களாக இருக்கும்போது நிறைய பேய் இடங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இவ்விடங்கள் கைவிடப்பட்டிருக்கும் அல்லது ஆவிகளால் சூழப்பட்டிருக்கும். உங்களுக்குத் தெரிந்த, தெரியாத இடங்களில் 5 பயங்கரமான இடங்களைப் பற்றி காண்போம்.
பங்கார் கோட்டை, இராஜஸ்தான், இந்தியா
பயங்கரமான இடங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்தியா இராஜஸ்தானில் உள்ள பங்கார் கோட்டை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தியாவின் முக்கிய பயங்கரமான இடமாக கருதப்படும் இது 1573ல் கட்டப்பட்டது. ஒரு மந்திரவாதியால் சபிக்கப்பட்ட அங்கு வாழ்ந்தவர்கள் மர்மமான முறையில் இறந்ததாகவும் அவர்களின் ஆவி காலங்காலமாக அங்கே உலாவி வருவதாகவும் செய்திகள் பரவுகிறன்றன. இரவு நேரத்தின் அங்கே தங்க யாருக்கும் அனுமதி கிடையாது.
கதறல் சுரங்கம், ஒந்தாரியோ, கனடா
எதிர்பாரா மரணம் அடைந்த இளம் பெண்ணிலிருந்து கதை தொடங்குகிறது. பழங்காலத்தில் இந்த தென்பகுதி சுரங்கத்திற்கு அருகே ஒரு பண்ணை வீடு இருந்துள்ளது. ஒரு நாள் அப்பண்ணை தீக்கிரையாகிறது. அதில் சிக்கிய பெண் தீயுடன் உதவிக் கோர இறுதியில் இந்த சுரங்கத்தினுள் இறந்துள்ளாள்.
அன்று முதல், இந்த சுரங்கத்தில் இரவு நேரத்தில் தைரியமாக நுழைந்து மரக்குச்சியால் தீயேற்றுபவர்கள் இறவா நிலை அடைவர் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் அவ்வாறு செய்தவர்கள் கதறி கொண்டே சுரங்கத்திலிருந்து வெளிவந்துள்ளனர்.
http://tamillifeskills1.blogspot.com
மொன்தே கிரிஸ்தோ, ஆஸ்திரிலியா
ஆஸ்திரிலியாவின் மிகவும் பயங்கரமான இடம் இது. இவ்விடம் 1855-1948 வரை கிரவ்லி குடும்பத்திற்குச் சொந்தமானது. அங்கிருக்கும்போது அக்குடும்பம் பல இறப்புகளைக் கண்டுள்ளது.
கிரவ்லியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி மேல்தளத்திற்குச் சென்று தாழிட்டு கொண்டதாகவும் அவரின் அடுத்த 23 வருடங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் கூறப்படுகிறது. ஒரு தடவை மட்டுமே வெளியில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
அவர் அந்த வீட்டிலேயே இறந்து விட்டதாகவும் அவரின் ஆவி இன்று வரை அங்கேயே உலாவி வருவதாகவும் அறியப்படுகிறது. ஆவி சம்பந்தப்பட்ட காணொளிகள் இங்கே படமாக்கப்பட்டபோது விநோத வெளிச்சங்கள் தென்பட்டதாகவும் பெண்ணின் குரல் கேட்டதாகவும் அறியப்படுகிறது.
http://tamillifeskills1.blogspot.com
லாவாங் சேவு, இந்தோனேசியா
டச்சு கிழக்கு இந்தியா ரயில்வே கம்பெனியால் 1917ல் கட்டப்பட்ட கட்டிடம் இது. லாவாங் சேவு என்றால் ஆயிரம் கதவுகள் என்று அர்த்தம். இரண்டாம் உலக போரின் போது இவ்விடம் ஜப்பானியர்களால் சிறையாக பயன்படுத்தப்பட்டு ஆட்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விடத்தில் பொந்தியானாக் எனும் இறந்த கர்ப்பிணி பெண்ணின் ஆவி சுற்றுவதாக நம்பிக்கை உண்டு. அதோடு இங்கே தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படும் டச்சு பெண்ணின் ஆவியும் சுற்றுவதாக நம்பிக்கை உண்டு. ஒரு படப்பிடிப்பின் போது அவரின் ஆவி படமாக்கப்பட்டுள்ளது.
பொம்மைகளின் தீவு, மெக்ஸிகோ
மர்மமான முறையில் இறந்த ஏழைப் பெண்ணுக்காக அர்பணிக்கப்பட்டது இத்தீவு. இத்தீவிற்கு அருகில் உள்ள கால்வாயில் அந்த பெண் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.
டோன் ஜூலியன் சந்தன் அந்த பெண்ணின் ஆவியால் தாக்கப்பட்டார். ஆவியை மகிழ்ச்சிப்படுத்த பழைய பொம்மைகளை வாங்கி வந்து தீவில் தொங்கவிட்டுள்ளார். தன் குடும்பத்தினரிடம் அந்த பெண்ணின் ஆவி வாழ்விற்குப் பின் தன்னோடு வந்துவிடுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். 2001ம் ஆண்டில் அந்த பெண் இறந்த அதே இடத்தில் அவரும் இறந்து கிடந்தார். அங்கே செல்லும் சுற்றுப்பயணிகள் அங்கே உள்ள பொம்மைகளின் கண்கள் தங்களைத் தொடர்வதாகவும் சிரிக்கும் குரல் கேட்பதாகவும் கூறியுள்ளனர்
இது போன்ற பல பயனுள்ள தகவல்களை பெற்றிட எமது Tamil life skills எனும் எமது Mobile android appஐ installed செய்யுங்கள்
👇👇👇
Download Now
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...