Model paper
GRADE-11
SUBJECT-TAMIL
O/L வினாத்தாள் தமிழ்
1) வேயின் திரண்டதோள் வேல்கண்ணாய்இங்கு வேய் என்பது?
1)மாலை 2. மூங்கில்
3. வேய்தல் 4. பனை
2) ஊற்றுழித்தீர்வார் உறவு அல்;லர் உறவு என்பதன் எதிர்ப்பொருட்சொல்?
1. தோழாமை 2. அடிமை
3. தீது 4. பகை
3) மாரவேள்சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் இங்கு மரவேள்என்பவன்?
1. முருகன் 2. சிவன்
3. நந்திவர்மன் 4. மன்மதன்
4) வெற்றி வேலோ உனது நயனங்கள் நயனங்கள் என்பதன் ஒத்தகருத்து சொல்?
1. புருவங்கள் 2. கண்கள்
3. இதழ்கள் 4. பற்கள்
5) முல்லைக்குத் தேர்தந்தான் வள்ளல் பாரி வள்ளல் என்பதன் எதிர்கருத்துசொல்?
1. ஊதாரி 2. கொடையாளி
3. உலோபி 4. ஆண்டி
6) யானையின் இளமை பெயர்?
1. குருளை 2. பிள்ளை
3. பறள் 4. போதகம்
7) பின்வருவனவற்றுள் ஆங்கில மொழி சொல்?
1. சாக்கு 2. பீங்கான்
3. சீமெந்து 4. தகவல்
http://tamillifeskills1.blogspot.com
8) எக்கலையையும் நாம் துறைபோககற்க வேண்டும் துறைபோதல் என்ற மரபுதொடரின் கருத்து?
1. ஏமாற்றுக்காரன்
2 . பொய்இரக்கம்
3. ஏட்டுகல்வியில்கற்கவேண்டும்
4. ஜயந்திரிபட கற்றல் வேண்டும்
9) ஆழுNஐவுழுசுஐNபு என்ற ஆங்கிலசொல்லின் தமிழ் வடிவம்?
1. கருத்தரங்கு
2. மதீப்பீடு
3. கண்காணித்தல்
4. தெளிவுபடுத்தல்
10) பத்து ஆண்டுகள் க~;டபட்டு படிபித்தது விழலுக்கிறைத்த நீர் போல ஆகிவிட்டதேஇங்குவிழலுக்கிறைத்தநீர்என்பது?
1. வீண்முயற்சி
2. வயலுக்குநீர்போய்விட்டது
3. தொல்லைநீங்கியது
4. துயரத்தைவருவித்தது
11) எழுபத்தைந்தாவது விழாவைக் குறிக்கும் பெயர்?
1. பொன்விழா 2. பவளவிழா
3. அமுதவிழா 4. வைரவிழா
12) கற்றாளையின் உள்ளீடு எவ்வாறு அழைக்கப்படும்?
1.சதை 2. சுளை
3. தாளை 4. சோறு
13) எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லக்கு ஒத்தகருத்துள்ள பழமொழியை தெரிவுசெய்க?
1. குடிக்கிறது கூழ் கொப்பளிப்பது பன்னீர்
2. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
3. ஆடமாட்டாதவள் அரங்கு பிழை என்றாளாம்
4. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
http://tamillifeskills1.blogspot.com
14) தொகாநிலைத் தொடராக அமைவது?
1. சேர,சோழ,பாண்டிய
2. நாடுநகர்
3. கலைகளும்மறைகளும்
4. வளர்மதி
15) அறத்தால் வருவதே இன்பம் இதில் வந்த ஏகார இடைச்சொல் தந்த பொருள்?
1. தேற்றம் 2. வினா
3. எதிர்மறை 4. அசைநிலை
16) இடப்பொருளை உணர்த்தும் வேற்றுமை?
1. 2வேற்றுமை 2. 3வேற்றுமை
3. 4வேற்றுமை 4. 6வேற்றுமை
17) வினையாக மட்டும் வரும்சொல்?
1. ஓடு 2. தேடு
3. ஆடு 4. பாடு
18) இறந்தகாலத்தில் அமையக்கூடிய வினை?
1. அறி 2. கொடு
3. நட 4. ஓடு
19) நீள்+நிலம் சேர்த்து எழுதும் போது?
1. நீண்டநிலம் 2. நீநீலம்
3. நீநிலம் 4. நீணிலம்
20) பின்வருவனவற்றில் பொதுப்பெயராக அமைவது?
1. வாழை 2. நகரம்
3. பொன் 4. கல்
21) கொடையாளி இது எவ்வகை பெயர்
1. கூட்டுப்பெயர்
2. ஆக்கப்பெயர்
3. தொழிற்பெயர்
4. வினையால் அணையும் பெயர்
22) கூட்டுப் பெயருக்கு உதாரணம்?
1. கொடையாளி 2. தொலைக்காட்சி 3. முயற்சி 4. பாடல்
23) வந்தான் இதில் வந்தகால இடைநிலை
1. கிறு 2. ந்த்
3. ப்வ் 4. கின்று
24) செய்யாதே எவ்வகை வினைமுற்று
1. ஏவல் ஒருமை வினைமுற்று
2. ஏவல் பன்மை வினைமுற்று
3. எதிர்மறை ஏவல் ஒருமை வினைமுற்று
4. எதிர்மறை ஏவல் பன்மை வினைமுற்று
25) மரூஉ உதாரணமாக அமைவது?
1. கோயில் 2. கைதடி 3. ஜயர் 4. சாம்பல்
26) கற்றான் என்ற சொல்லின் இடைநிலை?
1. கல் 2. ற் 3. ஆன் 4. ல்
27) இடைநிலையை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
1. 1 2. 3 3.6 4. 4
28) பின்வருவனவற்றுள் ஓர் எழுத்து சொல்?
1. மா 2. ஆடு
3. நிலம் 4. ஆலயம்
29) அரசின் வருமானம் சேர்த்து வைக்கப்படும் இடம்?
1. கச்சேரி 2. மாராயம்
3. திறைசேரி 4.கட்டியம்
30) திருக்குறளில் இல்லாத பொருள் வேறெங்கும் இல்லை இங்கு கையாளபட்ட அணி?
1. உவமைஅணி
2. உருவகஅணி
3. உயர்வுநவிற்சிஅணி
4. தற்குறிப்பேற்றஅணி
31) மின்சாரசபையின் நடவடிக்கைகளையும் எதிர்கால செயற்பாடுகளையும் பற்றி அதன்……………ஊழியர்களுக்கு விளக்கமளித்தார்?
1. தலைவர் 2. தவிசாளர்
3. பேராளர் 4. அத்தியட்சர்
http://tamillifeskills1.blogspot.com
32) இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தருக்கு அவர் ஆற்றிய சேவைக்காக மாதா மாதம்………வழங்கப்படும்?
1. ஓய்வூதியம் 2. மானியம்
3. வேதனம் 4. சன்மானம்
33) அவன் கல்கி புத்தகத்தை வாங்குவதற்காக மாதாந்தம்………….செலுத்துகிறான்?
1. சேமிப்புபணத்தை
2. கட்டுபணம்
3. முற்பணத்தை
4. சந்தாப்பணத்தை
34) நூல் ஒன்றிற்கு நூலசிரியர் ஒருவரால் எழுதப்படும் உரை?
1. அணிந்துரை 2. முன்னுரை
3. பதிப்புரை 4. முகவுரை
35) தாயின் கருத்தை செவியுற்று
1. நடந்தானன்று
2. நடந்தானல்ல
3. நடந்தால்லன்
4. நடந்தேனல்லேன்
36) நாம் கற்கும் ஒவ்வொரு விடயமும்
1. எம்மாற் கிரகிக்கலாம்
2. எம்மாற் கிரகிக்கவேண்டும்
3. எம்மாற்கிரகிக்கப்படவேண்டியது
4. எம்மாற்கிரகிக்கப்பட வேண்டியவை
37) கவரிமான்கள் உயிர்நீப்பின் கணப் பொழுதும்
1. உயிர் வாழாது
2. உயிர் வாழமாட்டாது
3. உயிர்வாழா
4. உயிர்வாழும்
38) சரியான வாக்கியத்தை தெரிவு செய்க?
1. பல்கலைக்கழகப்பட்ட மலிப்பு விழா
2. பாடசாலை நாலை இல்லை
3. திணைக்களகம் இன்றுதிறந்து வைக்கபட்டது
4. தம்பி இங்கே வா
39) எழுத்து பிழையான வாக்கியத்தை தெரிவு செய்க?
1. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது
2. நவநீதம்பிள்ளை இன்று யாழ் வருகிறார்
3. நாளைவா பாடசாலைக்கு
4. மே தின கூட்டத்திற்கு மக்கள் சமூகமழித்திருந்தார்கள்
40) வாக்கியத்தை ஒழுங்கமைக்குக.
அ. மொழி இதற்கு விதிவிலக்கல்ல.
ஆ. மாற்றமும் வளர்ச்சியும் ஒரு நிகழ்ச்சியின் இரு அம்சங்களாகும்
இ. அதனால் தொடர்ந்து வளர்ச்சியடைகின்றன
ஈ. வாழும் மொழிகளெல்லாம் இடையுறாது மாற்றத்துக்கு உள்ளாகின்றது.
உ. மாற்றாத எதுவும் வளச்சியடைவதில்லை
1. ஆ,இ,ஈ,அ,உ
2. உ,ஈ,இ,அ,ஆ
3. உ,அ,ஈ,ஆ,இ
4. அ,ஈ,ஆ,இ,உ
🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
👇👇👇
Download now
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...