Monday, 26 December 2016

மொழிகள் பல கற்போம் ஆங்கிலம் பகுதி-6

பாடம்- ஆங்கிலம்

பகுதி-6

காலம்-2016.12.19



PARTS OF BODY -உடலுறுப்புகள்


1. Head - தலை
2. Eyes - கண்கள்
3. Ears - காதுகள்
4. Cheek - கன்னம்
5. Nose - மூக்கு
6. Mouth - வாய்
7. Neck -கழுத்து
8. Nipple - முலைக்காம்பு
8. AShoulder - தோள்/புயம்
9. Chest - மார்பு/நெஞ்சு
9. ARib - விலா (எலும்பு)
10. Breast - மார்பு (பெண்)


11. Arm - கை
12. Elbow - முழங்கை
13. Abdomen - வயிறு
14. Umblicus/Bellybutton - தொப்புள்/நாபி
15. Groins - கவட்டி
16. Wrist - மணிக்கட்டு
17. Palm -உள்ளங்கை
18. Fingers - விரல்கள்
19. Vegina/Vulva - யோனி/புணர்புழை
20. Penis - ஆண்குறி


20. ATesticle/scrotum - விரை
21. Thigh - தொடை
22. Knee - முழங்கால்
23. Calf -கெண்டைக்கால்
24. Leg -கால்
25. Ankle - கணுக்கால்
26. Foot - பாதம்
27. Toes - கால் விரல்கள்
28. Wrist -மணிக்கட்டு
29. Palm - உள்ளங்கை
30. Thumb - கட்டைவிரல்


31. Little Finger - சுண்டுவிரல்
32. Ring Finger -மோதிரவிரல்
33. Middle Finger - நடுவிரல்
34. Index Finger - சுட்டுவிரல்
35. Knee - முழங்கால்
36. Calf - கெண்டைக்கால்
37. Leg - கால்
38. Lowerleg - கீழ்கால்
39. Ankle - கணுக்கால்
40. Toes - கால் விரல்கள்


41. Toenails - கால்(விரல்) நகங்கள்
42. Foot - பாதம்
43. heel - குதிகால்
44. Fist - கைமுட்டி (மூடிய கை)
45. Nail - நகம்
46. Knuckle - விரல் மூட்டு
47. Muscle - தசை
48. Skin - தோல்
49. Hair - முடி
50. Forehead - நெற்றி


https://tamillifeskills1.blogspot.com
51. Eyebrow - கண் புருவம்
52. Eyelash - கண் இரப்பை மயிர்/ கண் மடல் முடி 
52. AEyelid - கண் இரப்பை/கண் மடல்/கண் இமை
53. Eyeball - கண்மணி
54. Nose - மூக்கு/நாசி
55. Nostril -  மூக்குத்துவாரம்/நாசித்துவாரம்
56. Face - முகம்
57. Chin - முகவாய்க் கட்டை
58. Adam's apple - குரல்வளை முடிச்சு (ஆண்)
59. Mustache - மீசை

60. Beard - தாடி
61. Lip - உதடு
62. Uvula - உள்நாக்கு
63. Throat - தொண்டை
64. Molars - கடைவாய் பல்
65. Premolars - முன்கடைவாய் பல்
66. Canine - கோரை/நொறுக்குப் பல்
67. incisors - வெட்டுப் பல்
68. Gum - பல் ஈறு
69. Tongue - நாக்கு
70.Bellyவயிறு (குழிவானப் பகுதி)

71.Back - முதுகு
72.Backbone-முதுகெலும்பு
73. Ribbone -விலாவெலும்பு
75. Anus/asshole - குதம்
76. Skull - கபாலம்/மண்டையோடு
77. Muscular - தசை
78. Nerve - நரம்பு
79. Endocrine - சுரப்பி
80. Hip - இடுப்பு

https://tamillifeskills1.blogspot.com
81. Lung - நுரையீரல்
82. Heart - இதயம்
83. Kidney - சிறுநீரகம்
84. Brain - மூளை



                                           Vegetable Names in Tamil



* Amaranth - முளைக்கீரை

* Artichokeகூனைப்பூ

* Ash Gourd, Winter Melon - நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய்

* Asparagus - தண்ணீர்விட்டான் கிழங்கு

* Beans - விதையவரை

* Beet Root - செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு

*Bitter Gourd - பாகல், பாகற்காய்

* Black-Eyed Pea, Cowpea - தட்டாப் பயறு

* Black-Eyed Peas - தட்டைப்பயறு

* Bottle Gourd -சுரைக்காய்

* Broad Beans -அவரைக்காய்

* Broccoli - பச்சைப் பூக்கோசு

* Brussels Sprouts - களைக்கோசு

* Cabbage - முட்டைக்கோசு, முட்டைக்கோவா

* Capsicum / Bell Pepper - குடை மிளகாய்

* Carrot - மஞ்சள் முள்ளங்கி

* Cauliflower -பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா

* Celery - சிவரிக்கீரை

* Chilli, Green Chilli - பச்சை மிளகாய்

* Chilli, Red Chilli - சிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய்

* Cilantro - கொத்தமல்லி
https://tamillifeskills1.blogspot.com

* Cluster Beans, French Beans - கொத்தவரங்காய்

* Collard Greens - சீமை பரட்டைக்கீரை

* Colocasia - சேப்பங்கிழங்கு

* Coriander - கொத்தமல்லி

* Corn, Indian Corn, Maize - மக்காச் சோளம்

* Cucumber - வெள்ளரிக்காய்

* Curry Leaf - கறிவேப்பிலை

* Drum Stick - முருங்கைக்காய்

* Eggplant, Aubergine, Brinjal - கத்தரிக்காய்

* Elephant Yam - கருணைக்கிழங்கு

* Fenugreek leaves - வெந்தயகீரை

* French Beans - நாரில்லா விதையவரை

* Garlic - பூண்டு, வெள்ளைப் பூண்டு

* Ginger - இஞ்சி

* Gogu - புளிச்ச கீரை

* Gooseberry - நெல்லிக்காய் 

* Green Beans - பச்சை அவரை

* Ivy Gourd, Little Gourd - கோவைக்காய்

* Kale - பரட்டைக்கீரை

* King Yam - ராசவள்ளிக்கிழங்கு

* Kohl Rabi - நூல்கோல்

* Lady’S Finger - வெண்டைக்காய் 

* Leafy Onion -வெங்காயக் கீரை

* Leek - இராகூச்சிட்டம் 

* Lettuce - இலைக்கோசு

* Lotus Root - தாமரைக்கிழங்கு

* Mushroom - காளான்

* Mustard Greens -கடுகுக் கீரை

* Olive - இடலை

* Onion - வெங்காயம்

*Parsley - வேர்க்கோசு

* Peas - பட்டாணி

* Peppermint Leaves - புதினா

* Plantain - வாழைக்காய்

* Plantain - வாழைக்காய்

*Plantain Flower - வாழைப் பூ 

* Plantain Stem - வாழைத்தண்டு 

* Potato  - உருளைக்கிழங்கு

* Pumpkin - பூசணிக்காய், பரங்கிக்காய்

* Radish - முள்ளங்கி

* Red Carrot - செம்மஞ்சள் முள்ளங்கி

* Ridge Gourd - பீர்க்கங்காய்
https://tamillifeskills1.blogspot.com

* Snake Gourd - புடல், புடலங்காய்  

* Snake Gourd, Pointed Gourd -புடலங்காய்

* Spinach - பசலைக்கீரை, முளைக்கீரை

* Spring Onion - வெங்காயத்தடல்

* Squash Gourd -சீமைப்பூசனி(க்காய்)

* Sweet Potato - சர்க்கரைவள்ளிக்கிழங்கு

* Tapioca -மரவள்ளி(க்கிழங்கு)

* Tomato - தக்காளி

* Turnip -கோசுக்கிழ‌ங்கு

* Yam -சேனைக்கிழங்கு

* Zucchini - சீமைச் சுரைக்காய்




Spoken English tips in Tamil

இந்த வீடியோ இணைப்பை பார்க்கவும்
👇👇👇👇




ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் ஒரே மாதிரியாக தோன்றினாலும் அவை வெவ்வேறு பொருளை கொடுப்பதால் நாம் அவற்றை பயன் படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இத்தகைய வார்த்தைகளை ஆங்கிலத்தில் Confusibles  என்று சொல்வார்கள்.


உதாரணமாக:-

1) Childish, Childlike.

  ‘Childish’' 'சின்னபுள்ள' தனமாக நடந்து கொள்வது என்று பொருள்.

 (Behaving like a child)


இதில் எதிர்மறையான கருத்து (negative overtone) அடங்கியுள்ளது.

பெரியவர்கள் சிறுபிள்ளை மாதிரி பிடிவாதமாகவோ அல்லது சிறுபிள்ளைகளுக்குரிய மற்ற குணங்களையோ கொண்டு வயதிற்கு பொருத்தமில்லாத செயல்களில் ஈடுபடும்போது அது முட்டாள் தனமாக தோற்றமளிக்கும்.  எனவே தான் Childish என்பதை Foolish/Immature என்ற அர்த்தத்திலும்  பயன் படுத்தலாம்.

உதாரணம்:-

Don’t be so childish!
சின்னபுள்ள தனமா நடந்துக்காதே!

 'Childish ' என்றால் குழந்தையை போல என்று பொருள்.


ஒருவர் ஒரு குழந்தைக்குரிய இனிமையான குணாதியசங்களை கொண்டிருந்தால் (pleasant qualities of a child) அவற்றைப் பற்றி குறிப்பிடும்போது  Childlike  என்ற வார்த்தையை உபயோகப்படுத்தலாம்.  உதாரணமாக சிலர் கள்ளங்கபடமில்லாதவர்களாக இருப்பர்.  அவர்களுடைய சிரிப்போ பேசும் விதமோ ஒரு குழந்தையை போல இருக்கும்.  இந்த குணம் அனைவராலும் விருப்பப்பட, ரசிக்கப்பட கூடியது.  இது ஒரு positive meaning கொண்ட வார்த்தை.
https://tamillifeskills1.blogspot.com

உதாரணம்:-

* He followed me with childlike trust.
அவன் என்னை, குழந்தையைப்போல நம்பி பின்பற்றி வந்தான்.

2)  Continual, Continuous.

Continual- விட்டு விட்டு தொடர்ந்து (going on with only short breaks)

ஒரு செயல் கொஞ்சம்  இடைவேளை விட்டு மீண்டும்  தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் அதற்கு  Continual என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

உதாரணமாக:

* It rained continually yesterday.
நேற்று விட்டு விட்டு தொடர்ந்து மழைபெய்தது.

* I am tired of this continual rain.
இப்படி மழை விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்வது எனக்கு சலிப்பை சோர்வை  ஏற்படுத்துகிறது.

ஒருவேளை நீங்கள் வெளியில் போக நினைத்திருந்த நேரத்தில் மழை ஓயாமல் விட்டு விட்டு தொடர்ந்து பெய்து கொண்டிருந்தால் நீங்கள் சலிப்புடன் இப்படி சொல்லலாம்.


• Continuous- இடைவேளை இல்லாமல் தொடர்ந்து நடக்கும் செயயலைக் குறிக்க இந்த வார்த்தையை உபயோகப்படுத்தலாம்.(going on without a break with an end in sight)

உதாரணம்:-

* We had Continuous rains for two hours this morning.
இன்றைக்கு காலையில தொடர்ந்து 2மணி நேரமா மழை பெய்தது.  மழை 2மணி நேரமாக எந்த இடைவெளியும்  இல்லாமல் பெய்து ஓய்ந்தது என்பதைக் குறிக்க  ‘Continuous’ ' குறிக்கலாம்.

வேறு சில உதாரணங்கள்:


1)    Hire-  குறுகிய காலத்துக்கு வாடகைக்கு எடுத்தல்
We hire auotos and Taxis

   Rent- நீண்ட காலத்துக்கு வாடகைக்கு எடுத்தல்.

We rent houses/ rooms.

2)   Invaluable - விலை மதிக்க முடியாத அளவுக்கு உயர்ந்தது.


BY INSTRUCTOR OF ENGLISH

Name- Halisha
From- srilanka (kinniya)

Name- Riyasha
From-Srilanka (kalpity)

பகுதி-07 அடுத்த வாரம் தொடரும்...)



ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com




🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
👇👇👇


மொழிகள் பல கற்போம் சிங்களம் பகுதி- 6

பாடம்-சிங்களம்
பகுதி-6
காலம்-2016.12.21



ප්රශන වචන[ப்ரஷ்ன வசன ]கேள்வி வார்த்தைகள்வார்த்தைகள்




පොදු ස්ථානවල දී තම්  වැඩවල ඉටුකර ගැනීමට බාවිතා කරන වචනවල බලමු
[பொது ஸ்தானவல தீ தம் வெடவல இடுகர கெனீமட பாவிதா கரன வசனவள பலமு]
பொது இடங்களில் தமது வேலைகளை முடித்துக் கொள்வதற்காக  பாவிக்கும் வார்த்தைகளை பார்ப்போம்.

මොකක්ද ?
[மொகக்த]
என்ன?

කොහේද ?
[கொஹெத]
எங்கே?

කොහොමද ?
[கொஹொமத]
எப்படி?

කවදාද ?
[கவதாத]
எப்போதும்?
https://tamillifeskills1.blogspot.com

ඇයි ?
[அய்]
ஏன்?

කියද ?
[கியத]
எத்தனை/எவ்வளவு?

කියටද ?
[கியடத]
எத்தனை மணிக்கு?

කවුද ?
[கவுத]
யார்?

කාටද ?
[காடத]
யாருக்கு?

කොෙහන්ද ?
[கொஹெந்த]
எங்கிருந்து?

කාගෙද?
[காகெத]
யாருடையது?



* මොකක්ද ?[மொகக்த]என்ன


ඔයාගේ නම මොකක්ද?
[ஒயாகேg நம  மொகக்த]
உங்கள் பெயர் என்ன

මෙ පොත මොකක්ද ?
[மே பொத மொகக்த]
இந்த புத்தகம் என்ன

අර පාට මොකක්ද ?
[அர பாடt மொகக்த]
அந்த நிறம் என்ன

මොකක්ද වුණේ?
[மொகக்த வுனே]
என்ன நடந்தது

ඔබේ පියාගේ රැකියාව මොකක්ද?
[ஒபேb பியாகே ரெகியாவ மொகக்த]
உன்னுடைய அப்பாவின் தொழில் என்ன

ඔයාගේ පාසල් නම මොකක්ද?
[ஒயாகே பாசல் நம மொகக்த]
உங்களுடைய பாடசாலை பெயர் என்ன

එකට මොකක්ද ?
[ஏகடt மொகக்த]
அதற்கு என்ன

ඔයාගේ අම්මගේ නම මොකක්ද?
[ஒயாகேg அம்மகேg நம மொகக்த]
உங்களுடைய அம்மாவின் பெயர் என்ன

 මෙ පින්තුරය මොකක්ද ?
[மே பின்தூரய மொகக்த]
இந்த உருவம் (படம்)  என்ன
https://tamillifeskills1.blogspot.com



* කොහේද?[கொஹெத]எங்கே


ඔයාගේ ගෙදර කොහේද ?
[ஒயாகேg கெgதdhர கொஹெத]
உங்களுடைய வீடு எங்கே

ඔයාගේ ගමට යන්නේ පාර කොහේද ?
[ஒயாகேg கgமடt யன்னே பார கொஹெத]
உங்களுடைய ஊருக்கு செல்லும் வழி (பாதை) எங்கே

වැසිකිලිය කොහේද?
[வெசிகிலிய கொஹெத]
மலசலகூடம் எங்கே

ඔයාගේ පාසල පිහිටා ඇත්තේ කොහේද?
[ஒயாகேg பாசல பிஹிடாt அeaத்தே கொஹெத]
உங்களுடைய பாடசாலை எங்கே அமைந்துள்ளது

 මේ බස යන්නේ කොහේද?
[மே பbஸ யன்னே கொஹெத]
இந்த பஸ் எங்கே போகின்றது

 නුවර බස් නැවතුම කොහේද?
[நுவர பbஸ் நெவதும கொஹெத]
கண்டி பஸ் தரிப்பிடம் எங்கே

 රෝහල පිහිටා ඇත්තේ කොහේද ?
[ரோகல பிஹிடா எத்தே கொஹெத]
வைத்தியசாலை எங்கே உள்ளது

වෛදවරයා ඉන්නේ කොහේද?
[வைத்யவரயா இன்னே கொஹெத]
வைத்தியர் எங்கே இருக்கிறார்

 පළතුරු  ගන්නේ කොහේද?
[பலதுரு கன்னே கொஹெத]
பழங்கள் எடுப்பது எங்கே

ඔයාගේ ගම කොහේද?
[ஒயாகேg கgம கொஹெத]
உங்களுடைய ஊர் எங்கே

 කොහේද ඔයාට යන්න ඔන?
[கொஹெத ஒயாடt யன்ன ஓன]
எங்கே உங்களுக்கு போக வேண்டும்

වෙළඳ පොලට යන්න පාර කොහ්ද?
[வெலந்த பொலட யன்ன பார கொஹெத]
சந்தைக்கு செல்லும் பாதை எங்கே
https://tamillifeskills1.blogspot.com




* කොහොමද?[கொஹொமத]எப்படி


නගරයට යන්නේ  කොහොමද
[நகgரயட யன்னே கொஹொமத]
நகரத்திற்கு செல்வது எப்படி

 කතාව ලියන්නේ කොහොමද
[கதாவ லியன்னே கொஹொமத]
கதை எழுதுவது எப்படி

ළඳට යන්නේ කොහොමද
[லிந்தட யன்னே கொஹொமத]
கிணற்றுக்கு செல்வது எப்படி

සත්තු වත්තට  යන්නේ කොහොමද
[சத்து வத்தட யன்னே கொஹொமத]
மிருகக்காட்சிசாலை செல்வது எப்படி

විදුහල්පති කාමරයට යන්නේ කොහොමද
[விதுகல்பதி காமரயடt யன்னே கொஹொமத]
அதிபர் அறைக்கு செல்வது எப்படி

ඔයාගේ ගෙදර වැඩ කරන්නේ කොහොමද
[ஒயாகேg கெgதdhர வெட கரன்னே கொஹொமத]
உங்களுடைய வீட்டு வேலை செய்வது எப்படி

මේ මල හදන්නේ කොහොමද
[மே மல ஹதன்னே கொஹொமத]
இந்த பூ செய்வது எப்படி

මේ සීනුව ගහන්නේ කොහොමද
[மே சீனுவ கgஹன்னே கொஹொமத]
இந்த மணியை அடிப்பது எப்படி

ඔයාට කොහොමද
[ஒயாடt கொஹொமத]
உங்களுக்கு எப்படி

තාත්තාට කොහොමද
தாத்தாடt கொஹொமத]
அப்பாவிற்கு எப்படி

වැඩ කොහොමද
[வெடd கொஹொமத]
வேலை எப்படி

ඔයාගේ සැප සනීප කොහොමද
[ஒயாகேg செப சனீப கொஹொமத]
உங்களுடைய சுகம் எப்படி

තැපැල් කන්තොරැවට යන්නේ කොහොමද
[தெபெல் கந்தொருவடt யன்னே கொஹொமத]
தபாலகத்திற்கு செல்வது எப்படி

පාසල් යන්නේ කොහොමද
[பாசல் யன்னே கொஹொமத]
பாடசாலை செல்வது  எப்படி

කවි ලියන්නේ කොහොමද
[கவி லியன்னே கொஹொமத]
கவிதை எழுதுவது எப்படி





* කවදාද[கவதாdhதdh]எப்பொழுது


පාසල පටන්ගන්නේ කවදාද
[பாசல படtன்கgன்னே கவதாdhதdh]
பாடசாலை தொடங்குவது எப்பொழுது

පාසල් නිවාඩු කවදාද
[பாசல் நிவாடு கவதாdhதdh]
பாடசாலை விடுமுறை எப்பொழுது

ඔයා එන්නේ කවදාද
[ஒயா என்னே கவதாdhதdh]
நீங்கள் வருவது எப்பொழுது

අයියා යන්නේ කවදාද
[அய்யா யன்னே கவதாdhதdh]
அண்ணா வருவது எப்பொழுது

ඔයාගේ උපන්දිනය කවදාද
[ஒயாகேg உபந்தினய கவதாdhதdh]
உங்களுடைய பிறந்த நாள் எப்பொழுது

https://tamillifeskills1.blogspot.com
ඔයා කවදාද ආවේ
[ஒயா கவதாdhதdh  ஆவே]
நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்

අපි පටන්ගන්නේ කවදාද
[அபிp படtன்கgன்னே கவதாத]
நாங்கள் தொடங்குவது எப்பொழுது

කවදාද ඔබ ගෙදරින් ගියේ
[கவதாdhதdh ஒபb கெgதdhரின் கிgயே]
எப்பொழுது நீ வீட்டிலிருந்து போனாய்

ඔයා කවදාද යන්නේ ගෙදරට
[ஒயா கவதாdhதdh யன்னே கெgதdhரடt]
நீங்கள் எப்பொழுது செல்கிறீகள் வீட்டிற்கு


பகுதி-07 அடுத்த வாரம் தொடரும்...

BY-INSTRUCTORS OF SINHALA-


Name- Shafna.
From- Srilanka (kandy)

Name- Shafrana
From- Srilanka (kekirawa)

Name- Kanesa
From- Srilanka (kinniya)


ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எம்மிடம் கேட்கவும்👇👇👇

Email:-tamillifeskills@gmail.com



🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
 👇👇👇

Friday, 16 December 2016

வெற்றி படி.

Model paper

GRADE-11

SUBJECT-TAMIL


O/L வினாத்தாள் தமிழ்


1) வேயின் திரண்டதோள் வேல்கண்ணாய்இங்கு வேய் என்பது?
1)மாலை             2. மூங்கில்    
3. வேய்தல்        4. பனை


2) ஊற்றுழித்தீர்வார் உறவு அல்;லர் உறவு என்பதன் எதிர்ப்பொருட்சொல்?
1. தோழாமை      2. அடிமை      
3. தீது                     4. பகை


3) மாரவேள்சிலை குனிக்க மயில் குனிக்கும் காலம் இங்கு மரவேள்என்பவன்?
1. முருகன்                  2. சிவன்    
3. நந்திவர்மன்         4. மன்மதன்

4) வெற்றி வேலோ உனது நயனங்கள் நயனங்கள் என்பதன் ஒத்தகருத்து சொல்?
1. புருவங்கள்     2. கண்கள்    
3. இதழ்கள்         4. பற்கள்

5) முல்லைக்குத் தேர்தந்தான் வள்ளல் பாரி வள்ளல் என்பதன் எதிர்கருத்துசொல்?
1. ஊதாரி            2. கொடையாளி    
3. உலோபி          4. ஆண்டி

6) யானையின் இளமை பெயர்?
1. குருளை           2. பிள்ளை  
3. பறள்                 4. போதகம்

7) பின்வருவனவற்றுள் ஆங்கில மொழி சொல்?
1. சாக்கு               2. பீங்கான்  
3. சீமெந்து          4. தகவல்

http://tamillifeskills1.blogspot.com
8) எக்கலையையும் நாம் துறைபோககற்க வேண்டும் துறைபோதல் என்ற மரபுதொடரின் கருத்து?
1. ஏமாற்றுக்காரன்  
 2 . பொய்இரக்கம்
 3. ஏட்டுகல்வியில்கற்கவேண்டும்      
 4. ஜயந்திரிபட கற்றல் வேண்டும்

9) ஆழுNஐவுழுசுஐNபு என்ற ஆங்கிலசொல்லின் தமிழ் வடிவம்?
1. கருத்தரங்கு
2. மதீப்பீடு
3. கண்காணித்தல்
4. தெளிவுபடுத்தல்

10) பத்து ஆண்டுகள் க~;டபட்டு படிபித்தது விழலுக்கிறைத்த நீர் போல ஆகிவிட்டதேஇங்குவிழலுக்கிறைத்தநீர்என்பது?
1. வீண்முயற்சி  
2. வயலுக்குநீர்போய்விட்டது
3. தொல்லைநீங்கியது
4. துயரத்தைவருவித்தது

11) எழுபத்தைந்தாவது விழாவைக் குறிக்கும் பெயர்?
1. பொன்விழா          2. பவளவிழா
3. அமுதவிழா            4. வைரவிழா

12) கற்றாளையின் உள்ளீடு எவ்வாறு அழைக்கப்படும்?
1.சதை          2. சுளை  
3. தாளை     4. சோறு

13) எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லக்கு ஒத்தகருத்துள்ள பழமொழியை தெரிவுசெய்க?
1. குடிக்கிறது கூழ் கொப்பளிப்பது பன்னீர்
2. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
3. ஆடமாட்டாதவள் அரங்கு பிழை என்றாளாம்
4. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
http://tamillifeskills1.blogspot.com

14) தொகாநிலைத் தொடராக அமைவது?
1. சேர,சோழ,பாண்டிய
2. நாடுநகர்
3. கலைகளும்மறைகளும்
4. வளர்மதி

15) அறத்தால் வருவதே இன்பம் இதில் வந்த ஏகார இடைச்சொல் தந்த பொருள்?
1. தேற்றம்                  2. வினா
3. எதிர்மறை             4. அசைநிலை

16) இடப்பொருளை உணர்த்தும் வேற்றுமை?
1. 2வேற்றுமை      2. 3வேற்றுமை    
3. 4வேற்றுமை      4. 6வேற்றுமை

17) வினையாக மட்டும் வரும்சொல்?
1. ஓடு         2. தேடு          
3. ஆடு         4. பாடு

18) இறந்தகாலத்தில் அமையக்கூடிய வினை?
1. அறி        2. கொடு    
3. நட           4. ஓடு

19) நீள்+நிலம் சேர்த்து எழுதும் போது?
1. நீண்டநிலம்      2. நீநீலம்  
3. நீநிலம்                4. நீணிலம்

20) பின்வருவனவற்றில் பொதுப்பெயராக அமைவது?
1. வாழை       2. நகரம்  
3. பொன்        4. கல்

21) கொடையாளி இது எவ்வகை பெயர்
1. கூட்டுப்பெயர்
2. ஆக்கப்பெயர்
3. தொழிற்பெயர்
4. வினையால் அணையும் பெயர்

22) கூட்டுப் பெயருக்கு உதாரணம்?
1. கொடையாளி     2. தொலைக்காட்சி 3. முயற்சி   4. பாடல்

23) வந்தான் இதில் வந்தகால இடைநிலை
1. கிறு                  2. ந்த்            
3. ப்வ்                   4. கின்று

24) செய்யாதே எவ்வகை வினைமுற்று
1. ஏவல் ஒருமை வினைமுற்று
2. ஏவல் பன்மை வினைமுற்று
3. எதிர்மறை ஏவல் ஒருமை வினைமுற்று
4. எதிர்மறை ஏவல் பன்மை வினைமுற்று

25) மரூஉ உதாரணமாக அமைவது?
1. கோயில்          2. கைதடி         3. ஜயர்                         4. சாம்பல்

26) கற்றான் என்ற சொல்லின் இடைநிலை?
1. கல்           2. ற்            3. ஆன்         4. ல்

27) இடைநிலையை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
1. 1          2. 3         3.6           4. 4

28) பின்வருவனவற்றுள் ஓர் எழுத்து சொல்?
1. மா              2. ஆடு      
3. நிலம்        4. ஆலயம்

29) அரசின் வருமானம் சேர்த்து வைக்கப்படும் இடம்?
1. கச்சேரி                    2. மாராயம்        
 3. திறைசேரி            4.கட்டியம்

30) திருக்குறளில் இல்லாத பொருள் வேறெங்கும் இல்லை இங்கு கையாளபட்ட அணி?
1. உவமைஅணி
2. உருவகஅணி
3. உயர்வுநவிற்சிஅணி
4. தற்குறிப்பேற்றஅணி

31) மின்சாரசபையின் நடவடிக்கைகளையும் எதிர்கால செயற்பாடுகளையும் பற்றி அதன்……………ஊழியர்களுக்கு விளக்கமளித்தார்?
1. தலைவர்                 2. தவிசாளர்
3. பேராளர்                  4. அத்தியட்சர்
http://tamillifeskills1.blogspot.com


32) இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தருக்கு அவர் ஆற்றிய சேவைக்காக மாதா மாதம்………வழங்கப்படும்?
1. ஓய்வூதியம்            2. மானியம்
3. வேதனம்                 4. சன்மானம்

33) அவன் கல்கி புத்தகத்தை வாங்குவதற்காக மாதாந்தம்………….செலுத்துகிறான்?
1. சேமிப்புபணத்தை  
2. கட்டுபணம்    
3. முற்பணத்தை  
4. சந்தாப்பணத்தை

34) நூல் ஒன்றிற்கு நூலசிரியர் ஒருவரால் எழுதப்படும் உரை?
1. அணிந்துரை     2. முன்னுரை    
3. பதிப்புரை          4. முகவுரை

35) தாயின் கருத்தை செவியுற்று
1. நடந்தானன்று
2. நடந்தானல்ல
3. நடந்தால்லன்
4. நடந்தேனல்லேன்

36) நாம் கற்கும் ஒவ்வொரு விடயமும்
1. எம்மாற் கிரகிக்கலாம்
2. எம்மாற் கிரகிக்கவேண்டும்
3. எம்மாற்கிரகிக்கப்படவேண்டியது
4. எம்மாற்கிரகிக்கப்பட வேண்டியவை

37) கவரிமான்கள் உயிர்நீப்பின் கணப் பொழுதும்
1. உயிர் வாழாது
2. உயிர் வாழமாட்டாது
3. உயிர்வாழா
4. உயிர்வாழும்

38) சரியான வாக்கியத்தை தெரிவு செய்க?
1. பல்கலைக்கழகப்பட்ட மலிப்பு விழா
2. பாடசாலை நாலை இல்லை
3. திணைக்களகம் இன்றுதிறந்து வைக்கபட்டது
4. தம்பி இங்கே வா

39) எழுத்து பிழையான வாக்கியத்தை தெரிவு செய்க?
1. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது
2. நவநீதம்பிள்ளை  இன்று யாழ் வருகிறார்
3. நாளைவா பாடசாலைக்கு
4. மே தின கூட்டத்திற்கு மக்கள் சமூகமழித்திருந்தார்கள்

40) வாக்கியத்தை ஒழுங்கமைக்குக.
அ. மொழி இதற்கு விதிவிலக்கல்ல.
ஆ. மாற்றமும் வளர்ச்சியும் ஒரு நிகழ்ச்சியின் இரு அம்சங்களாகும்
இ. அதனால் தொடர்ந்து வளர்ச்சியடைகின்றன
ஈ. வாழும் மொழிகளெல்லாம் இடையுறாது மாற்றத்துக்கு உள்ளாகின்றது.
உ. மாற்றாத எதுவும் வளச்சியடைவதில்லை
1. ஆ,இ,ஈ,அ,உ
2. உ,ஈ,இ,அ,ஆ
3. உ,அ,ஈ,ஆ,இ
4. அ,ஈ,ஆ,இ,உ




🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
 👇👇👇
Download now

கவிதை தொகுப்புகள்.

😔இரத்தம் சிந்தும் சிறிய...😔



சிதறிய உடல்களும் 
சிந்திய இரத்தமும் 
இடிந்த கட்டடமுமாய்
இதயமில்லா அரக்கர்களின் 
ஈனச் செயல்களால் 
இறந்து கொண்டிருக்கிறது 
இஸ்லாமிய சமூகம் 
அலெப்போவில் இன்று...

இருந்தும் கலங்காதே
என் சகோதரி
ஜிஹாத் எனும் புண்ணிய 
அமலில் உன் உயிர்
சிந்தும் வரம் பெற்றாய்
அதற்காய் இன்பம்
கொள்..

நாய்கள் எச்சிலுக்காய்
அழைவது போல்
சில மனித நாய்கள் 
உன் உடலை உண்டிருக்கும்
இருந்தும் கலங்காதே
சகோதரி..

அழுகும் உடல் அது,
நிலையான தேகம்
சுவர்கத்தில் நீ கொள்வாய்

கர்ப்ப பையில் கலங்காமல்
காத்து
முத்தாய் பெற்ற செல்வம்
கண் முன்னே கசக்கி
எறியப்படுவதற்காய்
கலங்காதே 
என் சகோதரி..

நாளை ஜன்னதில்
வகை வகை இன்பம் கொண்டு உனக்காய்
காத்திருக்கும்
உன் கண்மணிகள்...

தீக்கும் தீயும் நொந்து கொண்டே
தீக்கும் முகம்மதின்
உம்மத் நிலை கண்டு..

துளைக்கும் குண்டும்
தவ்பாச் செய்து கொள்ளும்
இறைத் தண்டனையில்
இருந்து தப்புவதற்கு...

கலங்காதே சகோதரி
மூவேளை உண்டு
மெத்தையில் புரண்டு
சொகுசு வாழ்க்கை
வாழும்
உன் சொந்தங்கள் அடையா
சுவர்கம் நீ பெறுவாய்...

கலங்காதே சகோதரி...

*புத்தளத்துக் கவி*
   ✍🏽✍🏽 *நிஸ்னி*✍🏽✍🏽

by- நிஸ்னியா.
Frm- கொத்தாந்தீவு புத்தளம் இலங்கை


உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்

👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை

Email- tamillifeskills@gmail.com

வெற்றிப்படி

ஒத்தகருத்துச் சொற்கள் - ஆ




(1)ஆ - பசு
(2)ஆகம் - உடல்
(3)ஆகம் -நெஞ்சு
(4)ஆகாரம் - உறைவிடம்
(5)ஆகாரம் - சுரங்கம்
(6)ஆகவம் - போர்
(7)ஆகவம் - சீலை
(8)ஆகாரம் - உணவு
(9)ஆக்கினை - துன்பம்
(10)ஆக்கினை - கட்டளை

(11)ஆசனம் - இருக்கை
(12)ஆசாடபூதி - மோசக்காரன்
(13)ஆசாரம் - ஒழுக்கம்
(14)ஆசி - வாழ்த்து
(15)ஆசீர்வாதம் - வாழ்த்து
(16)ஆடகம் - பொன்
(17)ஆடவன் - ஆண்மகன்
(18)ஆடை - சீலை
(19)ஆடை - பால் ஏடு
(20)ஆடை -உடை
http://tamillifeskills1.blogspot.com

(21)ஆட்கொள்ளல் - அடிமையாதல்
(22)ஆட்சேபம் - மறுப்பு
(23)ஆணவம் - செருக்கு
(24 )ஆணித்தரம் - உறுதி
(25)ஆணை - சத்தியம்
(26)ஆண்டகை - சிறந்தோன்
(27)ஆண்டு - வருடம்
(28)ஆதரவு - அன்பு
(29)ஆதவன் - சூரியன்
(30)ஆதாரம் - பற்றுக்கோடு

(31)ஆதி - தொடக்கம்
(32)ஆதிகாலம் -முற்காலம்
(33)ஆதிபத்தியம் - அதிகாரம்
(34)ஆதலன் - தரித்திரன்
(35)ஆநிரை - பசுக்கூட்டம்
(36)ஆபத்து - இடையூறு
(37)ஆபரணம் - அணிகலம்
(38)ஆமோதித்தல் - உடன்படல்
(39)ஆயன் - இடையன்
(40)ஆயுள் - வாழ்நாள்

(41)ஆரணம் - வேதம்
(42)ஆரணியம் - காடு
(43)ஆரம் - மாலை
(44)ஆரம்பம் - தொடக்கம்
(45)ஆராய்ச்சி - சோதனை
(46)ஆரவாரம் - பேரொலி
(47)ஆராதனை - வணக்கம்
(48)ஆரோக்கியம் - நோயின்மை
(49)ஆர்வம் - விருப்பம்
(50)ஆர்வலன் - அன்பன்

http://tamillifeskills1.blogspot.com
(51)ஆலம் - விடம்
(52)ஆலவட்டம் - விசிறி
(53)ஆலை - தொழிற்சாலை
(54)ஆவணம் - பதிவேடு 
(55)ஆவி - உயிர்
(56)ஆவேசம் - கன்னதம்
(57)ஆவேசம் - வெறி
(58)ஆழி - கடல்
(59)ஆழி - மோதிரம்
(60)ஆளி - சிங்கம்

(61)ஆற்றல் - வலிமை
(62)ஆற்றாமை -பொறுக்க இயலாமை
(63)ஆற்றுப்படுத்தல் - வழிப்படுத்தல்
(64)ஆனந்தம் - மகிழ்ச்சி
(65)ஆனைப்பந்தி - யானைக்கூட்டம்
(66)ஆன்மா - உயிர்
(67)ஆஸ்தி - சொத்து
(68)ஆகாய விமானம் – வானூர்தி 
(69)ஆகாரம் – உணவு,
(70)ஆகாரம் – உண்டி 

(71)ஆசனம் - இருக்கை 
(72)ஆசித்தல் – விரும்புதல் 
(73)ஆசிர்வாதம் – வாழ்த்து 
(74)ஆச்சரியம் – வியப்பு 
(75)ஆச்சாரம் - ஒழுக்கம் 
(76)ஆடம்பரம் - பகட்டு 
(77)ஆடி - கடகம் 
(78)ஆட்சேபனை – மறுப்பு,
(79)ஆட்சேபனை – தடை
(80)ஆதங்கம் - மனக்கவலை 

(81)ஆதரவு – அரவணைப்பு,
(82)ஆதரவு – களைகண்
(83)ஆதரி – தாங்கு,
(84)ஆதரி – அரவணை
(85)ஆதாரம் - நிலைக்களம் 
(86)ஆத்திசம் - நம்புமதம் 
(87)ஆவுஸ்திரேலியா - தென்கண்டம் 
(88)ஆபத்து – இடுக்கண்,
(89)ஆபத்து – இடையூறு
(90)ஆபரணம்- அணிகலன் 

(91)ஆப்பிள் – அரத்தி 
(92)ஆமோதி - வழிமொழி 
(93)ஆயத்தம் – அணியம் 
(94)ஆயுள் – வாழ்நாள் 
(95)ஆரம்பம் – தொடக்கம் 
(96)ஆரோகணம் – ஆரோசை 
(97)ஆரோக்கியம் - உடல்நலம் 
(98)ஆலாபனை – ஆளத்தி 
(99)ஆலோசனை - கருத்து 

(100)ஆவணி (மாதம்) – மடங்கல் 
http://tamillifeskills1.blogspot.com
(101)ஆனந்தம் – மகிழ்ச்சி,
(102)ஆனந்தம் – களிப்பு 
(103)ஆனி (மாதம்) - ஆடவை 
(104)ஆன்மா (ஆத்மா) – ஆதன் 
(105)ஆஸ்தி – செல்வம் 
(106)ஆட்சேபி  - தடு 
(107)ஆணகம் - சுரை
(108)ஆனகம் - துந்துபி
(109)ஆணம் - பற்றுக்கோடு
(110)ஆனம் - தெப்பம், 

(111)ஆனம் -கள்
(112)ஆணி - எழுத்தாணி, 
 (113)ஆணி -இரும்பாணி
 (114)ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
 (115)ஆணேறு -ஆண்மகன்
 (116)ஆனேறு - காளை, 
 (117)ஆனேறு - எருது
 (118)ஆண் - ஆடவன்
 (119)ஆன் - பசு
 (120)ஆணை - கட்டளை, 
 (121)ஆணை -ஆட்சி
 (122)ஆனை - யானை



🔃மேலும் பல............ இது போன்ற மேலும் பல பயனுள்ள குறிப்புகளை அறிய எங்களது Tamil life Skills Android Application - னை download செய்து Install பண்ணுங்கள் கீழே உள்ள லிங்கினைக் கிளிக் செய்யுங்கள்.
 👇👇👇
Download now

Thursday, 15 December 2016

அழகு குறிப்புக்கள்.

ஆண்கள் தங்கள் அழகை வெளிக்­காட்ட செய்ய வேண்டியது



ஆண்கள் தங்கள் அழகை வெளிக்­காட்ட, உடல் கட்­ட­மைப்பை மெரு­கேற்ற எண்­ணு­வார்கள்.

அத­னையே பெண்­களும் ஆண்­க­ளிடம் விரும்­பு­கி­றார்கள். அதனால் ஆண்கள் உடம்பை ஏற்ற மணிக்­க­ணக்கில் ஜிம்மில் நேரத்தை செல­வி­டு­கி­றார்கள்.


நல்ல உடல்­கட்டு வேண்டும் என்று எண்­ணு­ப­வர்கள் எப்­போதும் தீவிர உடற்­ப­யிற்­சியில் ஈடு­பட்டால் மட்டும் போதாது. உடல் கட்­ட­மைப்பில் உண்ணும் உணவும் முக்­கிய இடம் பிடிக்­கி­றது.


ஆகவே போதிய உடற்­ப­யிற்­சி­யுடன், சரி­யான மற்றும் ஆரோக்­கி­ய­மான உணவை உட்­கொள்­வது மிகவும் அவ­சியம். உடற்­ப­யிற்­சிக்கு ஈடாக ஆரோக்­கி­ய­மான உணவும் உடல் கட்­ட­மைப்பை மெரு­கேற்ற உத­வு­கி­றது.
https://tamillifeskills1.blogspot.com


ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் கஞ்­சியில் அதிக நார்ச்­சத்து உள்­ளதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும்  சர்க்­கரை நோயை குறைக்கும். மற்றும் கொழுப்பு தேங்­கு­தலை குறைக்­கி­றது.


முட்டை

உடல் கட்­ட­மைப்பை ஏற்ற நினைப்­ப­வர்கள் கண்­டிப்­பாக முட்­டை­களை சாப்­பிட வேண்டும். இதில் விற்­றமின் ஏ, டி, ஈ, கோலைன், நல்ல கொழுப்பு மற்றும் புரதச் சத்­துக்கள் அதிக அளவில் உள்­ளன.


பாலா­டைக்­கட்டி

உடல் கட்­ட­மைப்பை ஏற்ற விரும்­பு­ப­வர்­க­ளுக்கு பாலா­டைக்­கட்டி ஒரு வரப்­பி­ர­சா­தமே. இதில் பால் மற்றும் மோரின் புரதம் அதிக அளவில் உள்­ளது.


வேர்க்­க­டலை வெண்ணெய்

புர­தச்­சத்து, விற்­ற­மின்கள், மெக்­னீ­சியம் மற்றும் நார்ச்­சத்­து­போன்­றவை நிறைந்­தது தான் நிலக்­க­டலை வெண்ணெய். இதை அள­வாக எடுத்துக் கொண்டால், இதய தசை­களை மேம்­ப­டுத்தி, கொழுப்பை குறைக்க உதவும்.
https://tamillifeskills1.blogspot.com


நண்டு

நண்டு, எலும்பின் ஆரோக்­கி­யத்­திற்கு பெரிதும் உறு­து­ணை­யாக இருக்கும். இதில் ஜிங்க் மற்றும் தேவை­யான ஆக்­ஸி­ஜ­னேற்றத் தடுப்­பான்கள் நிறைந்­துள்­ளதால், இது தசைக்கு பலத்­தையும், உடலில் எதிர்ப்பு சக்­தி­யையும் அதி­க­ரிக்கும்.


வாழைப்­பழம்

உடலை ஏற்­று­ப­வர்கள் பலரும் அதி­கப்­ப­டி­யாக சாப்­பி­டு­வது வாழைப்­ப­ழத்தை தான். இதில் ட்ரிப்­டோபைன் நிறைந்­தி­ருப்­பதால், இது செரோ­டோனின் உற்­பத்­திக்கு உறு­து­ணை­யாக இருந்து, நரம்­பு­களை சாந்­தப்­ப­டுத்தும். மேலும் இதில் உணவு கட்­டுப்­பாட்­டுக்கு உறு­து­ணை­யாக நிற்கும் மெக்­னீ­சியம் மற்றும் கல்­சியம் அதி­க­மாக இருப்­பதால், எலும்பின் ஆரோக்­கி­யத்­திற்கு பக்க பல­மாக இருக்கும்.


மிளகாய்

உணவில் மிளகாய் சேர்ப்­ப­தனால், உடலில் நோய்த்­தொற்­றுகள் ஏற்­ப­டு­வதை இது தடுக்கும். உடல் எடையை வேக­மாக குறைக்க உதவும்.
https://tamillifeskills1.blogspot.com


சர்க்­க­ரை­வள்ளி கிழங்கு /
வற்­றாளைக் கிழங்கு

சர்க்­க­ரை­வள்ளி கிழங்­கு­களில் கார்­போ­வைரேட் அதிகம் நிறைந்து உள்­ளது. இதி­லுள்ள சர்க்­கரை ஆக்­கத்­திறன் மற்றும் தாங்கு திறனை அதி­க­ரிக்க செய்யும்.


அத்­திப்­பழம்

இரும்பு போல உடலை வளர்க்க விரும்­பு­ப­வர்கள் கண்­டிப்­பாக அத்­திப்­ப­ழத்தை சாப்­பிட வேண்டும். அத்­திப்­ப­ழத்தில் தேவை­யான கனி­மச்­சத்­துக்கள் நிறைந்­தி­ருப்­பதால், உடலில் உள்ள அமிலம் மற்றும் காரத் தின் (Alkali) அளவை சம­நி­லை­யோடு வைத் துக் கொள்­ளலாம்.


காளான்

காளான் தசை வளர்ச்­சிக்கு பெரிதும் உறு­து­ணை­யாக விளங்­கு­கி­றது.


இறைச்சி

ஆட்டு இறைச்­சியில் அதி­க­மான அளவில் விலங்­கின புரதம் இருக்­கி­றது. அதனால்  தசை வளர்ச்­சிக்கு பெரிதும் உத­வு­கி­றது.
https://tamillifeskills1.blogspot.com

பருப்பு வகைகள்


சரி­யான உடல் கட்­ட­மைப்பு வேண்­டு­மானால், பருப்பு வகை­களை கண்­டிப்­பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் வழ­மை­யான புர­தச்­சத்து, அதி­முக்­கிய விற்றமின்கள் மற்றும் கனி­மச்­சத்­துக்கள் உள்­ளதால், தசை­களின் ஆரோக்­கியம் நன்­றாக இருக்கும்.


சால்மன் மீன்

சால்மன் மீனில் அதிக அளவு மோனோ அன்­சாச்­சு­ரேடட் கொழுப்பு அமி­லங்கள் அடங்­கி­யுள்­ளது. மேலும் இதில் அலர்ச்சியை தடுக்கும் குணங்கள் அடங்­கி­யி­ருப்­பதால், உடற்­ப­யிற்சி செய்த பின் சாப்­பி­டு­வ­தற்கு சிறந்த உண­வாகும்.

Wednesday, 14 December 2016

கவிதை தொகுப்புகள்.

என் இனிக்கும் 

 பள்ளி நாட்கள்..




புத்தகப்பை சுமந்து தாயின் பின்னே ஒழிந்து தண்ணீர் போத்தலும் கையுமாய்
பாடசாலையினுள்
நுழைந்த அந்த முதல்
அனுபவம் ஞாபகம்
வருகின்றது

பூ மலையில் நளைந்து
புது நண்பர்களை சந்தித்து புன் முருவலுடன் அரவணைக்கும்
ஆசிரியையை பார்த்து
மகிழ்ந்த அந்த முதல்
அனுபவம் ஞாபகம்
வாருகின்றது

தாயை பிரிய முடியாமல் கண்ணீர்
வாடித்துக் கொண்டு
தாயின் பின்னே ஓடிச்சென்ற போது பல  கைகள் வந்து என் கண்ணீரை துடைத்த அனுபவம் ஞாபகம்
வருகின்றனது

பருவம் புரியாத வயதில் தாயின் மறு பிறவியாய் இருந்து
என்னை காத்த ஆசிரியையின் முகமும் என்னுடன் சேட்டைகள் செய்து மகிழும் என் நண்பர்களின் முகங்களும் ஞாபகம்
வருகின்றது

மாலை வகுப்பு முடிந்ததும் பெய்த அடை மலையில் நளைந்து வீடு சென்ற
போது பாசப் பார்வை வீசி பேசிய தாயின்
வார்தைகள் ஞாபகம் வருகின்றது பாராட்டுகளுக்கும் மகிழ்வுகளுக்கு ஆசைபடும் அந்த இளமை பருவத்தில் நண்பர்களோடு சேட்டை செய்த நினைவுகள் ஞாபகம்
வருகின்றது

சோதனைகள் வந்து என்னை சந்திக்கும்  போது
அதன் தீர்வுகளாய் என்
முன் ஜொலிக்கும்
நண்பர்களின் முகம் ஞாபகம் வருகின்றது

நான் சாதனைகள் படைக்கம் போது என் சந்தோசங்களோடு பறந்து என்னை பாராட்டி
என் திறமைகளுக்கு பட்டை தீட்டிய என்
தோழர்களின் முகம்  ஞாபகம் வருகின்றது

என்னுள் உறங்கி கொண்டிருந்த என் திறமைகளை தட்டி எழுப்பி ஆர்வமூட்டிய
என் ஆசின்களின் முகம் ஞாபகம் வருகின்றது

இத்தனை
அனுபவங்களையும்
நினைத்து நண்பர்களோடு கூடி
அழும் என் மனதை என்னால்  ஆருதல்
படுத்த முடியவில்லையே

இந்த இனிமையான
நினைவுகளை நினைத்து கண்ணீர் சிந்தும் என் கண்களுக்கு சமாதானக் கொடி காட்ட என் மனம்
தயங்குகின்றது

பலர் கசப்பென்று
நினைத்துக் கொள்ளும் இந்த பள்ளி நாட்களில் இவ்வளவு இனிமைகள் இருக்கின்றதா என என் மனம் வியக்கின்றது

என பாடசாலை
அரவணைக்கும்  ஆசான்கள் அன்பு மிகு நண்பர்கள் இவற்றை
எல்லாம் பிரிந்து செல்லும் நாள் இதுவா
என என் மனம் தவிக்கின்றது

கடந்து சென்ற நாட்களை வாழ்வதற்கு இறைவன் ஒரு வரம்
தர மாட்டானா என என்
மனம் ஏங்குகின்றது

நான் எங்கு சென்றாலும் என்
பள்ளி நாட்களை என்
மனம் ஒரு போதும்
மறக்காது

I miss my school life


by- சஸ்னா பேகம்.
Frm- கொத்தாந்தீவு புத்தளம் இலங்கை


உங்கள் கவிதையை எமக்கு அனுப்பி வையுங்கள்

👉உங்கள் பெயர்
👉உங்கள் முகவரி
👉உங்கள் கவிதை

Email- tamillifeskills@gmail.com