பாடம்-04
மொழி-ஆங்கிலம்.
2016/12/03
📚SIMPLE PRESENT CONTINUOUS📚
Positive (Affirmative)
நாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் simple present continuous ஐ பயன்படுத்துகின்றோம் அது எளிய நிகழ்காலம் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
🔹Present continuous ஐ பயன்படுத்துவது எப்படி
# Subject + Auxiliary verb + Main verb with ing
1. I + am + doing a job
2. He/ She/ It + is + doing a job.
3. You/ We/ They + are + doing a job.
இவ்வாக்கிய அமைப்புகளில் (Subject) வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளதை கவனிக்கவும். அத்துடன் இந்த Form ல் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள்.
http://tamillifeskills1.blogspot.com
EX:-
* I am waiting for you.
* You are reading this book
* She is staying in kinniya.
🔹Present continuous ஐ (Negative)- எதிர்மரை யாக மாற்றுவது எப்படி
Subject + Auxiliary verb + not + Main verb with ing
1.I + am + not + doing a job
2. He/ She/ It + is + not + doing a job.
3. You/ We/ They + are + not + doing a job.
EX:-
* She is not singing song
* I'm not a beautician
* Nishan is not a single person
🔹present continuous ஐ question (Interrogative) ஆகா அமைப்பது எப்படி?
Auxiliary verb + Subject + Main verb with ing
1. Am + I + doing a job?
2. Is + he/ she/ It + doing a job?
3. Are + you/ we/ they + doing a job?
கேள்விகளின் போது "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb "துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.
EX:-
* Is he watching TV??
* Are you waiting for John?
☄Is he doing a job?
அவன் ஒரு வேலை செய்துக்கொண்டிருக்கின்றானா?
- Yes, he is doing a job. (he’s)
ஆம், அவன் ஒரு வேலை செய்துக்கொண்டிருக்கின்றான.
- No, he is not doing a job. (isn’t)
இல்லை, அவன் ஒரு வேலை செய்துக்கொண்டிருக்கவில்லை.
☄Is she going to school?
அவள் பாடசாலை போய்க்கொண்டிருக்கின்றாளா?
-Yes, she is going to school. (she’s)
ஆம், அவள் பாடசாலைக்கு போய்க்கொண்டிருக்கின்றாள்.
- No, she is not going to school. (isn’t)
இல்லை, அவள் பாடசாலைக்கு போய்க்கொண்டிருக்கவில்லை.
☄Is it working?
அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதா?
- Yes, it is working. (it’s)
ஆம், அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றது.
-No, it is not working. (isn’t)
இல்லை, அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதில்லை.
🔺கவனத்திற்கு🔺
http://tamillifeskills1.blogspot.com
▪It’s
It + is என்பதன் sort form காவே It's பயன்படுகின்றது.
▪It’s
It + was என்பதன் sort form ஆகவும் It's பயன்படும்.
▪It’s been
It + has been என்பதன் sort form ஆக It's been என பயன்படும்.
(இவ்வாறான சந்தர்ப்பங்களில் " It's" உடன் "been" இணைந்து பயன்படுவதை அவதானிக்கலாம்.)
Its
Its "இதனுடையது" என்று பொருள்படும்.
SIMPLE PRESENT PERFEOF
Rules
அநேகமாக நிகழ்கால வினைமுற்றின் பயன்பாட்டில் எமது அனுபவத்தை பற்றியே பேசப்படுகின்றது. மிக முக்கியமாக நாம் என்ன செய்திருக்கிறோம், என்ன செய்திருக்கவில்லை என்பதைப் பற்றியே இவ்வாக்கிய அமைப்புகள் விவரிக்கின்றன. இதில் எப்பொழுது செய்தோம் என்பதற்கு இவ்வாக்கிய அமைப்புகள் முக்கியமளிப்பதில்லை. (It is important if we have done it in our lives or not. It is not important when we did it.)
🔹இவற்றில் I, You, We, You, They போன்றவற்றுடன் “have” துணைவினையாகவும், He, She, It போன்ற மூன்றாம் நபர் (Third Person Singular) உடன் “has” துணைவினையாகவும் பயன்படும்.
http://tamillifeskills1.blogspot.com
Positive (Affirmative)
🔻Subject + Auxiliary verb + Main verb (Past participle)
1.I/ You/ We/ They + have + done a job.
2.He/ She/ It + has + done a job.
இவற்றில் துணைவினை (Auxiliary verb) உடன் இணைந்து வரும் பிரதான வினைச்சொல் "Past participle" சொல்லாக பயன்படுவதை அவதானியுங்கள்.
EX:-
* Lisha has broken the glass
* I have eaten meal
* She has learnt a lesson
Simple present perfect tence ஐ Negative - எதிர்மரை
🔻Subject + Auxiliary verb + not + Main verb(Past participle)
1.I/ You/ We/ They + have + not + done a job.
2.He/ She/ It + has + not + done a job.
EX:-
* I don't believe we have met.
*He has not been watering the plants for two hours.
* I have not been studying since 3 O’clock
🔹Present perfect tence ஐ Question (Interrogative) ஆகா மாற்றுவது எப்படி?
🔻Auxiliary verb + Subject + Main verb (Past participle)
1.Have + I/ you/ we/ they + done a job?
2.Has + he/ she/ it + done a job?
இவற்றில் Have/ Has துணைவினைகள் முன்பாகவும் "Subject" உடன் இணைந்து வரும் பிரதான வினை “Past participle” வினைமுற்றுச் சொல்லாக பயன்படுவதை அவதானிக்கவும்.
EX:-
* has she answered your letter?
* have you a white dress?
http://tamillifeskills1.blogspot.com
நிகழ்கால வினைமுற்று பயன்பாடுகள்
1. Actions started in the past and are still continuing
🔹He has lived in America for five years.
அவன் வசித்திருக்கிறான் அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளாக.
("அவன் வசித்துக்கொண்டிருக்கிறான் அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளாக." என்பதுப் போன்றும் இதுபோன்ற பயன்பாடுகளின் போது தமிழில் பொருள் கொள்ளலாம்.)
அவன் வசிக்க ஆரம்பித்தான் அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, (இறந்தக்காலத்தில்) இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறான் அங்கே. (நிகழ்காலத்தில்) (He started living in America five years ago, and he's still living there now.) எதிர்காலத்திலும் வசிக்கலாம்.
(இவ்வாக்கிய அமைப்புகள் இறந்தக்காலத்தில் தொடங்கி தற்பொழுதும் தொடரும் செயலை அல்லது சம்பவத்தை விவரிப்பவைகள்.)
2. Actions which happened at some unknown time in the past
உங்கள் நண்பர் ஒருவர் உங்களை “ரேமோ” திரைப்படம் பார்ப்பதற்கு அழைக்கின்றார். நீங்கள் அத்திரைப்படத்தை ஏற்கெனவே பார்த்திவிட்டீர்கள். ஆனால் எப்பொழுது பார்த்தேன் என்று திட்டவட்டமாக கூற பார்த்த நாள் நினைவில்லை அல்லது கூறவிரும்பவில்லை. மீண்டும் அப்படத்தை பார்க்க வேண்டிய எண்ணமும் உங்களுக்கு இல்லை. அப்பொழுது தமிழில் எப்படி கூறுவீர்கள்? நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன் அந்த திரைப்படத்தை.
I already seen that film.
நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன் அந்த திரைப்படம்.
(செயல் குறிப்பிடப்படாத அல்லது அறியப்படாத நேரத்தில் நிகழ்ந்துள்ளது.)
3. Actions which happened in the past, but have an effect in the present
நீங்கள் காலையில் வேலைக்கு போகும் போது வீட்டை பூட்டிவிட்டு சாவியை காற்சட்டை பையினும் போட்டு எடுத்துச்செல்கின்றீர்கள். வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பி வீட்டை திறப்பதற்கு சாவியை எடுக்கிறீர்கள்; ஆனால் சாவியை காணவில்லை. சாவி எங்கோ தொலைந்து விட்டது. ஆனால் எப்பொழுது எங்கே தொலைந்தது என்பது உங்களுக்கு திட்டவட்டமாகHaven யாது. ஆனால் தொலைந்திருக்கிறது.
http://tamillifeskills1.blogspot.com
இவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வாறு தமிழில் கூறுவீர்கள்?
“ஐய்யய்யோ! நான் தொலைத்திருக்கிறேன் எனது சாவியை.” (எப்பொழுது எங்கே தொலைத்தீர்கள் என்பது தெரியாது)
I have lost my keys
நான் எனது சாவியை தொலைத்திருக்கிறேன்.
(இவ்வாக்கியத்தில் தொலைந்தது (இறந்தக்காலத்தில்), அது தொலைந்தது என்பதை உணரப்படுகின்றது இப்பொழுது. (நிகழ்காலத்தில்))
4. Recently completed action
செயல் தற்பொழுது முடிவடைந்திருக்கிறது. நான் வேலை செய்ய தொடங்கியது, (இறந்தக் காலத்தில்) அதை நிறைவு செய்திருக்கிறேன் இப்பொழுது. (நிகழ்காலத்தில்)
I have just done a job.
நான் இப்பொழுது செய்திருக்கிறேன் ஒரு வேலை.
(இவ்வாக்கிய அமைப்புகள் இறந்தக்காலத்தில் ஆரம்பமான ஒரு நிகழ்வு அன்மையில் முற்றுப்பெற்றுள்ளதை விவரிக்கின்றன.)
குறிப்பு:
இந்த Present Perfect” பயன்பாட்டின் பொழுது கேள்விகளுக்கான பதில்கள் அதிகமாக சுருக்கமாகவே பயன்படுத்தப் படுகின்றன.
உதாரணம்:
Have you cooked lunch?
Yes, I have.
No, I haven’t.
பகுதி-05 அடுத்த வாரம் தொடரும்...
BY- INSTRUCTORS OF ENGLISH
Name- HalishaFrom- srilanka (kinniya)
Name- Riyasha
From-Srilanka (kalpity)
ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇
Email:-tamillifeskills@gmail.com
🔃மேலும் பல............
இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.👇👇👇
Now Download App
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...