Thursday, 1 December 2016

அறிவோம் ஆயிரம்

உலகின் மிக அழகான தீவு” நிச்சயம் இது ஒரு அதிசயம் தான்.....!!!!



சுற்றுலா தாகத்தை சாமானியனுக்கும் தட்டி எழுப்பும் எழில் சூழ்ந்த இயற்கை வளமே பிலிப்பைன்ஸில் உள்ள பலவன் தீவு(Palawan Island).தீவுகளில் பலவன் பெரியது. 1780 தீவுகளின் கூட்டமைப்பே பலவன் தீவு. இந்த தீவில் பாதி ரிசார்ட்டாகவே அமைந்துள்ளது.இந்த தீவில் பெரிய வளர்ச்சி ஏதும் ஏற்படுத்தப்படவில்லை, அதனால்தான் இயற்கையின் கட்டுக் குலையாத கவின்மிகு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.இந்த தீவில் வெண் மணல் பீச், அழகிய காடுகள், மலைகள், மலை இடுக்கில் உள்மறைவான தெளிந்த நீர்நிலைகள் என பார்வையாளர்களை மகிழ்விக்கும் இடங்கள் ஏராளம்.


            உலகின் பார்வையில் பலவன்



ஆசியாவின் தென்கிழக்கு பகுதியின் அழகிய தீவாக National Geography Traveler Magazine ல் 2007 ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், உலகின் மிகச்சிறந்த தீவுகளில் 13 வது இடத்தில் உள்ளது.பிலிப்பைன்ஸ் தீவுகள் பல்வேறு விதமான வினோத உயிர்களை கொண்டுள்ளதாகவும், பிலிப்பைன்ஸின் கடைசி எல்லைப்புற சூழலுடைய தீவாகவும் விளங்குகிறது.
http://tamillifeskills1.blogspot.com

   
பலவனில் பார்த்து ரசிப்பது


இந்த தீவின் வடபகுதியில் தெளிந்த நீருள்ள வெள்ளை கடற்கரை,பலவகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் இதன் சுற்றுலா அடையாளங்கள்.பலவன் தீவில் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் பகுதிகள் El Nido மற்றும் Taytay. இங்கு, சுண்ணாம்பு பாறைகள், விதவிதமான நன்னீர் மீன்கள், கடல் நீரில் காணப்படும் பவளப் பாறைகள்,
அங்குள்ள காடுகளில் காணப்படும் 100 க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள், இப்போது அழிந்து வரும் ஆபத்தான ஐந்து வகை கடல் ஆமைகள் பார்த்து ரசிக்க வேண்டியவை.
http://tamillifeskills1.blogspot.com

    கம்போடியாவின் கோ ராங் தீவு


கம்போடியாவில் இன்னும் வளர்ச்சிக்கு உட்படுத்தப்படாத வெப்ப மண்டல தீவானகோ ராங் தீவு போல, பலவன் தீவும் ஸ்கூபா டைவிங், த்ரில்லான மலையேற்றம், காடு, மலைகளுக்கு இடையிலான நீர்நிலைகளில் படகு பயணம் என வீரதீர விளையாட்டு பிரியர்களுக்கு சிறந்த வாய்ப்பளிக்கிறது.
இங்குள்ள பயணிகள் விடுதிகள் அங்குள்ள இயற்கை தகவமைப்புக்கு ஏற்பவே தாவர பாகங்களில் இருந்தே கட்டப்பட்டுள்ளது


      Puerto Princesa


தலைநகரான புயர்டோ ப்ரின்செசாவை, சொர்க்க பூமியில் அமைந்த நகரம் எனலாம். இந்த நகரம் 1970 ம் ஆண்டில் தான் உதயமானது.இந்த நகரிலிருந்து இங்குள்ள வெள்ளை கடற்கரை மற்றும் காடுகளுக்கு செல்வது தூரமில்லை. இங்கு ஷாப்பிங் செய்யும் வசதிகளும் உண்டு.

இந்த நகரின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 1.51 லட்சம்தான். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் செய்கின்றனர்

.வெப்பமும் குளிரும் கலந்த காலநிலை கொண்ட பிரின்செசாவில் செப்டம்பர் மாதம் அதிக மழை பொழியும். பிப்ரவரி மாதம் அதிக வெயிலடிக்கும்.ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நாட்கள் பிரின்செசாவுக்கு பயணிகள் வர ஏற்ற நாட்களாகும். இந்த நாட்களில் கடல் அமைதியாக இருக்கும், வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியஸாக இருக்கும். ஈரப்பதமும் இருப்பதால் இரவில் குளிர் இருக்கும். குளிரை சமாளிக்கும் உடைகளும் அவசியம்.


         Coron


கோரனில் உள்ள முக்கிய சுற்றுலாப்பகுதி. San Vincente இது ஒரு மீன்பிடிகிராமம். இங்கு 14 கி.மீ.க்கு நீளமான வெள்ளை கடற்கரை உள்ளது.
வித்தியாசமான படகுகளில் அமைதியான தெளிந்த கடலில் சவாரி செய்யும் வாய்ப்பு அலாதியான அனுபவம்.
http://tamillifeskills1.blogspot.com

யுனெஸ்கோ பாரம்பரிய பகுதி பலவனில் குகைகளுக்குள் நிலத்தடியில் ஓடும் ஆறு ஒரு பேரதிசயமாக பார்க்கப்படுகிறது. சுமார் 8 கி.மீ. தூரத்துக்கு நிலத்தடியில் தொடராக உள்ள குன்றுகளின் குகைகளுக்குள் ஓடுகிறது.இந்த ஆற்றில் படகு சவாரி செய்யும்பயணிகள் இறைவன் படைப்பில் உள்ள இயற்கை வினோதங்களை எண்ணி வியக்கின்றனர்.இந்த குகைகளும் நிலத்தடி ஆறும் உலகின் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த இயற்கை எழுச்சி உலகின் புதிய 7 அதிசயங்களில் ஒன்றாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் பலவனில் பயணிகள் அதிகம் பார்வையிட்ட பகுதி El Nido வில் உள்ள நிலத்தடி ஆறு தான்.


    பலவன் தீவுக்கு பயண வழி


பலவன் தீவுக்கு மனிலா மற்றும் சிலநகரங்களிலிருந்து வெளிநாட்டு விமானங்களில் பயணிக்கலாம். மேலும் மனிலா, Cebu, Caticlan தீவுகளில் இருந்து உள்நாட்டு விமானங்களிலும் செல்லலாம்.மனிலாவிலிருந்து puerto princesa, Coron, போன்றமுக்கிய நகரங்களுக்கு கப்பலிலும் செல்லலாம். ஆனால், பலவனில் ஒருநகரிலிருந்து இன்னொரு நகருக்குச் செல்ல விமான வசதிகள் இல்லாததால் பயணிகள் 2 நாட்களுக்கு மேல் தங்கி இருந்து முக்கிய இடங்களை ரசிப்பது சரியானது.மனிலாவில் இருந்து பலவனுக்கு செல்வது மிகச்சிறந்த வழியாகும்



       தீவு எனும் தீஞ்சுவை


நெஞ்சை அள்ளும் பரவசம், தண்ணீரிலும் கண்ணாடி பரிமாணத்தை பார்க்க முடியும் என்று பறைசாற்றுவது இந்த பலவன் கடற்கரையே!ஆழக்கடலுக்குள் ஒரு நீள நிலப்பரப்பு, அதன் நெடுகிலும் பசுமை சிரிப்பு, பாதங்களில் பளீர் மணல் விரிப்பு, அழகூட்டும் நிலங்களில் ஆங்காங்கே புஜங்களாக, அரிய அமைப்பில் கரியநிறத்தில் முரட்டு குன்றுகள்.

அதன் தோள்களில்.படுத்திருக்கும் இளம்பாவை போல பசுமைகள்.ஆகாய நீலத்தையும், அருகாமை வனத்தையும் விழுங்கி பிரதிபலிக்கும் பளிங்கு நீரின் மாயநிறத்தில் மனம் மயங்கி மகிழும் பயணிகள்.

காட்சிகள் ஒவ்வொன்றிலும் புதிய வனப்பு, காணும் விழிகளில் நெடுநேர வியப்பு, கவனத்தை முழுதாக கைப்பற்றுகிறது, கனிரச மதுவாக போதையேற்றுகிறது.சுற்றுலா தலங்கள் அழகு, அங்கு குவியும் பயணிகள், அதற்கு கூடும் மற்றுமொருஅழகு.


🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்com
.
👇👇👇
Download now

No comments:

Post a Comment

☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...