கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!-(KARBA KALATHIN POTHU MUTHAL MOONDRU MATHANGALIL SAPIDA VENDIYAVAI)
http://tamillifeskills1.blogspot.com
பசலைக் கீரை
பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.
சிக்கன்
கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
அஸ்பாரகஸ்
கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.
வெண்டைக்காய் .
பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
http://tamillifeskills1.blogspot.com
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.
ப்ராக்கோலி
சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
முட்டை
முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.
சால்மன்
பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.
பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.
🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள். 👇👇👇
Download Now
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...