🌎உலகம் மறந்திருச்சி..🌎
[நிஸ்னி]
மாட்டு வண்டி கட்டி
மச்சான் வாரத
கன்னத்தில் கையூன்றி
வழிபார்த்திருக்கும்
வழக்கத்த மறந்திருச்சி
கலப்பை எடுத்து
நிலத்தை உழுது
வீசி விதைத்த நெல்லையெல்லாம்
அருவா கொண்டு அறுத்தெடுத்து
எரும கொண்டு சூடு மிதிச்சு
கூட்டியெடுத்த நெல்லையெல்லாம்
திண்ணையிலே போட்டு
திண்ணு தெறிச்ச காலம்
மறந்திருச்சி..
கை குத்தல் அரியால
சோர் ஆக்கி
அம்மில அரைச்செடுத்த
சம்பலோட
சோற்றுருண்டை பிடித்து
உண்டது மறந்திருச்சி..
பச்சோல பிண்ணி
ஒரு கூடு செஞ்சி
குசினிப் பக்கம்
கொழுகி வெச்ச
கூட்டுக்குள்ள
கோழி முட்ட இட்டு கொக்கரிக்க,
அதையெடுத்து செப்புக்குள் சேர்ப்பது
மறந்திருச்சி...
கருங்காலி மரங்கொண்டு
கடைஞ்செடுத்த பெட்டகத்தில்
கனமான பொருளெல்லாம்
காப்பதும் மறந்திருச்சி..
களிகொண்டு பூசி
குளுகுளு என்றிருக்கும்
குடிசைகள் மறந்திருச்சி..
குளிர்ச்சியான தரையில
பனையோலை பாய் விரிச்சி முதுகுல
அச்சுப் பதிய ஆழாந்து தூங்கினது மறந்திருச்சி..
முன்னூட்டு பாத்துமாவும்
பின்னூட்டு பார்வதியம்மாவும் வரிசையில் வந்தமர்ந்து
தலை பார்த்து ஊர் கதையளக்கும் காலமும்
மறந்திருச்சி..
விதை விதைச்சி
விழுந்த இலை கூட்டி உரமாக்கி
வளர்த்தெடுத்த செடியில்
விளைஞ்ச காய் பறிச்சி
சொதி வெச்சதும் மறந்திருச்சி..
நுங்கு வெட்டி
வண்டில் செஞ்சி
ஒற்றையடிப் பாதையில்
ஓடி விளையாடினதும் மறந்திருச்சி..
குளத்துக் கட்டுல துணி துவச்சி மூழ்கி குளிச்சதும்
மறந்திருச்சி..
மச்சானுக்கு கடிதம் அனுப்பி மறு பதிலுக்காய்
தபால் காரன் வரும் வழி
தவம் இருந்ததும் மறந்திருச்சி..
குப்பி விளக்கேற்றியதும்
சிம்னி துடைத்து அரைக்கன் லாம்பு
அறையில் தொங்க விட்டதும் மறந்திருச்சி..
பங்காலி வீடு செல்ல
பலகாரம் சுட்டெடுத்து
வண்டில் கட்டி வாழைக் குலையேற்றி வரிசையாய்
போனது மறந்திருச்சி..
ஓர் ஏக்கர் நிலத்துக்குள
ஒரு வீடு இருந்தும் கூட
மாமன் மச்சான் மக்கள் போல் வாழ்ந்த பாட்டன் காலம் மறந்திருச்சி.....
*புத்தளத்துக் கவி*
✍🏽✍🏽 *நிஸ்னி*✍🏽✍🏽
by- நிஸ்னியா.
Frm- கொத்தந்தீவு புத்தளம்.
உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்
👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை
Email- tamillifeskills@gmail.com
🔃மேலும் பல............
இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.👇👇👇
Now Download Me
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...