ஆண்கள் தங்கள் அழகை வெளிக்காட்ட செய்ய வேண்டியது
ஆண்கள் தங்கள் அழகை வெளிக்காட்ட, உடல் கட்டமைப்பை மெருகேற்ற எண்ணுவார்கள்.
அதனையே பெண்களும் ஆண்களிடம் விரும்புகிறார்கள். அதனால் ஆண்கள் உடம்பை ஏற்ற மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிடுகிறார்கள்.
நல்ல உடல்கட்டு வேண்டும் என்று எண்ணுபவர்கள் எப்போதும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. உடல் கட்டமைப்பில் உண்ணும் உணவும் முக்கிய இடம் பிடிக்கிறது.
ஆகவே போதிய உடற்பயிற்சியுடன், சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சிக்கு ஈடாக ஆரோக்கியமான உணவும் உடல் கட்டமைப்பை மெருகேற்ற உதவுகிறது.
https://tamillifeskills1.blogspot.com
ஓட்ஸ் கஞ்சி
ஓட்ஸ் கஞ்சியில் அதிக நார்ச்சத்து உள்ளதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை நோயை குறைக்கும். மற்றும் கொழுப்பு தேங்குதலை குறைக்கிறது.
முட்டை
உடல் கட்டமைப்பை ஏற்ற நினைப்பவர்கள் கண்டிப்பாக முட்டைகளை சாப்பிட வேண்டும். இதில் விற்றமின் ஏ, டி, ஈ, கோலைன், நல்ல கொழுப்பு மற்றும் புரதச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
பாலாடைக்கட்டி
உடல் கட்டமைப்பை ஏற்ற விரும்புபவர்களுக்கு பாலாடைக்கட்டி ஒரு வரப்பிரசாதமே. இதில் பால் மற்றும் மோரின் புரதம் அதிக அளவில் உள்ளது.
வேர்க்கடலை வெண்ணெய்
புரதச்சத்து, விற்றமின்கள், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துபோன்றவை நிறைந்தது தான் நிலக்கடலை வெண்ணெய். இதை அளவாக எடுத்துக் கொண்டால், இதய தசைகளை மேம்படுத்தி, கொழுப்பை குறைக்க உதவும்.
https://tamillifeskills1.blogspot.com
நண்டு
நண்டு, எலும்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். இதில் ஜிங்க் மற்றும் தேவையான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் நிறைந்துள்ளதால், இது தசைக்கு பலத்தையும், உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
வாழைப்பழம்
உடலை ஏற்றுபவர்கள் பலரும் அதிகப்படியாக சாப்பிடுவது வாழைப்பழத்தை தான். இதில் ட்ரிப்டோபைன் நிறைந்திருப்பதால், இது செரோடோனின் உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து, நரம்புகளை சாந்தப்படுத்தும். மேலும் இதில் உணவு கட்டுப்பாட்டுக்கு உறுதுணையாக நிற்கும் மெக்னீசியம் மற்றும் கல்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பின் ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக இருக்கும்.
மிளகாய்
உணவில் மிளகாய் சேர்ப்பதனால், உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை இது தடுக்கும். உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.
https://tamillifeskills1.blogspot.com
சர்க்கரைவள்ளி கிழங்கு /
வற்றாளைக் கிழங்கு
சர்க்கரைவள்ளி கிழங்குகளில் கார்போவைரேட் அதிகம் நிறைந்து உள்ளது. இதிலுள்ள சர்க்கரை ஆக்கத்திறன் மற்றும் தாங்கு திறனை அதிகரிக்க செய்யும்.
அத்திப்பழம்
இரும்பு போல உடலை வளர்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். அத்திப்பழத்தில் தேவையான கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலில் உள்ள அமிலம் மற்றும் காரத் தின் (Alkali) அளவை சமநிலையோடு வைத் துக் கொள்ளலாம்.
காளான்
காளான் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது.
இறைச்சி
ஆட்டு இறைச்சியில் அதிகமான அளவில் விலங்கின புரதம் இருக்கிறது. அதனால் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
https://tamillifeskills1.blogspot.com
பருப்பு வகைகள்
சரியான உடல் கட்டமைப்பு வேண்டுமானால், பருப்பு வகைகளை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் வழமையான புரதச்சத்து, அதிமுக்கிய விற்றமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளதால், தசைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சால்மன் மீன்
சால்மன் மீனில் அதிக அளவு மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளது. மேலும் இதில் அலர்ச்சியை தடுக்கும் குணங்கள் அடங்கியிருப்பதால், உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடுவதற்கு சிறந்த உணவாகும்.
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...