Wednesday, 30 November 2016

அழகு குறிப்புகள்

அவசியம் நிறுத்த வேண்டிய பொதுவான 9 மேக்கப் தவறுகள்!!! 



மேக்கப் என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது பெண்கள்
தான். அகராதியில் பெண்களுக்கு என்ன அர்த்தம் என பார்த்தால் மேக்கப் என்று இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேக்கப்பை விரும்பாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு அலாதி பிரியமாகும். ஆண்கள் இல்லாமல் கூட பெண்கள் இருந்து விடுவார்கள், ஆனால் மேக்கப் இல்லாமல்??? கொஞ்சம் கஷ்டம் தான்.

வயது பாரபட்சம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் மேக்கப் போடுவது
பிடிக்கும். சரி மேக்கப் மீது ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறார்கள்?
எல்லாம் அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் தான். மேக்கப் போடுவது பெண்களுக்கு அழகை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கருவளையங்கள், நிறமூட்டல் போன்ற சரும பிரச்சனைகளை மறைத்து, அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் அளிக்கும்.

மேக்கப் போடுவதால் உங்களுக்கு அருமையான உணர்வை அளிக்கும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அந்த உணர்வை உங்கள் சருமமும் பெறுகிறதா என்பது உங்களுக்கு தெரியுமா? குழப்பமாக உள்ளதா? நாங்கள் கூறுவது பெண்கள் இழைக்கும் சில மேக்கப் பற்றிய தவறுகளைப் பற்றி தான். இப்படி செய்யும் சில தவறுகளால் உங்கள் சருமத்தின் மீது மோசமான விளைவுகளையும் அது ஏற்படுத்திவிடும். அதனால் அதைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லதாகும்.

அதனால் நீங்கள் இது வரை செய்து வரும் இந்த பொதுவான தவறுகளை இனி வரும் காலங்களில் தவிர்க்கவும். அவை என்னவென்று பார்க்கலாமா?



🔺படுக்க போகும் முன் மேக்கப்பை நீக்காதது

மேக்கப்பை நீக்க சோம்பேறித்தனப்பட்டு அப்படியே தூங்க சென்று விட்டீர்களா? அப்படியானால் வெகு விரைவில் சொரசொரப்பான, வறண்ட மற்றும் வயதான சருமத்தை
பெற நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள். சருமத்தின் துவாரங்களில் மேக்கப்
நுழையக் கூடும். இதனால் துவாரங்களின் அளவு பெரிதாகும். எண்ணெயும்
அழுக்கும் இந்த துவாரங்களை அடைத்து, அதனால் அடிக்கடி பருக்கள் ஏற்படும்.
இவ்வளவு தானா என நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை; இனி தான் இருக்கிறது பிரச்சனையே! இந்த பழக்கம் தொடர்ந்தால், சீக்கிரத்திலேயே உங்கள் சருமம் முதிர்ச்சியை காணும்.


  🔺சுத்தம் செய்யாமல் மேக்கப் பிரஷ்களை பயன்படுத்துதல்

வெதுவெதுப்பான நீர் மற்றும் குழந்தைகளின் ஷாம்பு சிறிதளவை ஒன்றாக கலந்து, உங்கள் மேக்கப் பிரஷ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில், அந்த கலவையில் ஊற வைத்து கழுவ வேண்டும். அழுக்கு படிந்த பிரஷ்களைப் பயன்படுத்தினால், அதில் ஏற்கனவே படிந்துள்ள மேக்கப்கள் உங்கள் சரும துவாரங்களை அடைக்கும். இதனால் நீங்கள் புதிதாக செய்யும் மேக்கப் கூட கோரமாகி விடும். மேலும் அழுக்கு பிரஷ்களைப் பயன்படுத்தும் உங்கள் முகத்தில் தொற்று ஏற்படும் இடர்பாடும்
உள்ளது.
 http://tamillifeskills1.blogspot.comcom

🔺கண்களுக்கான மேக்கப்பை தவறான முறையில் துடைத்தல்

பொதுவாக கண்களில் செய்யப்பட்டுள்ள மேக்கப்பை ஈரமான பஞ்சுருண்டையை கொண்டு முரட்டுத்தனமாக துடைக்க பல பெண்கள் முற்படுவார்கள். கண்களை சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மையானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அங்கே சுலபமாக சுருக்கம் ஏற்பட்டு விடும். மேலும் கண்களில் இப்படி கடுமையான முறையில் நடந்து கொண்டால், இமைகளின் அடர்த்திக்கு தீங்கு
உண்டாகும்.



🔺நீர் புகாத மஸ்காராவை அடிக்கடி பயன்படுத்துதல்

நீர் புகாத மஸ்காரா நீண்ட காலம் நீடித்து நிற்பதால், அதை பயன்படுத்த பல
பெண்கள் மிகவும் விருப்பப்படுவார்கள். ஆனால் அவை உங்கள் கண் இமைகளை வறட்சியாக்கும். மேலும் நீர் புகாத மஸ்காராவை நீக்குவது கஷ்டமாக இருப்பதால், அதனை அழிக்கும் போது கண்களை அதிகமாக தேய்க்க வேண்டி வரும்.இதனால் கண்களை சுற்றியுள்ள சருமம் சுருக்கம் அடைவதோடு, இமைகளையும் உதிரச்
செய்யும்.


🔺முகம் முழுவதும் ப்ரான்ஸர் பூசிக்கொள்வது

முகத்தின் மீது ப்ரான்ஸர் பூடிக்கொண்டால் உங்கள் முகம் அருமையாக
காட்சியளிக்கும்; ஆனால் அதை எங்கே தடவ வேண்டும் என்பது தெரிந்தால்
மட்டுமே! முக அமைப்பிற்குத் தேவையான முக்கியமான மேக்கப் சாதனமாக இது இருந்தாலும் கூட, இதனை முகம் முழுவதும் தடவிக் கொண்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. முகத்திற்கும், கழுத்திற்கும் உள்ள நிற வேறுபாடு பளிச்சென காட்டிக்கொடுத்து விடும். ஒரு வேளை அதை பயன்படுத்த வேண்டுமென்றால், முகம் முழுவதும் பூசாமல், உங்கள் மூக்கு, தாடையெலும்பு மற்றும் கன்னத்தின் இடுக்குகளில் மட்டும் பூசிக்கொள்ளலாம்.


🔺அளவுக்கு அதிமாக ஃபவுண்டேஷன் போடுவது

அளவுக்கு அதிகமாக ஃபவுண்டேஷன் பயன்படுத்தினால் உங்கள் முகம் பார்ப்பதற்கு பேய் போல் தெரியும். அளவாகவும், மிதமாகவும் இருந்தால் மேக்கப் போட்டால் தான் பார்ப்பதற்கு உண்மையாக தெரியும். ஃபவுண்டேஷனை அதிகமாக போடுவதால் உங்கள் சருமத்தின் நிறமும் செயற்கையாக தெரியும். ப்ரான்ஸர் போல ஃபவுண்டேஷனையும் கழுத்து மற்றும் சருமங்களில் பூசாமல் லேசாக முகத்தில் மட்டும் போட்டுக் கொள்ளுங்கள்.


  🔺தவறான முறையில் லைனரை பயன்படுத்துதல்

பலர் பரிந்துரைப்பதை போல் அல்லாமல், உதட்டு லைனரை உதட்டு விளிம்பில்
மட்டும் பயன்படுத்தாமல், உதடு முழுவதும் பயன்படுத்த வேண்டும். அதற்கு
காரணம் சில மணிநேரத்தில் உதட்டின் சாயத்தின் நிறம் தேய்ந்து விட்டால், அடர்த்தியான உதட்டு வளையம் மட்டுமே மீதமிருக்கும். அதனால் லைனரை உதடு முழுவதும் போடுங்கள்.

  🔺அழகு சாதனங்களை ஆண்டாண்டு காலமாக பாதுகாத்தல்

அனைத்து பொருட்களுக்குமே அதிகபட்ச பயன்பாட்டு காலம் உள்ளது. இது அழகு சாதனப் பொருட்களுக்கும் அடங்கும். சில அழகுப் பொருட்கள் திறக்கப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே தீர்ந்து விடும். ஆனால் முதிர்வு காலம் முடிந்த பின்னரும் கூட இந்த பொருட்களை பாதுகாத்து பயன்படுத்துவது நல்லதல்ல. அது உங்கள் தோற்றத்திற்கும் சரி, உங்கள் சருமத்திற்கும் சரி, நல்லதல்ல.அதனால் பழைய மேக்கப் சாதனங்களை முதிர்வு காலம் முடிந்தவுடனேயே கழித்து விட வேண்டும்.

http://tamillifeskills1.blogspot.com

🔺உடலை மாய்ஸ்சரைஸ் செய்யாமல் இருத்தல்

வறண்ட சருமத்தை உடைய பெண்கள் குறிப்பாக இதனை செய்ய வேண்டும். பொதுவாக பல பெண்களும் முகத்திற்கு மேக்கப் அளிக்க பல மணிநேரம் செலவழிப்பார்களே தவிர உடலை மறந்து விடுவார்கள். முகத்தை போலவே உடலின் மற்ற சருமத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது முக்கியமாகும். வெப்பநிலை, வெந்நீர் குளியல், மாசு போன்றவைகள் அனைத்தும் தலை முதல் பாதம் வரையிலான சருமங்களை பாதிக்கும். அதனால் தினமும் அதனை மாய்ஸ்சரைஸ் செய்யவில்லை என்றால் தன் இயற்கை பொழிவை உங்கள் சருமம் இழந்து விடும்.

சரி இந்த தவறுகளை எல்லாம் இதற்கு முன் நீங்கள் செய்து வந்திருந்தால்
பரவாயில்லை. தெரியாமல் செய்ததால் ஒன்றும் தவறில்லை. ஆனால் முழுமையான வழிகாட்டலுக்கு பின்பு, இந்த தவறுகளுக்கு எல்லாம் நீங்கள் முற்றுப்புள்ளி வைத்து, ஆரோக்கியமான சருமத்தை பெறும் நேரம் வந்து விட்டது


🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
 👇👇👇
downward now

Tuesday, 29 November 2016

அறிவோம் ஆயிரம்

பிரா - பற்றி அறிய வேண்டிய உண்மைகள்...!!!




பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.

திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் எதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.
http://tamillifeskills1.blogspot.com

அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுதத்தும்?

இதுபோன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.

முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்...

🔹டி-சர்ட் பிரா:

இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? - இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.

🔹டீன்-ஏஜ் பிரா:

டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.

🔹புல் போர்ட் பிரா

வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

🔹நாவல்டி பிரா:

திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.
http://tamillifeskills1.blogspot.com

🔹ஸ்போர்ட்ஸ் பிரா:

விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.

🔹மெட்டர்னிட்டி பிரா:

கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.

🔹நர்சிங் பிரா:

கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.

🔹கன்வர்டபுள் பிரா:

பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.
இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.

அடுத்ததாக, சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாக காட்ட, தளர்ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவுகள் பிராக்கள்...

🔹மினி மைஸர்:

இவ்ளோ பெரியதாக இருக்கே... என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவுதான்.

🔹பேடட் பிரா:

அடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்... என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க வைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.

🔹புஷ் அப் பிரா:

சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.

🔹அண்டர் ஒயர் பிரா:

இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.

🔹கியூட் வெட்டிங் பிரா:

மேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.
http://tamillifeskills1.blogspot.com

🔹மெசக்டமி பிரா:

கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.

இனி, பிரா தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான பதில்களும்...



# கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பதில்: உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ராப் பதிந்த இடங்கள் சிவந்து போய் காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ராப் ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பது போல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.

# கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?

பதில்: தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

# கேள்வி: கொழுக்மொழுக் என்று உள்ள பெண்கள் (36 சைஸ் உள்ளவர்கள்) எலாஸ்டி’ ஸ்ட்ராப் வைத்த பிரா அணியலாமா?

பதில்: நிச்சயம் அணியக்கூடாது. உங்களது மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழி வகுக்கும்.

# கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?

பதில்: கண்டிப்பாக. தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிரா சைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.
http://tamillifeskills1.blogspot.com

# கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?

பதில்: இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணிந்து என்ஜாய் பண்ணலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை பலர் பிராக்களை அணிந்து அழக பார்க்கலாம்.

# கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?

பதில்: பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதைவிட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை.


🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
Download Now 👇👇👇 

கவிதை தொகுப்பிலுக்கள்.

மறக்க முடியாத உன்

               நினைவுகள்........


உன்னை நினைத்து
நினைத்துத்தான்
நித்தமும்
கலங்குகிறேன்…..
எதிரியே
தெரியாத
தேசத்தில்…..யுத்தம்
புரிகிறேன்…..!!

நான் மடிந்து
போனாலும்
உன்நினைவுகள்
முடிந்து
போகாது…..மீண்டும்
மீண்டும்
நினைவலைகளாய்
நெஞ்சில்
வாழும்……!!

மலரும்
பூக்கள்
எல்லாம்
மாலை ஆவதில்லை…..
உள்ளத்தில்
உதித்த
காதல்
எல்லாம்…..கரை
சேர்ந்ததில்லை……மாறாக
கவலைகளையே
தந்து
தொலைக்கிறது……!!

என் சிந்தனையில்
நிலைத்தவனே…..
என்னை
சிதையில் போட்டாலும்
சீக்கிரம்
உன்னைத்
தொலைக்க
மாட்டேன்……!!

நம்மை
மறந்து
நாம்
வாழ…..இந்த
ஜென்மத்தில்
எங்கேயும்
இடமில்லை…..
அப்படியும்
மறந்தால்
இந்த
ஜென்மத்திலேயே
நாம்
இல்லை…..!!

காதலின்
வலிகளோடு
ஒருசில
வரிகள்……
பேனா மை
கொண்டு அல்ல…..
என் கண்ணீரின்
ஈரம் கொண்டு……!!


 ✍🌹நிந்தவூர் கவி🌹✍
 ❤🌹💝பாத்திமா சப்னா💝🌹❤

by- பாத்திமா சப்னா
Frm- நிந்தவூர் ஸ்ரீ லங்கா

உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்

👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை

Email- tamillifeskills@gmail.com


🔃மேலும் பல............

 இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.

 👇👇👇
Now Download App

Monday, 28 November 2016

அறிவோம் ஆயிரம்

         உலகில் பயங்கரமான 5 இடங்கள்



சிறுவர்களாக இருக்கும்போது நிறைய பேய் இடங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இவ்விடங்கள் கைவிடப்பட்டிருக்கும் அல்லது ஆவிகளால் சூழப்பட்டிருக்கும். உங்களுக்குத் தெரிந்த, தெரியாத இடங்களில் 5 பயங்கரமான இடங்களைப் பற்றி காண்போம்.



பங்கார் கோட்டை, இராஜஸ்தான், இந்தியா



பயங்கரமான இடங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்தியா இராஜஸ்தானில் உள்ள பங்கார் கோட்டை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தியாவின் முக்கிய பயங்கரமான இடமாக கருதப்படும் இது 1573ல் கட்டப்பட்டது. ஒரு மந்திரவாதியால் சபிக்கப்பட்ட அங்கு வாழ்ந்தவர்கள் மர்மமான முறையில் இறந்ததாகவும் அவர்களின் ஆவி காலங்காலமாக அங்கே உலாவி வருவதாகவும் செய்திகள் பரவுகிறன்றன. இரவு நேரத்தின் அங்கே தங்க யாருக்கும் அனுமதி கிடையாது.



கதறல் சுரங்கம், ஒந்தாரியோ, கனடா




எதிர்பாரா மரணம் அடைந்த இளம் பெண்ணிலிருந்து கதை தொடங்குகிறது. பழங்காலத்தில் இந்த தென்பகுதி சுரங்கத்திற்கு அருகே ஒரு பண்ணை வீடு இருந்துள்ளது. ஒரு நாள் அப்பண்ணை தீக்கிரையாகிறது. அதில் சிக்கிய பெண் தீயுடன் உதவிக் கோர இறுதியில் இந்த சுரங்கத்தினுள் இறந்துள்ளாள்.

அன்று முதல், இந்த சுரங்கத்தில் இரவு நேரத்தில் தைரியமாக நுழைந்து மரக்குச்சியால் தீயேற்றுபவர்கள் இறவா நிலை அடைவர் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் அவ்வாறு செய்தவர்கள் கதறி கொண்டே சுரங்கத்திலிருந்து வெளிவந்துள்ளனர்.
http://tamillifeskills1.blogspot.com


மொன்தே கிரிஸ்தோ, ஆஸ்திரிலியா


ஆஸ்திரிலியாவின் மிகவும் பயங்கரமான இடம் இது. இவ்விடம் 1855-1948 வரை கிரவ்லி குடும்பத்திற்குச் சொந்தமானது. அங்கிருக்கும்போது அக்குடும்பம் பல இறப்புகளைக் கண்டுள்ளது.

கிரவ்லியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி மேல்தளத்திற்குச் சென்று தாழிட்டு கொண்டதாகவும் அவரின் அடுத்த 23 வருடங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் கூறப்படுகிறது. ஒரு தடவை மட்டுமே வெளியில் வந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் அந்த வீட்டிலேயே இறந்து விட்டதாகவும் அவரின் ஆவி இன்று வரை அங்கேயே உலாவி வருவதாகவும் அறியப்படுகிறது. ஆவி சம்பந்தப்பட்ட காணொளிகள் இங்கே படமாக்கப்பட்டபோது விநோத வெளிச்சங்கள் தென்பட்டதாகவும் பெண்ணின் குரல் கேட்டதாகவும் அறியப்படுகிறது.
http://tamillifeskills1.blogspot.com

லாவாங் சேவு, இந்தோனேசியா


டச்சு கிழக்கு இந்தியா ரயில்வே கம்பெனியால் 1917ல் கட்டப்பட்ட கட்டிடம் இது. லாவாங் சேவு என்றால் ஆயிரம் கதவுகள் என்று அர்த்தம். இரண்டாம் உலக போரின் போது இவ்விடம் ஜப்பானியர்களால் சிறையாக பயன்படுத்தப்பட்டு ஆட்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விடத்தில் பொந்தியானாக் எனும் இறந்த கர்ப்பிணி பெண்ணின் ஆவி சுற்றுவதாக நம்பிக்கை உண்டு. அதோடு இங்கே தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படும் டச்சு பெண்ணின் ஆவியும் சுற்றுவதாக நம்பிக்கை உண்டு. ஒரு படப்பிடிப்பின் போது அவரின் ஆவி படமாக்கப்பட்டுள்ளது.



பொம்மைகளின் தீவு, மெக்ஸிகோ 




மர்மமான முறையில் இறந்த ஏழைப் பெண்ணுக்காக அர்பணிக்கப்பட்டது இத்தீவு. இத்தீவிற்கு அருகில் உள்ள கால்வாயில் அந்த பெண் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.

டோன் ஜூலியன் சந்தன் அந்த பெண்ணின் ஆவியால் தாக்கப்பட்டார். ஆவியை மகிழ்ச்சிப்படுத்த பழைய பொம்மைகளை வாங்கி வந்து தீவில் தொங்கவிட்டுள்ளார். தன் குடும்பத்தினரிடம் அந்த பெண்ணின் ஆவி வாழ்விற்குப் பின் தன்னோடு வந்துவிடுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். 2001ம் ஆண்டில் அந்த பெண் இறந்த அதே இடத்தில் அவரும் இறந்து கிடந்தார். அங்கே செல்லும் சுற்றுப்பயணிகள் அங்கே உள்ள பொம்மைகளின் கண்கள் தங்களைத் தொடர்வதாகவும் சிரிக்கும் குரல் கேட்பதாகவும் கூறியுள்ளனர்


இது போன்ற பல பயனுள்ள தகவல்களை பெற்றிட எமது Tamil life skills எனும் எமது Mobile android appஐ installed செய்யுங்கள்
👇👇👇
Download Now

சமயல் குறிப்புகள்

       அசத்தலான சமயல் குறிப்புகள்.....!!!




❄ நெய் சேர்க்காமல் பொட்டுக்கடலை உருண்டை செய்ய, மூன்று கப் பொட்டுக்கடலை, ஒரு கப் சர்க்கரை, ஐந்தாறு ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். பிறகு பொடித்ததை கொஞ்சம் எடுத்து இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் பால் தௌத்து உருண்டை பிடித்தால் சுவையாக இருக்கும்.

❄ புளி பேஸ்ட் செய்து ஐஸ் கியுபில் வைத்தால் புளி குழம்பு, வத்தல் குழம்பு, ரசம் ஆகியவற்றை செய்யும் போது எடுத்து பயன்படுத்தலாம்.

❄ வறுத்த வேர்க்கடலைப் பருப்பை மிக்ஸியில் போட்டு பொடித்து, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது வேர்க்கடலை பொடியை தூவி இறக்கினால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இதை பொரியல், ரோஸ்ட் வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

❄ செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பை நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும்.
http://tamillifeskills1.blogspot.com

❄ குடமிளகாயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கி, அதன் உட்பகுதியில் ஏதாவது காரமில்லாத சட்னியைத் தடவி, பஜ்ஜி போடலாம். ருசியாக இருக்கும்.

❄ இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார்!

❄ மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால் புளிக்காமல் இருக்கும். தயிர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.

❄ வெங்காயத்தில் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

❄ மண் பாத்திரத்தில் செய்யும் உணவு சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.

❄ காய்கறிகளின் தோலின் அடிப்புறத்தில் தான் அதிகமான விட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றை நாம் சீவி வீணாக்காமல், துவையல் செய்து சாப்பிடுவதால் சத்துக்கள் கிடைக்கும். தோல் துவையலின் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
http://tamillifeskills1.blogspot.com

❄ பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

❄ பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீர்pல் கழுவினால் துர்நாற்றம் இருக்காது.

❄ பறங்கிக் கொட்டைகளை வீணாக்காமல் வெயிலில் உலர்த்தி பருப்பை உரித்து நெய்யில் வதக்கி சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு சாப்பிடலாம்.

❄ சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல், முளை வராமல் இருக்கும்.

❄ வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத்துணியை போட்டு மூடி வைத்தால் காய்கறிகள் வாடாமல் இருக்கும்.

❄ கறிவேப்பிலை செடிக்கு புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டு குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

❄ பச்சை கொத்தமல்லியையும், கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.
http://tamillifeskills1.blogspot.com

❄ கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

❄ வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத்துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.


இது போன்ற மேலும் பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills mobile Android Application - யை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.

👇👇👇
https://www.whatstools.com/d/bvnkr_agbbznjwar

மொழிகள் பல கற்போம் சிங்களம் பகுதி=03

பாடம்-03

மொழி-சிங்களம்.

2016/11/28


👉කොම්බුව

[ கொம்புவ]

கொம்பு


✍சிங்களத்தில் கொம்புவ என்ற எழுத்துக்கு இரு குறிகளில் உண்டு.

* ෙ
*ැ

✍   ல + ெ =லெ

👆 இங்கே "ல" என்ற எழுத்து "லெ" வாக மாறுவதற்கு (ெ) கொம்பு சேர்க்கப்பட்டுள்ளது.
அதே போல சிங்களத்தில் ල என்ற எழுத்து ලෙ வாக மாறுவதற்கு சிங்களத்தில்
(ෙ/ැ)கொம்புவ என்ற குறி சேர்க்கப்படுகிறது.

උදාහරණය
[உதாகரணய]
உதாரணம்

ක + ෙ = කෙ
ක ැ = කැ
க ெ = கெ

ප + ෙ = පෙ
ප + ැ = පැ
ப ெ = பெ

ස + ෙ = සෙ
ස + ැ = සැ
ச ெ = செ

ම + ෙ = මෙ
ම + ැ = මැ
ம ெ = மெ

හ + ෙ = හෙ
හ + ැ = හැ
ஹ ெ = ஹெ

න + ෙ = නෙ
න + ැ = නැ
ந ெ = நெ



කොම්බුව සහිත සරල වචන ලියමු 

[கொம்புவ சஹித சரல வசன லியமு]

கொம்புவுடன் கூடிய இலகுவான வசனங்களை எழுதுவோம்.


★(ෙ)

✍(දෙ)ක
   தெ[dh]க
இரண்டு

 ✍(ගෙ)ඩිය
 கெ[ge]டி[di]ய
காய்

✍(ගෙ)දර
கெ[ge]தர
வீடு

✍(කෙ)(සෙ)ල්
கெசெல்
வாழைப்பழம்

 ✍(ගෙ)ම්බා
கெ(ge)ம்பா[ba]
தவலை

✍(පෙ)ට්ටිය
பெட்டிய
 பெட்டி

✍(සෙ)ල්ලම්
செல்லம்
விளையாட்டு

✍(වෙ)(ළෙ)න්දා
வெளெந்தா
வியாபாரி

★ (ැ)

✍(පැ)න
பென
பேனை

✍(පැ)න්සල
பென்சல
பென்சில்

✍(රැ)ය
ரெய
இருள்

✍(බැ)ස්ම
பெ[b]ஸ்ம
பள்ளம்

✍සුබ(පැ)තම
சுப[b]பெதும்
நல்வாழ்த்துக்கள்

✍(වැ)සිකිලිය
வெசிகிலிய
மலசலகூடம்

✍(පැ)දුර
பெதுர
பாய்

✍(පැ)ණි
பெனி
பானி


👉කොම්බුව හා ඇලපිල්ල [கொம்புவ ஹா அலபில்ல]

கொம்பு மற்றும் அரவை


✍ தமிழில் ஒரு சொல்லுக்கு
(ெ மற்றும் ா) சேர்ப்பது போல சிங்களத்தில் ( ෙ/ා) சேர்க்கப்படுகிறது.
அதாவது
http://tamillifeskills1.blogspot.com

ල + ෙ + ා = ලො
ல + ெ + ா = லொ

👆இங்கே "ல" என்ற எழுத்து "லொ" வாக உருமாறும் போது
(ெ /ா) கொம்புவும் அரவும் சேர்க்கப்பட்டுள்ளது.
அவ்வாறே சிங்களத்திலும்
(ෙ/ා ) கொம்புவயும் அலபில்லயும் சேர்க்கப்படுகிறது.
උදාහරණය
[உதாகரணய]
உதாரணம்

ක + ෙ + ා = කො
க + ெ + ா =கொ

ම + ෙ + ා = මො
ம + ெ + ா = மொ

ස + ෙ + ා = සො
ச + ெ + ா = சொ

ප + ෙ + ා = පො
ப + ெ + ா = பொ



කොම්බුව හා ඇලපිල්ල සහිත සරල වචන ලියමු

[கொம்புவ ஹா அலபில்ல சஹித சரல வசன லியமு]

கொம்பு மற்றும் அரவுடன் கூடிய இலகுவான சொற்களை எழுதுதல்


(කො)ළය
கொளய
இலை

(දො)ර
தொ[th]ர
கதவு

(තො)ප්පිය
தொப்பிய
தொப்பிய


(පො)ත
பொத
புத்தகம்


(කො)ස්
கொஸ்
பலாக்காய்

(පො)ල්
பொல்
தேங்காய்


(පො)ඩි
பொடி[d]
சிறியது


(බො)නවා
பொ[b]னவா
குடித்தல்

(හො)ඳයි
ஹொந்தய்
நல்லம்

(කො)කා
கொகா
கொக்கு



කොම්බුව හා හල්කිරීම

[கொம்புவ ஹா ஹல்கிறீம]

இரட்டை கொம்பு


✍தமிழைப்போலவே சிங்களத்திலும் இரட்டை கொம்புக்கு (ෑ) காணப்படுகிறது..
http://tamillifeskills1.blogspot.com

✍இரட்டை கொம்பை சிங்களத்தில் இரு முறைகளில் பாவிப்பர்.

1.(ෑ) இரட்கொடை கொம்பு சேர்த்தல்.
ක + ෑ = කෑ

උදාහරණය
[உதாகரணய]
உதாரணம்

ත + ෑ = තෑ
த + ே = தே

න + ෑ = නෑ
ந + ே = நே

ම + ෑ = මෑ
ம + ே = மே

හ + ෑ = හෑ
ஹ + ே = ஹே


2.கொம்பு (ෙ) இட்டு அவ்வெழுத்தை குற்றெழுத்தாக்க வேண்டும்.
அதாவது ....
கொம்புடன்(ෙ) ஹல்கிரீம(්/ි) சேர்க்க வேண்டும்.

උදාහරණය
[உதாகரணய]
உதாரணம்

★ (්)

ල + ෙ + ් = ලේ
ல + ே = லே

ක + ෙ + ් = කේ
க+ ே = கே

ප + ෙ + ් = පේ
ப + ே = பே

න + ෙ + ් = නේ
ந + ே = நே

ස + ෙ + ් = සේ
ச + ே = சே

★ (ි)
ම + ෙ+ ි =මේ
மே

බ + ෙ + ි =බේ
பே [b]

ව + ෙ + ි =වේ
வே

ඩ + ෙ + ි =ඩේ
டே [d]




කොම්බුව හා හල් කිරිම සහිත වචනවල බලමු 

[கொம்புவ ஹா ஹல் கிறீம சஹித வசனவல பலமு]

இரட்டை கொம்புடனான சொற்களை பார்ப்போம்


නෑයා
[நேயா]
உறவினர்

මෑකරල්
[மேகரல்]
பயற்றங்காய்

කුරුණෑගල
[குருணேகல]
குருநாகல்

කෑම
[கேம]
சாப்பாடு

නෑ
[நே]
இல்லை

බෑ
[பே b]
முடியாது

කලුලෑල්ල
[கலுலேல்ல]
கரும்பலகை

පේර
[பேர]
கொய்யா

ජනේලය
[ஜனேலய]
ஜன்னல்

ලේනා
[லேனா]
அணில்

මගේ
[மகேg]
எனது

කොහේද
[கொஹேத]
எங்கே

තේ
[தே]
தேனீர்

කේක්
[கேக்]
கேக்

මේසය
[மேசய]
மேசை

කඩෙිය
[கடேய]
கடை

මේ
[மே]
இது

අම්මේ
[அம்மே]
அம்மா




👉කොම්බුව හා ඇලපිල්ල සමග හල්කිරීම

[கொம்புவ ஹா அலபில்ல சமக ஹல்கிறீம]

இரட்டை கொம்பு மற்றும் அரவை


✍தமிழில் இரட்டை கொம்பு மற்றும் அரவை
(ே/ா) சேர்ந்து எழுத்து எழுத்து அமைவது போலவே சிங்களத்திலும் காணப்படுகிறது.
அவ்வாறு இரட்டை கொம்பும் அரவையும் சிங்களத்தில் (ෙ/ා්) இவ்வாறு அமையும்.
http://tamillifeskills1.blogspot.com

[உதாகரணய]
உதாரணம்
ල + ෙ + ා් =ලෝ
ல + ே + ா = லோ

ක + ෙ + ා් =කෝ
க + ே + ா = கோ

ම + ෙ + ා් = මෝ
ம + ே + ா = மோ

ස + ෙ + ා් =සෝ
ச + ே + ா = சோ

ප + ෙ + ා් =පෝ
ப + ே + ா = போ

ර + ෙ + ා් = රෝ
ர + ே + ா = ரோ

න + ෙ + ා් =නෝ
ந + ே + ா = நோ

👆 இதனை நீண்டு ஒலிக்கும் "ஓ" சத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.



 කොම්බුව හා ඇලපිල්ල සමග වචන හදමු

[கொம்புவ ஹா அலபில்ல சமக வசன ஹதமு]

கொம்பு மற்றும் அரவையுடனான சொற்களை அமைப்போம்


(බෝ)ලය
போலய
பந்து

(රෝ)සමල
ரோசமல
ரோசாப்பூ

(රෝ)හල
ரோஹல
வைத்தியசாலை

(කෝ)දුව
கோதுவ
கோவை

තන්(තෝ)රැව
கன்தோருவ
காரியாலயம்

(ලෝ)කය
லோகய
உலகம்

(ගෝ)වා
கோவா
கோவா

ඉස්(කෝ)ල
இஸ்கோல
பாடசாலை

(පෝ)ච්චිය
போச்சிய
சாடி


👉சங்கிலி கொம்பு

[கொம்பு தெக]


✍தமிழை போலவே சிங்களத்திலும் சங்கிலி கொம்பு (ை) காணப்படுகிறது.
✍இது இவ்வாறு அமையும்.->(ෛ)
✍தமிழில் உள்ள சங்கிலி கொம்பிற்கும் (ை) சிங்கள சங்கிலி கொம்பிற்கும் (ෛ) சிறிய வித்தியாசம் உண்டு.
அதாவது தமிழ் சங்கிலி கொம்பு இரு சுழலில் வருவது போல அல்லாமல் சிங்களத்தில் இரு கொம்புகள் சேர்ந்து வருகிறது.
http://tamillifeskills1.blogspot.com
அதற்கு சிங்களத்தில் (කොම්බු දෙක) "கொம்பு தெக" என கூறப்படுகிறது.
✍ அதன் உருவாக்கம் இவ்வாறு அமையும்

ල + ෛ = ලෛ
ல + ை = லை

ක + ෛ = කෛ
க + ை = கை

ම + ෛ = මෛ
ம + ை = மை

ප + ෛ = පෛ
ப + ை = பை

இவ்வாறே தமிழ் மொழியில் போன்று சிங்களத்திலும் "ஔ" காணப்படுகிறது.
சிங்களத்தில் ஔ (ඔෟ) இவ்வாறு அமையும்.

ල + ෙ + ෟ = ලෞ
ல + ெ + ள = லௌ

ක + ෙ + ෟ = කෙෞ
க + ெ + ள = கௌ

න + ෙ + ෟ = නෞ
ந + ெ + ள = நௌ

ස + ෙ + ෟ = සෞ
ச + ெ + ள = சௌ


 කෙෞ‌නුකාගාර
கௌனுகாகார
நூதனசாலை

‌මෛතිු
மைத்ரி
மைத்ரி

සෞඛ්‍ය
சௌபாக்ய
சுகாதாரம்

ලෞකික
லௌகிக
உலகம்

දෛවය
தைவய
விதி

වෛරය
வைரய
விரோதம்

ඖසද
ஔசத
மருத்தும்



இன்றய பாடத்திக்கான கேள்விகள்.


Hme wrk

ගෙදර වැඩ

[கெதர வெட]


(1).නිවරදි අකුරු සොයා ලියන්න
[நிவரதி அகுறு சோயா லியன்ன]
சரியான எழுத்தை தெரிவு செய்து எழுதுக.

 Eg-: නැ - நெ
(நே/நோ/நெ/நொ)


♣යෙ-
(யெ/யோ/யௌ/யே)

♣ඩෝ-
(ட/டை/டோ/டெ)

♣ වෛ -
(வௌ/வை/வெ/வே)

♣ලේ-
(லி/ல்/லே/லோ)

 ♣තෛ -
(தௌ/தொ/தோ/தை)

(2).නිවරදි වචනය දෙමළෙන් ලියන්න
[நிவரதி வசனய தெமழென் லியன்ன]
சரியான வசனங்களை தமிழில் எழுதுக

♣නෑයා-
♣හොඳය්-
 ♣කෞනුකාගාරය -
♣ගෙම්බා-
♣රැය-

 (3).නිවරදි අකුරු සොයා ලියන්න
[நிவரதி அகுறு சோயா லியன்ன]
சரியான எழுத்தை தெறிவு செய்து எழுதுக?

♣පැන්_ල
பென்சல

♣_ස්ම
பெஸ்ம

♣_ත
பொத

♣ජ_ලය-
ஜனேலய

♣කලු_ල්ල-
கரும்பலகை

♣_සය
மேசய

♣_දුව
கோதுவ

(4).දෙමළ වචන ලියන්න
[தெமழ வசன லியன்ன]
தமிழ் சொற்களை எழுதுக.

♣වැසිකිළිය-
♣ලේනා-
♣රෝසා-
♣කොකා-
♣පේර-
♣නෑ-
♣ඔෟසද-
♣දෛවය-


பகுதி-04 அடுத்த வாரம் தொடரும்...

BY-INSTRUCTORS OF SINHALA-


Name- Shafna.
From- Srilanka (kandy)

Name- Shafrana
From- Srilanka (kekirawa)

Name- Kanesan 
From- Srilanka (kinniya)


ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com


🔃மேலும் பல............
 இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.

          👇👇👇
   Now Download App

மொழிகள் பல கற்போம் ஆங்கிலம் பகுதி=03

பகுதி-03

பாடம்-ஆங்கிலம்

2016/11/26



       Tenses-காலம்


ஒரு செயல் எப்பொழுது நடைபெற்றது என்பதை கூறும் சொல் Tense எனப்படும்.மூன்று வகையான காலம் உள்ளது

1. நிகழ்காலம் (Present Tense)

2. இறந்த காலம் (Past Tense)

3. எதிர்காலம் 
(Future Tense)

Example:

* நிஷான் படிக்கிறார்.

* நிஷான் படித்தார்.

* நிஷான் படிப்பார்.

நிஷான் படிக்கிறார் இதில் இப்பொழுது நிஷான் படிப்பதை குறிக்கிறது. அதாவது நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு செயலை குறிக்கிறது. எனவே இது Present Tense ஆகும்.

நிஷான் படித்தார். இதில் நிஷான் படித்தது நேற்றோ அல்லது அதற்கு முன்போ நடந்து முடிந்ததை குறிப்பிடுகிறது. இவ்வாறு கடந்த காலத்தில் நடந்து முடிந்த ஒரு செயலை சொல்வது *Past Tense* ஆகும்.


நிஷான் படிப்பார் இதில் பாலாவுக்கு நாளையோ அல்லது அதற்கு பிறகோ எப்பொழுது நேரம் கிடைக்குமோ அப்பொழுது செய்யும் செயலைச் சொல்வதால் இது Future Tense ஆகும்சில செயல்கள் வழக்கமாக நடைபெற்று வரும், சில செயல்கள் நடந்து முடிவடைந்திருக்கும் ஒரு சில செயல்கள் இனிமேல் தான் நடைபெற வேண்டும் என்ற நிலையில் இருக்கும்.

இது போலவே சில செயல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி அது நேற்று நடந்து இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். இவ்வாறு கூறுவதை 4 பிரிவுகளில் பிரிக்கலாம்.

# Simple

# Perfect

# Continuous

# Perfect Continuous

இவை ஒவ்வொன்றும் காலத்திற்கு ஏற்றபடி 3 பிரிவுகளாகப் பிரியும். மொத்தம் 12 பிரிவுகளில் ஆங்கில இலக்கணத்தை பிரிக்கலாம்.

Simple Present
Tense

Simple Past
Tense.

Simple Future
Tense.

Present Perfect 
Tense.

Past Perfect Tense.

Future Perfect Tense.

Present Continuous Tense.

Past Continuous Tense.

Future Continuous Tense.

Present Perfect Continuous Tense.

Past Perfect Continuous Tense.

Future Perfect Continuous Tense.

வினைச் சொல் காலத்திற்கு ஏற்ப மாறுவதைப் போல அந்த வினையை அதாவது செயலை செய்பவருக்கு ஏற்றபடியும் மாறும்.

Exaample:

நான் விளையாடுகிறேன்

நீ விளையாடுகிறாய்.

அவன் விளையாடுகிறான்

அவர்கள் விளையாடுகிறார்கள்

 அது விளையாடியது

        வாக்கியம் (Sentence)

பல சொற்கள் சேர்ந்து வந்து ஒரு முற்றுப்பெற்ற பொருளைத்தருமானால் அது வாக்கியம் எனப்படும்.A group of words which give a complete meaning is called Sentence.

Example:

  He is studying.(அவன் படித்துக் கொண்டிருக்கிறான்)

She who is wearing a green skirt is my sister (பச்சை பாவாடை அணிந்திருக்கும் பெண் என்னுடைய சகோதரி)

       Types of Sentences

The sentences are of 4 types they are


1.Positive sentence (உடன்பாட்டு வாக்கியம்)

இது ஒரு செய்தி வாக்கியம்.

Example:

   = He is reading a newspaper(அவன் செய்திதாள் படிக்கிறான்).

   = I am playing(நான் விளையாடுகிறேன்.

2. Negative Sentence(எதிர்மறை வாக்கியம்)

இல்லை என்ற பொருள் தரும் வாக்கியம் எதிர்மறை வாக்கியம்

Example:

= He does not drink(அவன் குடிப்பதில்லை)


3.Question Sentence(வினா வாக்கியம்)

கேள்விகளை கேட்க பயன்படும் வாக்கியம்.

 yes/no question type:
சில கேள்விகளுக்கு  பதில் Yes அல்லது No என்று வர வேண்டும். அந்த மாதிரி கேள்விகளை Yes/No type question என்கிறோம்.

உனக்கு தெரியுமா? என்று யாராவது கேட்டால் தெரியும்(yes) அல்லது தெரியாது(No) என பதில் சொல்லுவோம்.

*Information Question type:

நாம் ஒருவரிடம் உனக்கு பிடிக்குமா எனக் கேட்டு அவர் பிடிக்காது எனப் பதில் சொன்னால் அவரிடம் ஏன் பிடிக்காது எனக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்பதற்கு *Question word* வேண்டும்  என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை  போன்ற சொற்களை கேள்வி சொல் *(Question word)* என்கிறோம்.இதைப் போல என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை போன்ற வார்த்தைகள் இடம்பெறும் கேள்விகளை *information question* என்கின்றோம்.

4.Exclamatory Sentence(வியப்பு வாக்கியம்)
It makes a sudden feeling

Example:

     = Vow. What a beauty!!(ஆஹா என்ன ஒரு அழகு!)

             தெரிந்து கொள்ள வேண்டிய வினாச் சொற்கள்

*What? -என்ன?

*When?எப்பொழுது?

*Where?எங்கே?

*Which?எது?

*Why?ஏன்?

*Who?யார்?

*Whom?யாரை?

*How?எப்படி?

*How far?எவ்வளவு தூரம்?

*How long?எவ்வளவு நேரம்?

*How often?எப்பொழுதெல்லாம்?

*How much?எவ்வளவு?

*How many?எத்தனை?

*To whom?யாருக்கு?

Example:

= What is your name?(உனது பெயர் என்ன?)


நிகழ்காலத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் செயலைக் குறிப்பிட simple present tense உதவுகிறது.
அலுவலகம் செல்வது,சாப்பிடுவது,பேப்பர் படிப்பது, Mail check பண்றது போன்ற வழக்கமான ,மாறாத செயல்கள் குறித்து பேசும் போது simple present tense வரும்.

🔹ஒரு வாக்கியத்தை உருவாக்க simple present tense உதவுகிறது (To make a statement)

Example:

-  He talks very fast

 - Prem likes sweets

*Simple Present Tense வாக்கியம் அமைக்கும் முறை(How to write Simple Present Tense)

🔹ஒரு செயலை Simple Present Tense ல் சொல்ல அந்த செயலை குறிக்கும் verbஐ  மட்டும் சொன்னால் போதும்.

உதாரணமாக,

 நான் கிரிக்கெட் விளையாடுகிறேன். இதில் விளையாடுவது என்னும் செயலை சொல்ல play என்ற verb இருக்கிறது.
I play cricket என்று சொல்லலாம்.

🔹ஒரு verb அதை செய்யும் நபருக்கேற்ப மாறுபடும்.

🔹Subject 3rd person singular ஆக இருந்தால் verb உடன் 'S' சேரும்.

person  singular  plural
1st        Verb         Verb
2nd       Verb         Verb
3rd        Verb+S     Verb

🔹play என்ற வினைச்சொல் personக்கு ஏற்ப மாறுவதைப் பார்க்கலாம்.

* I play -Ist person singular

* We play  - Ist person plural

* You play - 2nd person singular/Plural

* They play - 3rd person Plural

* He plays - 3rd person singular

* She plays - 3rd person singular

*  It plays -  3rd person singular.

🔹am,is,and are
The words am,is and are are the simple present forms of the verb 'be'

I -- am  
You --are
We --are
They --are
He -- is
She -- is
It -- is

Example:

- I am in the garden
we are in our bedrooms

- Our dod is black

- She is also pretty

- Computers are very expensive.

 🔹is and There are
ஒரு பொருள் இருப்பதை குறிக்க there பயன்படுகிறது.

Example:

அங்கு ஒரு மரம் இருக்கிறது எனச்சொல்ல There is a tree என்று சொல்ல வேண்டும்

🔹Singular noun ஆக இருந்தால் there உடன் is சேர்த்தும்,  plural noun ஆக இருந்தால் there உடன் are சேர்த்தும் பயன்படுத்தவும்.

Example:

- There is nothing to do when it rains

- There are cows outside

- There is a cat sitting on the bench

- There is a girl called priya in my class

🔹There மற்றும் is சேர்த்து there's என்றும் சொல்லலாம்.

Example:

- There's nothing to do when it rains

- There's a cat sitting on the bench

- There's a girl called priya in my class

🔹அங்கு இல்லை என்று சொல்ல there isn't(is not) மற்றும் there aren't(are not) என்று சொல்லலாம்

      Simple Present Tense எங்கெல்லாம் use பண்ண வேண்டும்:

* எப்பொழுதும் உண்மையாக நடக்கும் செயல்களை குறிப்பிட

- The earth goes around the sun

- We live in London.

- The sun rises in the east

- The sun sets in the west

* திரும்ப திரும்ப நடக்கும் செயல்கள் மற்றும் நம்முடைய பழக்க வழக்கங்கள் பற்றி சொல்ல(For repeated actions or habits)

- I get up at 6'oclock every day

- He usually reaches at the department at 9.00AM

- My neighbour usually practices violin at midnight.


* திட்டமிட்ட எதிர்கால செயல்களைப் பற்றி சொல்ல(To indicate a planned future action)

- My little sister starts school tommorrow

- The train leaves in 5 minutes

- Next week I go on holiday to Paris.


1.Simple Present வாக்கியங்களை Negative ஆக மாற்ற

🔹Simple Present வாக்கியங்களை Negative ஆக மாற்ற 'இல்லை' என்ற பொருள் தரும் 'not' என்ற word ம், Do,Does என்ற helping verb களைப் பயன்படுத்த வேண்டும்.

🔹3rd person singular subject வந்தால் Does என்ற helping verb ம் மற்ற அனைத்து subject க்கும் Do என்ற helping verb ம் use பண்ண வேண்டும்.

உதாரணமாக

- நான் விரும்புகின்றேன் - I like
இதை நான் விரும்பவில்லை என்று Negative ஆக மாற்ற not,do சேர்த்து *I do not like என்று சொல்ல வேண்டும்.Do மற்றும் not சேர்த்து simple ஆக don't என்றும் சொல்லலாம். I do not like என்பதை I dont like என்றும் சொல்லலாம்.

I -do
We -do
You -do
He -does
She -does
They -do
It -does


Example:

🔹Like என்பதை subject க்கு ஏற்ப எவ்வாறு எதிர்மறை வாக்கியம் ஆகிறது என பார்க்கலாம்.

* I Like tea நான் tea விரும்புகிறேன்)

* I don't like tea (நான் tea விரும்பவில்லை)

* We like tea ( நாங்கள் tea விரும்புகிறோம்)

* We don't like tea( நாங்கள் tea விரும்பவில்லை )

* You like tea(நீ/நீங்கள் tea விரும்புகிறாய்)

* You don't like tea( நீ/நீங்கள் tea விரும்பவில்லை)

* They like tea(
அவர்கள் tea விரும்புகிறார்கள்)

* They don't like tea (
அவர்கள் tea விரும்பவில்லை)

* He likes tea( அவன் tea விரும்புகிறான்)

* He doesn't like tea( அவன் tea விரும்பவில்லை)

* She likes tea( அவள் tea விரும்புகிறாள்)

* She doesn't like tea ( அவள் tea விரும்பவில்லை)

* It likes tea (அது tea விரும்புகிறது)

* It doesn't like tea (அது tea விரும்பவில்லை)

*2.Simple Present வாக்கியங்களை Questions ஆக மாற்ற :*

1.yes/no question type:

சில கேள்விகளுக்கு பதில் Yes அல்லது No என்று வர வேண்டும். அந்த மாதிரி கேள்விகளை Yes/No type question என்கிறோம்.இந்த மாதிரி கேள்விகளை கேட்க Do மற்றும் Does helping verb உதவுகிறது. இதில் helping verb subjectக்கு முன்னால் வர வேண்டும்.

Example:

* உனக்கு பிடிக்குமா?Do you like?

* உனக்கு தெரியுமா?Do you know?

* நீ போகிறாயா?Do you go?

* அது வேலை செய்கிறாதா?Doe's it work?

* அவன் வருகிறானா?Doe's he come?

* நீ கேட்கிறாயா?Do you ask?


2.Information Question:

நாம் ஒருவரிடம் உனக்கு பிடிக்குமா? எனக் கேட்க Do you like? எனக் கேட்கலாம். இது அவர் பிடிக்காது(No) எனப் பதில் சொன்னால் ஏன் பிடிக்காது? எனக் கேட்க வேண்டும்.இதைப் போலமேலும் தகவல் சேகரிக்க கேட்கும் கேள்விகளை Information question என்கிறோம்.

🔹Information qustion களை கேட்க என்ன,எங்கே,எப்பொழுது, ஏன், யார்,யாரை போன்ற question words தேவைப்படும்.

தெரிந்து கொள்ள வேண்டிய வினாச் சொற்கள்(Question words)
Question wordsவினாச் சொற்கள்.

🔹Information question களை உருவாக்க helping verb do/does முன்னால் question word(what,when,why,how போன்ற)சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Example

* நீ எப்பொழுது எழும்புகிறாய்?
When do you get up?

* நீ எங்கே வேலை செய்கிறாய்?
Where do you work?

* உன்னுடைய Officeக்கு எப்படி செல்கிறாய்?
How do you go to your office?

* உனக்கு எவ்வளவு பணம் வேணும்?
How much money do you want?

Note:

Work என்ற செயல் நிகழ்காலத்தில் எவ்வாறு Subjectக்கு ஏற்ப மாறுகிறது எனவும் negative, question sentence ஆக எவ்வாறு மாற்றலாம்.


                          இவ்வார பதிவிற்கான வினாக்கள்



1)What are  the types of sentences?, write a example each one?
வாக்கியங்களின் வகைகள் எவை?ஒவ்வொன்றுக்கும் உதாரணம் தருக?

2)Make sentences using these information questioning words- கீழே தரப்பட்டுள்ள
Information questioning words களை வைத்து  வாக்கியங்கள் அமைக்க.
1.whom?
2.How much?
3.Which?

3)What is the meaning of the sentence?
வாக்கியம் என்றால் என்ன?

4)Write 3 examples for simple present tense using "she", "I" ,"we"
சாதாரன நிகழ்காலத்தில் 'she','it','we' என்பனவற்றை பயன் படுத்தி உதாரணம் அமைக்க.

5) transferred to tamil
"refer to the speaker and others but not listener"தமிழில் மொழிபெயர்க்க.

6)Make 2 sentences for simple present negative form
நிகழ் கால எதிர்மறைக்கு 2 உதாரணம் அமைக்க.

பகுதி-04 அடுத்த வாரம் தொடரும்...

BY- INSTRUCTORS OF ENGLISH

Name- Halisha
From- srilanka (kinniya)

Name- Riyasha
From-Srilanka (kalpity)



ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com



🔃மேலும் பல............ 

 இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.

       👇👇👇
  Now Download App

அழகு குறிப்புக்கள்.

கூந்தல் பராமரிப்பு.





♣ எண்ணெய் பசை நீங்க


* கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.



♣ தலைமுடி பளபளவாக


* தேநீரில் வடக்கத்திய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாரை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

* புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.



♣ கூந்தல் நன்கு வளர/ முடி உதிர்வதை தடுக்க


கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்:

*ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம்.
http://tamillifeskills1.blogspot.com

* மன உளைச்சல், கோபம், படபடப்பு.

* கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.

* கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.

* அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு.


முடி உதிர்வது நிற்க வேண்டுமா?

பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது. உதாரணமாக - மீன், இறைச்சி, முட்டை, மரக்கறி வகைகள், பழ வகைகள்


முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்:

*வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

*இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.
http://tamillifeskills1.blogspot.com

*தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

* நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.

* சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.

* வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்



♣ பேன், பொடுகு  தொல்லை நீங்க


* குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

* பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தேவைக்கு நீர் கலந்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.

* பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
http://tamillifeskills1.blogspot.com

* புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.



♣ இளநரையை தவிர்க்க


* தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம்.

* பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

* மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

* கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும். - See






மேலும் கூந்தல் பராமரிப்பு பற்றிய முழு விளக்கம்👇👇👇


இன்றைய கால கட்டத்தில் தலைமுடி உதிருதல் மற்றும் இளம் வயதிலே நரை முடி பிரச்சனை ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ளது. இதனால் அழகு குறைவதோடு, தன்னம்பிக்கையும் இல்லாமல் போய்விடுகிறது. தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. ஆகவே முடியை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பல்வேறு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்
மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன.

நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது.எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.

மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.

நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
http://tamillifeskills1.blogspot.com

ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.

கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் பயோட்டின் நிறைந்துள்ளது.

இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.

கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.

குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம்.
http://tamillifeskills1.blogspot.com

பொடுகை விரட்ட வேப்பம்பூ
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும் புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.

தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள்
மன உளைச்சல், கோபம், படபடப்பு.
ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம்.
கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.
கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.
பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.
http://tamillifeskills1.blogspot.com

முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்:
வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.
இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.
தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

நரைமுடி கருப்பாக வேண்டுமா?
பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி 12 நரையை போக்கவல்லது.

கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.

முடி கொட்டுவதை தடுக்க
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்.

முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் ஜூஸ்கள்!!!
நல்ல அழகான, அடர்த்தியான, நீளமான கூந்தல் கூட உடலின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும். பொதுவாக ஜூஸ் குடித்தால், உடல் நன்கு சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும். ஆனால் அந்த ஜூஸ்களை கூந்தலைப் பராமரிக்கப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு அடர்த்தியாக வளரும். ஏனெனில் கூந்தலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

இதனால் கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, கூந்தல் பிரச்சனைகளான முடி வெடிப்பு, வறட்சி போன்ற அனைத்தையும் சரிசெய்யலாம். அதிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட சில ஜூஸ்களை குடிப்பதை விட, அதனை தலைக்கு நேரடியாகப் பயன்படுத்துவதால், இதில் உள்ள சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு, அதனால் கிடைக்கும் பலனும் விரைவில் தெரியும். ஆனால் சில ஜூஸ்களை குடிப்பதனால், கூந்தலின் அடர்த்தி மற்றும் வளர்ச்சியை அதிரிக்கலாம். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் வேறு எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட பொருட்களையும் சேர்க்காமல் செய்தால் தான், நல்ல பலன் கிடைக்கும்.

திராட்சை சாற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். எனவே தினமும் தவறாமல் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

பழங்களின் ராஜாவான மாம்பழத்திலும் நல்ல வளமையான அளவில் வைட்டமின்களும், கனிமச் சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதில் சிறந்தது. எனவே இத்தகைய பழத்தை தலைக்கு பயன்படுத்துவதை விட, சாப்பிட்டு வந்தால் கூந்தலுக்கு மட்டுமின்றி, உடலுக்கும் நல்லது.
சிட்ரஸ் பழங்களில் கிவியும் ஒன்று. இத்தகைய கிவிப் பழத்தை சாறு எடுத்து, அதனை கூந்தலுக்கு பயன்படுத்தினால், அதில் உள்ள வைட்டமின் சி, கூந்தலின் வலிமை அதிரிக்கும். மேலும் இதனை உணவில் சேர்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், இது கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதில் சிறந்தப் பொருளாகக் கருதப்படுகிறது.
செம்பருத்தி ஜூஸ் செம்பருத்தியை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் செம்பருத்தியின் பூ மற்றும் இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை தலையில் தடவி மசாஜ் செய்து வர, பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
http://tamillifeskills1.blogspot.com

நெல்லிக்காய் சாறு நெல்லிக்காய் முடியின் வலிமை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடிய தன்மை கொண்டவை.
உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், அது கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கும். ஏனெனில் இதில் கூந்தல் மெலிதாவதை தடுக்கும் தன்மை அதிகம் உள்ளது.

கேரட்டில் கூந்தலின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஜூஸை தலைக்கு தடவுவதை விட, குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன், ஸ்கால்ப்பில் போதிய அளவில் எண்ணெயை சுரக்கச் செய்யும்.

அழகான முடியை பெற தவறாமல் செய்ய வேண்டிய செயல்கள்!!!
தலை முடி என்பது நம்முடைய அழகை மெருகேற்ற உதவும். இது பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் தான். அதனால் முடியை பராமரிப்பதில் ஆண்களும்,பெண்களும் அதிகம் மெனக்கெடுவதுண்டு. தலை முடியினால் மீண்டும் உங்கள் நாள் மோசமானதாக அமைந்துள்ளதா? ஆரோக்கியமான தலை முடி என்ற வெற்றிகரமான மகுடம் உங்கள் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றிவிடும்.

கீழ்கூறிய எளிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். தலை முடி வறட்சியாகவும், சுருண்டு கொள்ளவும் செய்தால், வாரம் ஒரு முறை சூடான எண்ணெய் மசாஜ் செய்யுங்கள். அதனை தொடர்ந்து சாதாரண ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி குளியுங்கள். அளவுக்கு அதிகமான கலரிங், இரசாயனங்கள் மூலம் முடியை நேராக்குதல் அல்லது சுருட்டி விடுதல் மற்றும் இதர ரசாயன சிகிச்சைகளை சில வாரங்களுக்கு மூட்டை கட்டி வையுங்கள்.
வீட்டில் செய்யப்பட்ட தலை முடி மாஸ்க்கை பயன்படுத்துவது, ட்ரையர் பயன்படுத்துவது தவிர்ப்பது போன்றவைகள் தலை முடியை நன்றாக வைக்கும். இப்போது தலை முடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

ஷாம்பு போடும் போது நினைவில் கொள்ள வேண்டியவை… தலைக்கு குளிக்கும் போது, ஸ்கால்ப்பை சுத்தம் செய்வதில் கவனம் இருக்க வேண்டும். அதனால் விரல்களை கொண்டு மென்மையாகவும், திடமாகவும் ஸ்கால்ப்பில் நுரையுடன் மசாஜ் செய்யுங்கள். தலையை கழுவிய பின் நல்ல கண்டிஷனரை பயன்படுத்துங்கள். அதனை ஒவ்வொரு முடியிலும் படுமாறு தடவி, பின் நன்றாக கழுவி விடுங்கள்.
தவிர்க்க வேண்டியவை – வெப்ப முறையில் தலைமுடியின் ஸ்டைலை மாற்றுவது அல்லது அயர்ன் மற்றும் வெப்பமான கர்லரை பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்த்து, ஈர தலைமுடி இயற்கையாகவே காய விடுங்கள். – ஆல்கஹால் உள்ள தலைமுடி ஜெல் பயன்படுத்துவதை தவிர்க்கவும். – சுத்தமில்லாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சீப்பு மற்றும் பிரஷ்களை எல்லாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தலை சருமத்தை எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யுங்கள் – சீரான முறையில் கூந்தலுக்கு எண்ணெய் தடவினால், முடியின் தரத்தில் ஏற்படும் வித்தியாசத்தை கண்டிப்பாக நீங்கள் கவனிக்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆகவே தலைக்கு எண்ணெயை கொண்டு இதமாக மசாஜ் செய்யுங்கள். – மூலிகை கலந்த ஆலிவ், ஜோஜோபா, பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்களில் முடியை மேம்படுத்தும் குணங்கள் உள்ளது. அதனால் அது தலை சருமத்திற்கு சில ஊட்டச்சத்துக்களை வழங்கும். – தலைக்கு நன்றாக ஒரு மசாஜ் ஒன்றை செய்தால், நல்ல தூக்கம் வரும். மேலும் காலை புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கவும் உதவும். – முடிக்கு எண்ணெய் தேய்க்கும் போது, அதன் நுனிகளில் படுமாறு தேய்க்க வேண்டும்.

உங்களுக்கு ஏன் தலைமுடி நிறைய நரைக்குதுன்னு தெரியுமா….?
http://tamillifeskills1.blogspot.com

இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது முடி நரைத்தல். இப்போதெல்லாம் இந்த பிரச்சனை பரவலாக பல பேரை தாக்குகிறது. முக்கியமாக இளம் வயது ஆண்களையும், பெண்களையும். வளர்ந்து வரும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் இதர பல காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களின் தலை முடியும் வேகமாக நரைத்து விடுகிறது. இன்று பல இளைஞர்கள் சாம்பல் நிறம் முதல் வெண்ணிற இளநரை முடியுடன் சுற்றி திரிவதை காண்கிறோம்.
ஆண்களுக்கு எப்படி ஆரம்பிக்கிறது? ஆண்களுக்கு தாடியில் ஆரம்பிக்கும் நரை, பின் மீசைக்கு வந்து அங்கிருந்து தலையின் பகுதிகளுக்கு பரவும். நெஞ்சு முடி நரைக்க சில வருடங்கள் ஆகும்.

பெண்களுக்கோ உச்சந்தலையில் தொடங்கும். பின் இந்த நரை அப்படியே பிற இடங்களுக்கு பரவி, முதுமைத் தோற்றத்தைத் தரும்.
ஏன் இது நடக்கிறது? பல இளைஞர்கள் இந்த பிரச்சனைக்காக ஆலோசனை கேட்க வருவது அதிகரித்து கொண்டே போகிறது.

ஹார்மோன் சமமின்மை, கூடுதல் தைராய்டு சுரப்பிச் செயலாக்கம், தாழ் தைராய்டிசம், ஊட்டச்சத்துக் குறைவு, இரத்த சோகை, உணவுச்சத்துப் பற்றாக்குறை, எலெக்ட்ரிக் ட்ரையர் மற்றும் கடுமையான முடி சாயம் பயன்படுத்துவது, மரபியல் சார்ந்த கோளாறு, ஹீமோதெரபி, கதிர்வீச்சு என பல காரணங்களால் இந்த பிரச்சனை உண்டாகிறது.
இதற்கான தீர்வு என்ன? நரைத்த முடியை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாமல் போனாலும், உணவு பழக்கத்தை மாற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்று, தலைமுடி மேலும் நரைக்காமல் தடுக்கலாம்.

சீரான முறையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், சரியான முடி மற்றும் தலை சரும பராமரிப்பு மற்றும் மன அழுத்தத்தை நீக்கும் நடவடிக்கைகள் என இவை அனைத்தும் அவசியம்.
மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு, மன அழுத்தத்தை நீக்கி, ஒழுக்கமில்லாத வாழ்வு முறையை கைவிட வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், முடி நரைப்பதை தடுக்கலாம். மேலும் நல்ல ஆரோக்கியமான முடியையும் பெறலாம்.

முடி கொட்டுதல் மற்றும் முடி உடைவதைக் குறைக்கும் வழிமுறைகளை காண்போம்!!
முடி கொட்டுதல் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு பிரச்சனையாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பது நமக்கு தெரிவதில்லை. முடி கொட்டும் பிரச்சனையால் நமது இயற்கை அழகும், முடி வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. முடியைத் தவறாக பராமரிப்பதன் விளைவாகவே இந்த நிலை ஏற்படுகிறது. ஒருமுறை முடி உதிர ஆரம்பித்தால், இந்நிலை பல ஆண்டுகள் தொடரும்.
இந்தப் பிரச்சனை இருபாலர் மத்தியிலும் அதிகரித்து கொண்டே வருவதால், பலரும் இதற்கான தீர்வை தேடி அலைகின்றனர்.

ஆங்கில மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என பலவற்றை பயன்படுத்தினாலும் கூட, இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு யாருக்குமே கிடைப்பதில்லை. கெமிக்கல் கலந்த பொருட்களைப் உபயோகிப்பதால், இந்த பிரச்சனை மேன்மேலும் அதிகமாவது எல்லோர் மத்தியிலும் ஒரு கவலையை ஏற்படுத்துகிறது. ஆகவே இங்கு கெமிக்கல் பயன்பாடு இல்லாமல், முடி கொட்டுவதை அல்லது வெடிப்பதை குறைப்பதற்கான சிறந்த வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பயன்பெறுங்கள்.

சல்ஃபேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துங்கள் சலவைப் பொருள் தயாரிப்பதற்கான பொதுவான மூலப்பொருள் சல்ஃபேட் ஆகும். உடலை அல்லது முடியை அலசும் போது, இது அதிகமான நுரையை உருவாக்குகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது தலையில் உள்ள ஈரப்பதத்தை நீக்குகிறது. இந்த உலர்வுத் தன்மை, முடி வெடிப்பை அதிகமாக்குகிறது. ஆகவே சல்ஃபேட் இல்லாத ஷாம்புகள் மென்மையான சலவைப் பொருட்களை கொண்டிருப்பதால், இதைப் பயன்படுத்துவதன் மூலம் முடியைப் பாதுகாக்க முடியும்.

எப்போதும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள் கண்டிஷனர் முடியின் முனைகளை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டது. இது தலைமுடியை ஈரத்தன்மையுடன் வலிமையாக பராமரித்து, கூந்தலுக்கு நீண்ட ஆயுளை அளிக்கிறது. ஆகவே ஷாம்புவைப் பயன்படுத்தும் போதெல்லாம், அழகான மற்றும் வலிமையான தலைமுடியைப் பெற, இறுதியில் கண்டிஷனர் பயன்படுத்த மறவாதீர்கள்.

தலைமுடியை உலர வைக்கும் உபகரணங்களைத் தவிர்க்கவும் ப்லோ-ட்ரையரும் இதில் ஒன்று, சுருட்டை தலைமுடி சாதனம், பிளாட் தலைமுடி சாதனம், கிரிம்பர்கள், ஹேர் ஸ்ட்ரெயிட்னர்கள் மற்றும் ஏனைய முடியை சரி செய்யும் சாதனங்கள் ஆகியவற்றில் வெப்பத்தின் மூலம் உபயோகப்படுத்துவதால், இவை நாளடைவில் தலைமுடிக்குத் தீவிர சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே இவற்றைப் பயன்படுத்துவதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை இவற்றை முற்றிலும் தவிர்க்க முடியாதென்பதால், இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னர், வெப்ப பாதுகாப்பு ஸ்ப்ரே அல்லது சீரம்களைப் பயன்படுத்துதல் சிறந்தது.
http://tamillifeskills1.blogspot.com

செயற்கையாக பெர்மிங் செய்யாதீர்கள் தலைமுடியில் சுருள்களை ஏற்படுத்துவதற்கான ஒரு கெமிக்கல் செயல்முறை தான் பெர்மிங் ஆகும். துரதிர்ஷ்டவசமாக, இந்த கெமிக்கல் முடியின் புரதக்கட்டுகளை உடைப்பதால், தலைமுடி சேதம் அடைவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. ஆகவே பெர்மிங் செய்வதைத் தவிர்த்து, சேதம் ஏற்படும் சிகிச்சைகளிலிருந்து கூந்தலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

முறையாக ட்ரிம் செய்யுங்கள் தலைமுடியின் சேதத்தை குறைக்க ட்ரிம்மிங் செய்வது, முடியை அதிக சேதத்திலிருந்து பாதுகாக்க மிக முக்கியமானதாகும். முடி வளரும் போது, முடியின் முனைகளில் வெடிப்பு ஏற்பட்டு, முடி சேதமடையும் வாய்ப்பு அதிகமாகிறது. ஆகவே முடியை ட்ரிம்மிங் செய்வதால், முடியின் முனைகளில் வெடிப்புக்களைத் தவிர்க்க முடியும்.

தலைமுடி ஈரமாக இருக்கும் போது சீவுவதைத் தவிர்க்கவும் தலைமுடி ஈரமாக இருக்கும் போது, தலை சீவுதல் மிகப்பெரிய தவறாகும். முடி ஈரமாக இருக்கும் போது, முடியின் ஹைட்ரோஜன் கட்டிகள் உடைகின்றன. இதனால் தலைமுடி சேதம் ஏற்பட்டு, முடி கொட்டுதல் அதிகமாகிறது. ஆகவே தலைமுடி ஈரமாக இருக்கும் போது, சீவுதல் மற்றும் முடியை சிக்கெடுத்தல் ஆகியவற்றைத் தவிர்த்து, முடி உதிர்வதிலிருந்து தலைமுடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தலைமுடிக்கு வர்ணம் பூசுவதைத் தவிர்க்கவும் பெராக்சைடு அல்லது அம்மோனியாவைப் பயன்படுத்தி கலரிங் செய்வதன் மூலம், தலைமுடியின் ஹைட்ரோஜன் தன்மை மாற்றப்படுகிறது, இது தலைமுடிக்குள் இருக்கும் புரோட்டீன்களை உடைக்கிறது. இதனால் முடி சுலபமாக உடையும் நிலையை அடைந்து, முடி கொட்டுதல் அதிகமாகிறது. ஆகவே, இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் கெமிக்கலைப் பயன்படுத்தி, கலரிங் செய்வதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக இயற்கை முறைகளைக் கையாளுங்கள்.

தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்ய மறக்காதீர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்கள், தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து, தலைமுடியை மிருதுவாக பராமரித்து வருகின்றனர். குறைந்தது வாரத்தில் இரண்டு தடவை, தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தடவி, தலைமுடியை மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம், அழகான மற்றும் வலிமையான தலைமுடியைப் பெறலாம்.

கூந்தல் வறட்சியைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

பெண்களுக்கு ஏற்படும் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று தான் கூந்தல் வறட்சி. ஆனால் இத்தகைய கூந்தல் வறட்சியானது சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மருந்துகள் கலக்கப்பட்ட தண்ணீரினால் ஏற்படுகிறது என்றால், அப்போது கூந்தலுக்கு அதிக பராமரிப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அத்தகைய கூந்தல் வறட்சியினால் கூந்தல் உதிர்தல், கூந்தல் உடைதல் மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆகவே கூந்தல் வறட்சியை தவிர்த்து, கூந்தலை மென்மையாக வைத்துக் கொள்ள ஒருசில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். இவற்றால் கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக, பொலிவோடு இருக்கும்.

மேலும் இத்தகைய விஷயங்கள் அனைத்தும் மிகவும் எளிமையானவை. இப்போது கூந்தல் வறட்சியைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், நிச்சயம் கூந்தல் வறட்சியைப் போக்கலாம்.
சீப்பை தவிர்க்கவும் நீளமான கூந்தல் கொண்டவர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இத்தகைய முடி வெடிப்பானது கூந்தல் வறட்சியால் தான் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க, ஈரமாக இருக்கும் போது தலைக்கு சீப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் கூந்தல் உதிர்வதுடன், முடி வெடிப்புக்களும் ஏற்படும்.
http://tamillifeskills1.blogspot.com

ஹேர் பேக் ஹேர் பேக்குகளில் நிறைய உள்ளன. அதில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ரோஜா இதழ்களைக் கொண்டு செய்யப்படும் ஹேர் பேக்குகளை பயன்படுத்தினால், கூந்தல் ஆரோக்கியமாக வறட்சியின்றி இருக்கும்.

பாதாம் பேஸ்ட் பாதாம் பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்தால், வறட்சியினால் பொலிவிழந்து காணப்படும் கூந்தலை பொலிவோடும், பட்டுப் போன்றும் வைத்துக் கொள்ளலாம்.

பால் கூந்தல் வறட்சியை தவிர்த்து, அதனை மென்மையாக வைப்பதற்கு, வாரத்திற்கு ஒரு முறை பாலைக் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இதனால் நாளடைவில் நல்ல மாற்றம் தெரியும்.

எண்ணெய்கள் நல்ல வெதுவெதுப்பான தேங்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டும் கூந்தல் வறட்சியைப் போக்கலாம். அதற்கு அந்த எண்ணெய்களை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து அலசினால், கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

முடியை இறுக்கமாக கட்ட வேண்டாம் தலைக்கு குளித்தப் பின்னர் கூந்தலை இறுக்கமக கட்டாமல், கூந்தலில் உள்ள நீரை பிழிந்து வெளியேற்றி, அப்படியே உலர வைக்க வேண்டும்.

இருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான பல காரணங்கள்!!!
ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கு சரி தலை முடி என்பது கூடுதல் அழகை சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால் அதை அலங்கரிக்கவும், விதவிதமான ஸ்டைல்களை புகுத்தவும், பலரும் முற்படுவர். இப்படி செய்தால் முடியில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா என்ன? அதிலும் முடி கொட்டுவது என்பது இல்லாமல் இருக்குமா? ஆம், அதுவும் இன்றைய சூழ்நலையில், இந்த பிரச்சனை இல்லாதவர்களே இருக்க முடியாது. இன்றைய தலைமுறைக்கு அளவிற்கு அதிகமாகவே முடி கொட்டும் பிரச்சனை நிலவுகிறது.

முப்பது வயதை தாண்டுவதற்கு முன்பாகவே பலருக்கு தலை வழுக்கையாகி விடுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவினருக்கும் பொருந்தும். பொதுவாக ஒரு நாளைக்கு 75-100 முடி கொட்டுவது இயல்பே. அதையும் மீறி கொட்டினால் தான் அதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும். இப்போது இருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

இக்காலத்தில் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையே, முடி கொட்டுவதற்கான முக்கிய காரணமாக திகழ்கிறது. இரவு நேரம் கண் விழித்து பார்ட்டி கொண்டாடுவது பல தீமைகளை ஏற்படுத்தும். அதிலும் மதுபானம் உட்கொள்வது, புகைப்பிடிப்பது மற்றும் அங்கே வீசும் காற்று என இவை அனைத்தும் முடிக்கு எந்த நன்மையையும் செய்துவிடாது. தொடர்ந்து மதுபானம் பருகினால், உணவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின்கள் தடைபட்டு போகும். வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால், ஊட்டச்சத்து குறைந்து, முடிகள் பாதிக்கப்படும்.

மன அழுத்தம் முடி கழிதலுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகும். பரீட்சையை சந்திக்க பயம், நிராகரிப்பை ஏற்க பயம், கல்லூரியில் அனுமதி பெற வேண்டுமென பயம் என இப்படி பல காரணங்களால் இளைய தலைமுறை மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

மாசு மற்றும் சுற்றுப்புற சுகாதார கேடு போன்றவைகளும் கூட முக்கியமான ஒரு காரணம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தொழிற்சாலை பக்கமாக குடியிருக்கிறீர்கள் என்றால், அங்கே நிலவும் மாசு படிந்த சுற்றுச்சூழலும், ரசாயனம் கலந்த நச்சு காற்றும், தலை முடியை வெகுவாக பாதிக்கும். இதனால் தலை முடி தன் பொலிவை இழந்து களையிழந்து காணப்படும்.

புதிய ஹேர் ஸ்டைல் சடையை இறுக்கமாக பின்னுவது அல்லது குதிரை வால் ஸ்டைல் என ஏதாவது புதிய ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கும் போது, முடியை இழுத்து பிடித்து கட்டும் போது, அவை வேரிலிருந்து பிடுங்கி கொண்டு வரலாம். இதனால் இது ஆங்காங்கே முடி இல்லாமல் ஆக்கிவிடும்.

சிகை அலங்கார பொருட்கள் ஹேர் ஸ்ப்ரே, ஜெல் போன்ற சிகை அலங்காரப் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது முடியின் தரத்தை குறைத்துவிடும். நாளடைவில் முடி கழிதலும் ஏற்படும். அதனால் முடிக்கு ஏற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுத்து, அதை மட்டும் பயன்படுத்துங்கள். சந்தையில் உள்ள கண்ட பொருட்களையெல்லாம் பயன்படுத்தாதீர்கள்.
பரம்பரை பிரச்சனையும் கூட முடியின் தரத்திற்கும், அடர்த்திக்கும் ஒரு காரணமாக அமையும். பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்து ஆண்களுக்கு தலையில் வழுக்கை விழுந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்த ஆணுக்கு 30 வயதுக்கு முன்பே சொட்டை தலை உண்டாகலாம். அதை தடுக்க முடியாவிட்டாலும் கூட, வழுக்கை விழும் வயதை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம்.
http://tamillifeskills1.blogspot.com

மன நோய் பைத்தியம், புத்தி பேதளிப்பது மற்றும் மன அழுத்தம் போன்றவைகள் ஒரு நபரை அவர்களின் முடியை பிடுங்கச் செய்யும். இப்படி செய்வதை ட்ரைகோட்டில்மேனியா என்று அழைக்கின்றனர். இப்படி பிடுங்குவதனால் தலையில் ஆங்காங்கே வழுக்கை போன்ற தோற்றம் உண்டாகும். இந்த மன நோயை சரிசெய்தால் தான், இந்த பழக்கத்தை நிறுத்தலாம்.

போதுமான தூக்கமின்மை போதுமான நேரம் தூங்கினால் தான் முடி அணுக்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறும். இரவில் வீட்டில் அதிக நேரம் விழித்திருந்தால் கூட, அது முடியை பாதித்துவிடும்.
நல்ல உணவு அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களுடன் தினமும் நல்ல உணவை உட்கொண்டால், தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் முடியை பாதுகாக்க தேவையான வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து, உடலில் இருப்பது அவசியமானது. இது முடியை ஆரோக்கியமாக வைத்து முடி கழிதலை குறைக்கும்.




🔃மேலும் பல............ 

 இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.

     👇👇👇
Now Download App