அற்புதமான டிப்ஸ் !!! காய்கறிகள் பிரஷ்ஷாக இருக்க ...
🍳 முதல் நாள் சாதம் மீதி இருந்தால் அதை மிக்ஸியில் நன்கு அரைத்து, அதில் ஒரு கப் கடலை மாவு, பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
🌀 உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வட்ட வடிவ துண்டுகளின் மீது சிறிது பயத்தம் மாவு கலந்து வைத்து பிறகு சு+டான எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
🍋 குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் பிரஷ்ஷாக இருக்கும்.
🍙 தேங்காய் மூடியை தண்ணீரில் வைத்தால் அல்லது மூடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் ஒரு வாரத்திற்கு மேலும் கெடாமல் இருக்கும்.
🍴 கேரட், பீட்ரூட் வாடிப் போனால் அதை எளிதாக உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது போல் ஆகி விடும். எளிதில் நறுக்கி விடலாம்.
🍳 இட்லி, தோசைக்கு மாவு அரைத்த பிறகு உளுந்து அதிகமாகிவிட்டாதா என்பதை அறிய, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் மாவை உருட்டிப்போட்டால் மாவு நீரில் மிதந்தால், இட்லி செய்யலாம், அடியில் தங்கினால் தோசை செய்யலாம்.
🍚 வெஜ் பிரியாணி செய்யும் போது, பீட்ரூட் சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்க, பீட்ரூட்டை ஒரு நாள் முன்பே அரிந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிகமாக நிறம் மாறாமல் இருக்கும்.
🍝 இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.
🍜 சாம்பார் பொடி அரைக்கும்போது மிளகாய் வற்றல், மல்லி, மிளகு மஞ்சள், துவரம் பருப்புடன் நு}று கிராம் கடுகும் சேர்த்து அரைத்தால் பொடி வாசனையில் குழம்பு நல்ல சுவையாகவும், நல்ல மணமாகவும் இருக்கும்.
🌿 பாலக் கீரையின் இலையை மட்டும் நறுக்கி, எண்ணெயில் வதக்கி அதனுடன் துருவிய தேங்காய், இரண்டு பச்சை மிளகாய், அரை டீஸ்பு+ன் சீரகம், உப்பு சேர்த்து அரைத்தால் இரும்புச்சத்து நிறைந்த அருமையான, ருசியான பாலக் சட்னி தயார்.
இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - யை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
👇👇👇
https://www.whatstools.com/d/bvnkr_agbbobjfsq
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...