என் இனிக்கும்
பள்ளி நாட்கள்..
புத்தகப்பை சுமந்து தாயின் பின்னே ஒழிந்து தண்ணீர் போத்தலும் கையுமாய்
பாடசாலையினுள்
நுழைந்த அந்த முதல்
அனுபவம் ஞாபகம்
வருகின்றது
பூ மலையில் நளைந்து
புது நண்பர்களை சந்தித்து புன் முருவலுடன் அரவணைக்கும்
ஆசிரியையை பார்த்து
மகிழ்ந்த அந்த முதல்
அனுபவம் ஞாபகம்
வாருகின்றது
தாயை பிரிய முடியாமல் கண்ணீர்
வாடித்துக் கொண்டு
தாயின் பின்னே ஓடிச்சென்ற போது பல கைகள் வந்து என் கண்ணீரை துடைத்த அனுபவம் ஞாபகம்
வருகின்றனது
பருவம் புரியாத வயதில் தாயின் மறு பிறவியாய் இருந்து
என்னை காத்த ஆசிரியையின் முகமும் என்னுடன் சேட்டைகள் செய்து மகிழும் என் நண்பர்களின் முகங்களும் ஞாபகம்
வருகின்றது
மாலை வகுப்பு முடிந்ததும் பெய்த அடை மலையில் நளைந்து வீடு சென்ற
போது பாசப் பார்வை வீசி பேசிய தாயின்
வார்தைகள் ஞாபகம் வருகின்றது பாராட்டுகளுக்கும் மகிழ்வுகளுக்கு ஆசைபடும் அந்த இளமை பருவத்தில் நண்பர்களோடு சேட்டை செய்த நினைவுகள் ஞாபகம்
வருகின்றது
சோதனைகள் வந்து என்னை சந்திக்கும் போது
அதன் தீர்வுகளாய் என்
முன் ஜொலிக்கும்
நண்பர்களின் முகம் ஞாபகம் வருகின்றது
நான் சாதனைகள் படைக்கம் போது என் சந்தோசங்களோடு பறந்து என்னை பாராட்டி
என் திறமைகளுக்கு பட்டை தீட்டிய என்
தோழர்களின் முகம் ஞாபகம் வருகின்றது
என்னுள் உறங்கி கொண்டிருந்த என் திறமைகளை தட்டி எழுப்பி ஆர்வமூட்டிய
என் ஆசின்களின் முகம் ஞாபகம் வருகின்றது
இத்தனை
அனுபவங்களையும்
நினைத்து நண்பர்களோடு கூடி
அழும் என் மனதை என்னால் ஆருதல்
படுத்த முடியவில்லையே
இந்த இனிமையான
நினைவுகளை நினைத்து கண்ணீர் சிந்தும் என் கண்களுக்கு சமாதானக் கொடி காட்ட என் மனம்
தயங்குகின்றது
பலர் கசப்பென்று
நினைத்துக் கொள்ளும் இந்த பள்ளி நாட்களில் இவ்வளவு இனிமைகள் இருக்கின்றதா என என் மனம் வியக்கின்றது
என பாடசாலை
அரவணைக்கும் ஆசான்கள் அன்பு மிகு நண்பர்கள் இவற்றை
எல்லாம் பிரிந்து செல்லும் நாள் இதுவா
என என் மனம் தவிக்கின்றது
கடந்து சென்ற நாட்களை வாழ்வதற்கு இறைவன் ஒரு வரம்
தர மாட்டானா என என்
மனம் ஏங்குகின்றது
நான் எங்கு சென்றாலும் என்
பள்ளி நாட்களை என்
மனம் ஒரு போதும்
மறக்காது
I miss my school life
by- சஸ்னா பேகம்.
Frm- கொத்தாந்தீவு புத்தளம் இலங்கை
உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்
👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை
Email- tamillifeskills@gmail.com
No comments:
Post a Comment
☝☝☝உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்...